*சூரியன் 💥பற்றி பாகவத்தில் கூறப்படும் விரிவான தகவல்கள்*
🍀 சூரிய நாராயணர் பச்சைநிறமுடைய 7 குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருகிறார். அந்த தேருக்கு ஒரே ஒரு சக்கரம் தான் உண்டு. 🍀 அந்த ஏழு குதிரைகளின் பெயர்கள் *காயத்ரி, ப்ருஹ்தி, உஷ்ணிக், ஜகதி, திருஷ்டுப், அனுஷ்டுப், பக்த்தி* 🍀 இந்தக் குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டுபவரின் பெயர் (தேர் சாரதி) அருணன். 🍀 சூரியனின் ரதம் பொன் மயமானது. அந்த ரதத்துக்கு 5 ஆரங்களும் 3 நாபிகளும் உண்டு. 🍀 3 நாபிகளும் 3 காலத்தை குறிக்கும். சூரிய சக்கரத்திலுள்ள 6 கட்டைகளும், 6 ருதுக்களை குறிக்கின்றன. சக்கரத்தின் மேல் பாகமும், கீழ்பாகமும் *உத்திராயணம், தட்சிணாயத்தை* குறிக்கிறது. சூரியபகவான் தன்னுடைய தேரில் 4 பட்டணங்களை சுற்றி வந்து, காலை, மதியம், மாலை, அர்த்தராத்திரி என்ற காலங்களை உண்டாக்குகிறார். 🍀 சூரியன் ஒருவராக இருந்தாலும் 12ராசிகளில் சஞ்சரிப்பதன் காரணமாக, *பன்னிரு சூரியர்களாக பார்க்கப்படுகிறார்* அவர்கள்👇👇👇 1.சித்திரை மாதம் - தாதா 2.வைகாசி மாதம் - அரியமா 3.ஆனி மாதம் - மித்திரன் 4.ஆடி மாதம் - வருணன் 5.ஆவணி மாதம் - இந்திரன் 6.புரட்டாதி மாதம் - விஷ்வான் 7.ஐப்பசி மாதம் - பூஷா 8.கார்த்திகை மாதம் - விதாதா 9.மார்கழி மாதம் - அம்ஷன் 10.தை மாதம் - பஹன் 11.மாசி மாதம் - துவஷ்டா 12.பங்குனி மாதம் - விஷ்ணு 🍀 சூரியனின் தேரின் நீளம் 18000 யோஜனை தூரம் ( 1 யோஜனை - 15 km :18000 ×15 ) 🍀 சூரியனின் தேரை ஓட்டும் கடிவாளமாக (கயிறு) சர்ப்பங்களே இருக்கும்.இவை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சர்ப்பமாக இருக்கும். அவையாவன 👇👇👇 1.சித்திரை மாதம் - வாசுகி 2.வைகாசி மாதம் - கம்ஷவீரன் 3.ஆனி மாதம் - தக்ஷகன் 4.ஆடி மாதம் - நாகன் 5.ஆவணி மாதம் - ஏலாபுத்திரன் 6.புரட்டாதி மாதம் - ஷங்கபாலன் 7.ஐப்பசி மாதம் - தனஞ்ஜெயன் 8.கார்த்திகை மாதம் - ஐராவதம் 9.மார்கழி மாதம் - மஹாபத்மன் 10.தை மாதம் - கார்க்கோடகன் 11.மாசி மாதம் - கம்பலன் 12.பங்குனி மாதம் - அஸ்வதரன் 🍀 சூரியனின் தேரை செலுத்தும் போது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ரஷி வேதம் ஓதிக்கொண்டே வருவார். அவர்கள் 👇👇👇 1.சித்திரை மாதம் - புலஸ்த்தியர் 2.வைகாசி மாதம் - புலகர் 3.ஆனி மாதம் - அத்ரி 4.ஆடி மாதம் - வஷிஷ்டர் 5.ஆவணி மாதம் - அங்கிரஸ் 6.புரட்டாதி மாதம் - பிருகு 7.ஐப்பசி மாதம் - கௌதமர் 8.கார்த்திகை மாதம் - பரத்வாஜர் 9.மார்கழி மாதம் - கஷியப்பர் 10.தை மாதம் - கிரது(தி) 11.மாசி மாதம் - யமதக்னி 12.பங்குனி மாதம் - விஷ்வாமித்ரர் 🍀 இவ்வாறு வேதம் ஓதும் போது ஆதித்தியனை ஸ்தோத்திரம் பண்ணவதற்கு ஓவ்வொரு கந்தர்வன் இருப்பானாம். அவர்கள் 👇👇👇 1.சித்திரை மாதம் - தும்புரு 2.வைகாசி மாதம் -நாரதர் 3.ஆனி மாதம் - ஹாஹா 4.ஆடி மாதம் - ஹூ ஹூ 5.ஆவணி மாதம் - விஷ்வாவஸு 6.புரட்டாதி மாதம் - உக்கிரசேனன் 7.ஐப்பசி மாதம் - வசுருஷி 8.கார்த்திகை மாதம் - விஸ்வஸு 9.மார்கழி மாதம் - சித்திரசேனன் 10.தை மாதம் - ஊர்னாயூ 11.மாசி மாதம் - திருதராஸ்டிரன் 12.பங்குனி மாதம் - சூரியவக்ஷன் 🍀 அது மட்டுமல்லாது ஒவ்வொரு மாதமும் தேரின் முன் ஒவ்வொரு அப்ஷரஸ் ஸ்த்ரீ நடனமாடிக்கொண்டு வருவாளாம். அவர்கள் 👇👇👇 1.சித்திரை மாதம் - கிருஸ்தலா 2.வைகாசி மாதம் - புஞ்சிகஸதலா 3.ஆனி மாதம் - மேனகா 4.ஆடி மாதம் - ஷஹஜன்வா 5.ஆவணி மாதம் - பிரம்லோஹா 6.புரட்டாதி மாதம் - அனும்லோஷா 7.ஐப்பசி மாதம் - க்ருதாஷி 8.கார்த்திகை மாதம் - விஷ்வாஷி 9.மார்கழி மாதம் - ஊர்வசி 10.தை மாதம் - பூர்வஷித்தி 11.மாசி மாதம் - திலோத்தமா 12.பங்குனி மாதம் - ரம்பா 🍀 இவை தவிர ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு யக்ஷன் இருப்பானாம், இவனே கடிவாளத்தை குதிரையோடு சேர்த்து கட்டி அருணனிடம் கொடுப்பானாம். அருணன் எப்பொழுதெல்லாம் கடிவாளத்த கீழே போடுகிறானோ அப்பொழுதெல்லாம் கடிவாளத்தை எடுத்து கொடுப்பதே இவனின் வேலையாம். அவர்கள் 👇👇👇 1.சித்திரை மாதம் - ரதவிருத் 2.வைகாசி மாதம் - ரதவ்யஸ 3.ஆனி மாதம் - ரதஸ்வன் 4.ஆடி மாதம் - ரதஸித்ரன் 5.ஆவணி மாதம் - சுரோதன் 6.புரட்டாதி மாதம் - அபூர்ணன் 7.ஐப்பசி மாதம் - சுஷேனன் 8.கார்த்திகை மாதம் - ஷேனஜிது 9.மார்கழி மாதம் - தார்ஸீயன் 10.தை மாதம் - அரிஷ்டநேமி 11.மாசி மாதம் - ருதஜிது 12.பங்குனி மாதம் - சத்தியஜிது 🍀 இவர்களோடு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராட்சஷனும் தேரின் பின் இருப்பானாம். யாராலேயேனும் தேருக்கு ஆபத்து நேராமலிருக்க காப்பதற்கு வந்து கொண்டிருப்பதே இவன் வேலையாம். அவர்கள் 👇👇👇 1.சித்திரை மாதம் - ஹேதீ 2.வைகாசி மாதம் - பிரஹேதீ 3.ஆனி மாதம் - பௌருசேயன் 4.ஆடி மாதம் - ரதன் 5.ஆவணி மாதம் - ஷர்பி 6.புரட்டாதி மாதம் - வியாக்ரன் 7.ஐப்பசி மாதம் - வாதன் 8.கார்த்திகை மாதம் - ஆபன் 9.மார்கழி மாதம் - வித்யுத் 10.தை மாதம் - ஸ்பூர்ஜன் 11.மாசி மாதம் - ப்ரமோபேதன் 12.பங்குனி மாதம் - யக்ஞோபேதம் 🌺சூரியனோடு சேர்ந்தவை திசை - கிழக்கு அதிதேவதை - அக்னி, சிவன் ஜாதி - ஷத்திரியன் நிறம் - சிவப்பு தானியம் - கோதுமை மலர் - செந்தாமரை ஆடை - சிவப்பு நிற ஆடை ரத்தினம் - மாணிக்கம் நிவேதனம் - சர்க்கரைப் பொங்கல் விருட்சம் - வெள்ளெருக்கு உலோகம் - தாமிரம் இனம் - ஆண் சுவை - காரம் மணம் - சந்தன வாசனை சூரியனுக்குரிய திதி - சப்தமி கிழமை - ஞாயிறு -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddt4VwZt1UOCL3pJMyxV_Rqzkf_zg6ymg-b6LY5C725qKw%40mail.gmail.com.
