Yahoo Mail: Search, organise, conquer 
 
   ----- Forwarded message ----- From: "Ram Ramakrishnan" <[email protected]> 
To: "[email protected]" <[email protected]> Cc:  
Sent: Fri, 7 Nov 2025 at 8:32 am Subject: Re: கவியரங்கம் 61  கவியரங்கம் -  61
 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

 

தொடக்கநாள்  7- 11- 2025

 

கவியரங்கத் தலைமைக் கவிதை:




 

இறைவணக்கம்




வந்தவினை தீர்த்தருளும் தொந்தி கணநாதா

சிந்தை நிறைத்தவென் சிங்காரா - சந்த

வசந்தக் கவியரங்கம் மாண்புறச்செய் தற்கே 

இசைந்தருளி வந்திடுவா யிங்கு.

 

வெள்ளிவிழா ஆண்டில் கவியரங்க முதற்செய்தியும்சந்த வசந்தக் குழுமத் தலைவர்க்குப் 
பாராட்டும்

 

வெள்ளிவிழா வாண்டில் விளக்கொளிபோற் சிந்தனைகள்

அள்ளித் தரவந்த ஆன்றோரே – எள்ளுரையைத்

தள்ளிடுவோம் முள்ளைப்போல் தைத்தல் தவிர்த்திடின்



உள்ள முவக்கு முயர்வு.

 

எள்ளுரை : இகழ்ச்சியுரை

 

கவிவேழம் தோற்றிய கண்கவருஞ் சோலை

புவிபோற்றி நிற்கின்ற பொற்பு., – தவமாய்த்

தமிழ்ப்பணி செய்தாரின் தாளாண்மை ஏத்து(ம்)



இமிழ்சந்த மீடில்லா வின்பு

 

தாளாண்மை - ஊக்கம்

இமிழ் – இனிமை, இசை

 

அவையடக்கம்

 

பொருளார்ந்த பாப்புனையப் புஞ்சும் கவிகாள்

சிரந்தாழ வந்தடைந்தேன் தேடி – சரமதனில்

நாராகி நல்கிய நற்கவிப் பூக்களைச்

சீராகக் கோத்தளிப்பேன் தேர்ந்து.

 

புஞ்சும் – ஒன்று கூடும்

 

இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்

நேரிசைக் கலிவெண்பா

 

எந்தையும் தாயு மிருந்து சிறந்ததந்நாள்

வந்துதித்த நாள்தொடங்கி வாழ்வினிக்கச் – சிந்தைமகிழ்

தெள்ளிய செய்கையில் சீருற்றோம். அந்நாளில்

அள்ளித் கொடுத்த அறிவுரைகள் – உள்ளத்தி(ல்)

ஊன்றி யியல்புட னொட்டிக் கலந்தன.

சான்றொன்று கண்டோம் சமத்துவத்தில். – தோன்றிய

வள்ளுவர் சாற்றினார் "உள்ளவருள் ஒண்பொருளே"

ஒள்ளிய பாரதி ஓதியதே., – விள்ளா

அறிவின் விரிவதனி லார்வ முடனாய்ச்

செறிவை யடைந்துலக ணைத்தார் – உறவும்                        10

செழித்தது., செய்திறனில் சேவை மனத்தில்

விழிப்புணர்வு மேவ விரிந்து – பழுத்தநற்

பண்பில் பகிர்ந்துண்ணும் பாசம் வளர்ந்தது.,

மண்ணில் மனிதநேயம் மாண்பினில் – விண்ணுறும்.,

ஈதலின் உண்டோ இனிதென்றார்., இத்துடன்

யாதுமெம் ஊரே யெனச்சொன்னார்., – ஓதிய

முன்னோரின் காலம் முடிந்த துணருங்கால்

சின்னேரம் நின்றிங்குச் சிந்திப்போம்., – பொன்னான

அக்காலம் இன்றுளதோ? அன்பே உலகணைக்கும்.,

தக்காத பேச்சுத் தகவொழிக்கும்., – எக்காளம்                         20     

அன்பொழிக்கும்., சிந்தனையின் ஆழத்தில் செல்வோமா?

முன்பிருந்த நிம்மதி சென்றதெங்கு? – நன்றெனவாய்

நெஞ்சில் நினைவலைகள் நீந்திடும்., நீரோடை

கொஞ்சிக் குலவிடும் வாடையுடன்., – பஞ்சாய்ப்

பறந்திடும் புள்ளினங்கள்., பச்சைநிறக் காடு.,

உறவில் களித்தநல் லுள்ளம்., – அறமோங்க

ஓமச் சடங்குகள்., ஊர்கூடித் தேரிழுத்தல்.,

பூமியில் சீரான தட்பவெப்பம்., – சேமமுற

மெய்ஞ்ஞானம் போற்றிய மேன்மை., அறிவிற்கு

விஞ்ஞான மஃதளித்த வேட்கையின் – விஞ்சுதல்.,                     30       

எத்துணை நற்பயனும் என்றோர்நாள் முற்றுமன்றோ?

அத்தனின் சித்தத்தை ஆரறிவார்? – இத்தலத்தில்

மூண்டவிருள் காரணத்தை மீண்டொருகால் சிந்திப்போம்,

காண்கின்ற நாச விளைவுகளின் – பூண்டொழிக்க.,

நீர்நிலைகள் காய்ந்தவிடம் நீண்ட தொழிற்கூடம்.,

ஆர்த்திடு முற்பத்தி யச்சுறுத்தல்., – ஊரழித்துக்

கோடிகளைச் சேர்த்துக் குவிக்கச் சதித்திட்டம்.,

மூடிம றைத்தவூழல் வித்திட – வாடிடும்

மக்கள்., வளர்ச்சியென வான்முட்டும் கட்டடங்கள்.,     

பக்கத்தில் குப்பைசூழ்க் கோலங்கள்., – சிக்கலுறச்                      40         
    

சூழ்நிலையின் சீர்கேட்டால் சோதனை., வானிலையால்        

ஆழ்கடலின் பேரலைகள் மூழ்கடித்தல்., – வீழ்துயரில்

அண்டத்தில் வெப்பமயம்., மண்டும் சுழற்காற்று.,

தண்மைசூழ்க் கோடு பனியவிழ்க்க – மண்மூழ்கல்.,

சீற்றத்தில் பூமித்தாய் செய்தவற்றைச் சிந்திப்போம்.

ஆற்றொணாத் தீச்செயலில் ஆயுதங்கள்., – தூற்றுவகை

வாணிகத்தில் தீராத வாஞ்சை வளர்த்தது..

நாணமற்று வீசும் நெகிழிகள்., – பூணும்

சுயநலன்., சூழழிவுச் சித்தாந்த நோக்கம்..

முயற்சியின்மை.. செல்வத்தில் மோகம்.. – துயரிதாம்.,                   50

கார்மேகம் போலாம் கரும்புகையில் வான்விரியும்.

யார்தந்தார் ஈங்கிதற் காதரவு – ஓர்க.,

கமழிப் படலம் கணிசமாய் நீங்க

இமைப்பொழுதில் தோல்நோயு மிங்காம் – அமிழ்த்திட்டு

நம்மவரோ டன்னியர்க்கும் நஞ்சளிக்கும்., காசீட்ட

வம்பான மாசை வரவழைத்தல் -  தெம்பாமோ?   

இத்தனையும் சிந்தனையில் முந்திவரச் சீரமைக்கும்                   

வித்தகத்தைச் சாற்றுவகைப் பற்றுவமேல் – சித்தி.,

இயற்கையன்னை தந்ததெலாம் எல்லோர்க்கும் சொந்தம்

தயக்கமின்றி ஏற்றிடுதல் சால்பு – முயற்சி                                 60

திருவினை யாக்கும்., ஒருபக்கம் சாராக்

கருமங்கள் தாமாக்கும் பாதை., – வெருவுதல்

வேண்டாம்., முனைந்து வினையில் விழைதலே

தூண்டிலின் மீனெனும் சோகத்தைத் – தாண்டும்.,

அரசமரஞ் சுற்றி அடிவயிற்றைப் பார்த்தால்

விரைவில் பயனொன்றும் மேவா., – தருணத்தைக்                     

கச்சிதமாய்க் கண்டறிந்து காரியம் செய்வோமேல்

நிச்சியமாய் பூமித்தாய் நேர்படுவள் – இச்சையுடன்

பூமிக்காய் நாசவினைப் போரின் புடைசாரோம்

சேமமுறச் செய்வோம் சமரசம்., – நாமெல்லாம்                           70

வேண்டுவம் ஓரினமாய்  யாண்டு மொருமித்து

ஆண்டவ னாக்கிய அண்டத்தில் – மீண்டும்                            

இயற்கையைப் போற்று மியல்புற்று வாழ                              

நயந்தேன் நடக்குமென நம்பு.                                                74

 

முடிவுரை

கட்டளைக் கலித்துறை

 

இன்னமும் கொள்ளணும் இன்மனச் சிந்தனை ஏற்றமுற

சொன்னமும் சொர்க்கமும் கூடு மிதாலெனச் சூளுரைப்பேன்

இன்மையைத் தீர்க்க வியற்கையைப் போற்றணும் இன்முகத்தே

வன்தொழில் நீங்கிட வண்மையும் சேர்ந்திடும் வாழ்நிலத்தே

 

பெற்ற சுதந்திரம் பேணப் பகையதன் பேரொழித்து

கற்றவர் சூழ்ந்திடக் கல்வி யெனுமொளி காத்திடணும்

சுற்றுப் புறமதன் சூழலும் மேம்படத் துப்புரவைச்

சற்றுநம் சிந்தனை சாரணும் பின்வரும் சந்ததிக்கே.

 

அருஞ்சொற்பொருள்:

வள்ளுவர் சாற்றினார் "உள்ளவருள் ஒண்பொருளே":

“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்பொருட்செல்வம்
பூரியார்கண்ணும் உள” (திருக்குறள் – 241)

ஒண்பொருள் – சிறந்த பொருள்

ஒள்ளிய – அறிவு மிகுந்த

“பகைவனுக் கருள்வாய் நன்நெஞ்சே” – பாரதி

தக்காத – தகாத என்பதன் நீட்டல் விகாரம்

தகவு – பெருமை, மதிப்பு, ஒழுக்கம்

எக்காளம் – இறுமாப்பு, கேலி

ஓமச் சடங்கு – வேள்வி

வாடை – வடக்கிலிருந்து வீசும் காற்று

விஞ்சுதல் – மேன்மையுறல்

அத்தன் – மேலோன், இறைவன்

மண்டும் – நெருங்கும்

ஆர்த்திடும் – ஓங்கி முழங்கிடும்

கோடு – மலை, மலைத்தொடர்

வாஞ்சை – ஆசை, விருப்பம்

நெகிழி -  இளகிய நிலையிலிருந்து இறுகிய நிலைத்தாம் பொருள் –plastic items

கமழிப் படலம் – ozone layer., இது அண்டத்தில்குறைவதனால் தோல் சம்பந்தமான நோய்கள் 
ஏற்படும்.

சித்தி – வெற்றி

வெருவுதல்  - அஞ்சுதல்

யாண்டும் - எப்போதும்

சொன்னம் – சுவர்ணம், தங்கம்

வன்தொழில் – வஞ்சகமான செயல்., வண்மை - வளமை




அன்பன்


ராம் ராமகிருஷ்ணன்(ராம்கிராம்)




On Thu, Nov 6, 2025 at 6:17 PM இமயவரம்பன் <[email protected]> wrote:

பேரெழில் மிக்க தோரண வாயிலின்  எழுச்சிமிக்க எழுத்துகள் இனிமை! 

On Nov 6, 2025, at 12:35 AM, Subbaier Ramasami <[email protected]> wrote:



ஒருகணத் துடிப்பில் உச்சியைப் பிடிப்பாய்
        உதவிய மகிழ்ச்சியில் மீண்டும் கிடப்பாய்
இருகணத் தொடர்ச்சி ஏன் கிடையாது?
                இன்னும் கொஞ்சம் ஏன் முடியாது?


-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/santhavasantham/AD97E91C-9A1E-4CF1-8331-71C438E9C3FD%40gmail.com.



-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiz5GrJY%3DgnAi5dQF8ykrHWzPdhsOCh-esWz%2BWiupc49g%40mail.gmail.com.
  

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/921730067.3268035.1762486872248%40mail.yahoo.com.

Reply via email to