Yan petra inbam peruga ivvayagam KR 71125

---------- Forwarded message ---------
From: [email protected] <[email protected]>
Date: Fri, 7 Nov 2025 at 09:11
Subject: Fw: கவியரங்கம் 61
To: Sayee Manohar Krishnamurthy <[email protected]>,
Patty Thatha <[email protected]>




Yahoo Mail: Search, organise, conquer
<https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer>

----- Forwarded message -----
*From:* "Ram Ramakrishnan" <[email protected]>
*To:* "[email protected]" <[email protected]>
*Cc:*
*Sent:* Fri, 7 Nov 2025 at 8:32 am
*Subject:* Re: கவியரங்கம் 61
*கவியரங்கம் -* * 61*



*இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்*



*தொடக்கநாள்  7- 11- 2025*



*கவியரங்கத் தலைமைக் கவிதை:*




*இறைவணக்கம்*


*வந்தவினை தீர்த்தருளும் தொந்தி கணநாதா*

*சிந்தை நிறைத்தவென் சிங்காரா - சந்த*

*வசந்தக் கவியரங்கம் மாண்புறச்செய் தற்கே *

*இசைந்தருளி வந்திடுவா யிங்கு.*



*வெள்ளிவிழா ஆண்டில் கவியரங்க முதற்செய்தியும் சந்த வசந்தக் குழுமத்
தலைவர்க்குப் பாராட்டும்*



*வெள்ளிவிழா வாண்டில் விளக்கொளிபோற் சிந்தனைகள்*

*அள்ளித் தரவந்த ஆன்றோரே – எள்ளுரையைத்*

*தள்ளிடு**வோம்** முள்ளைப்போல் தைத்தல் தவிர்த்திடின்*

*உள்ள முவக்கு முயர்வு.*



*எள்ளுரை : இகழ்ச்சியுரை*



*கவிவேழம் தோற்றிய கண்கவருஞ் சோலை*

*புவிபோற்றி நிற்கின்ற பொற்பு., – தவமாய்த்*

*தமிழ்ப்பணி செய்தாரின் தாளாண்மை ஏத்து(ம்)*

*இமிழ்சந்த மீடில்லா வின்பு*



*தாளாண்மை - ஊக்கம்*

*இமிழ் – இனிமை, இசை*



*அவையடக்கம்*



*பொருளார்ந்த பாப்புனையப் புஞ்சும் கவிகாள்*

*சிரந்தாழ வந்தடைந்தேன் தேடி – சரமதனில்*

*நாராகி நல்கிய நற்கவிப் பூக்களைச்*

*சீராகக் கோத்தளிப்பேன் தேர்ந்து.*



*புஞ்சும் – ஒன்று கூடும்*



*இன்னும் கொஞ்சம் சிந்திப்போம்*

*நேரிசைக் கலிவெண்பா*



*எந்தையும் தாயு மிருந்து சிறந்ததந்நாள்*

*வந்துதித்த நாள்தொடங்கி வாழ்வினிக்கச் – சிந்தைமகிழ்*

*தெள்ளிய செய்கையில் சீருற்றோம். அந்நாளில்*

*அள்ளித் கொடுத்த அறிவுரைகள் – உள்ளத்தி(ல்)*

*ஊன்றி யியல்புட னொட்டிக் கலந்தன.*

*சான்றொன்று கண்டோம் சமத்துவத்தில். – தோன்றிய*

*வள்ளுவர் சாற்றினார் "உள்ளவருள் ஒண்பொருளே"*

*ஒள்ளிய பாரதி ஓதியதே., – விள்ளா*

*அறிவின் விரிவதனி லார்வ முடனாய்ச்*

*செறிவை யடைந்துலக ணைத்தார் – உறவும்                        10*

*செழித்தது., செய்திறனில் சேவை மனத்தில்*

*விழிப்புணர்வு மேவ விரிந்து – பழுத்தநற்*

*பண்பில் பகிர்ந்துண்ணும் பாசம் வளர்ந்தது.,*

*மண்ணில் மனிதநேயம் மாண்பினில் – விண்ணுறும்.,*

*ஈதலின் உண்டோ இனிதென்றார்., இத்துடன்*

*யாதுமெம் ஊரே யெனச்சொன்னார்., – ஓதிய*

*முன்னோரின் காலம் முடிந்த துணருங்கால்*

*சின்னேரம் நின்றிங்குச் சிந்திப்போம்., – பொன்னான*

*அக்காலம் இன்றுளதோ? அன்பே உலகணைக்கும்.,*

*தக்காத பேச்சுத் தகவொழிக்கும்., – எக்காளம்                         20     *

*அன்பொழிக்கும்., சிந்தனையின் ஆழத்தில் செல்வோமா?*

*முன்பிருந்த நிம்மதி சென்றதெங்கு? – நன்றெனவாய்*

*நெஞ்சில் நினைவலைகள் நீந்திடும்., நீரோடை*

*கொஞ்சிக் குலவிடும் வாடையுடன்., – பஞ்சாய்ப்*

*பறந்திடும் புள்ளினங்கள்., பச்சைநிறக் காடு.,*

*உறவில் களித்தநல் லுள்ளம்., – அறமோங்க*

*ஓமச் சடங்குகள்., ஊர்கூடித் தேரிழுத்தல்.,*

*பூமியில் சீரான தட்பவெப்பம்., – சேமமுற*

*மெய்ஞ்ஞானம் போற்றிய மேன்மை., அறிவிற்கு*

*விஞ்ஞான மஃதளித்த வேட்கையின் – விஞ்சுதல்.,                     30       *

*எத்துணை நற்பயனும் என்றோர்நாள் முற்றுமன்றோ?*

*அத்தனின் சித்தத்தை ஆரறிவார்? – இத்தலத்தில்*

*மூண்டவிருள் காரணத்தை மீண்டொருகால் சிந்திப்போம்,*

*காண்கின்ற நாச விளைவுகளின் – பூண்டொழிக்க.,*

*நீர்நிலைகள் காய்ந்தவிடம் நீண்ட தொழிற்கூடம்.,*

*ஆர்த்திடு முற்பத்தி யச்சுறுத்தல்., – ஊரழித்துக்*

*கோடிகளைச் சேர்த்துக் குவிக்கச் சதித்திட்டம்.,*

*மூடிம றைத்தவூழல் வித்திட – வாடிடும்*

*மக்கள்., வளர்ச்சியென வான்முட்டும் கட்டடங்கள்.,     *

*பக்கத்தில் குப்பைசூழ்க் கோலங்கள்., – சிக்கலுறச்
 40             *

*சூழ்நிலையின் சீர்கேட்டால் சோதனை., வானிலையால்        *

*ஆழ்கடலின் பேரலைகள் மூழ்கடித்தல்., – வீழ்துயரில்*

*அண்டத்தில் வெப்பமயம்., மண்டும் சுழற்காற்று.,*

*தண்மைசூழ்க் கோடு பனியவிழ்க்க – மண்மூழ்கல்., *

*சீற்றத்தில் பூமித்தாய் செய்தவற்றைச் சிந்திப்போம்.*

*ஆற்றொணாத் தீச்செயலில் ஆயுதங்கள்., – தூற்றுவகை*

*வாணிகத்தில் தீராத வாஞ்சை வளர்த்தது..*

*நாணமற்று வீசும் நெகிழிகள்., – பூணும்*

*சுயநலன்., சூழழிவுச் சித்தாந்த நோக்கம்..*

*முயற்சியின்மை.. செல்வத்தில் மோகம்.. – துயரிதாம்.,                   50*

*கார்மேகம் போலாம் கரும்புகையில் வான்விரியும்.*

*யார்தந்தார் ஈங்கிதற் காதரவு – ஓர்க.,*

*கமழிப் படலம் கணிசமாய் நீங்க*

*இமைப்பொழுதில் தோல்நோயு மிங்காம் – அமிழ்த்திட்டு*

*நம்மவரோ டன்னியர்க்கும் நஞ்சளிக்கும்., காசீட்ட*

*வம்பான மாசை வரவழைத்தல் -  தெம்பாமோ?   *

*இத்தனையும் சிந்தனையில் முந்திவரச் சீரமைக்கும்                   *

*வித்தகத்தைச் சாற்றுவகைப் பற்றுவமேல் – சித்தி.,*

*இயற்கையன்னை தந்ததெலாம் எல்லோர்க்கும் சொந்தம்*

*தயக்கமின்றி ஏற்றிடுதல் சால்பு – முயற்சி                                 60*

*திருவினை யாக்கும்., ஒருபக்கம் சாராக்*

*கருமங்கள் தாமாக்கும் பாதை., – வெருவுதல்*

*வேண்டாம்., முனைந்து வினையில் விழைதலே*

*தூண்டிலின் மீனெனும் சோகத்தைத் – தாண்டும்.,*

*அரசமரஞ் சுற்றி அடிவயிற்றைப் பார்த்தால்*

*விரைவில் பயனொன்றும் மேவா., – தருணத்தைக்                     *

*கச்சிதமாய்க் கண்டறிந்து காரியம் செய்வோமேல்*

*நிச்சியமாய் பூமித்தாய் நேர்படுவள் – இச்சையுடன்*

*பூமிக்காய் நாசவினைப் போரின் புடைசாரோம்*

*சேமமுறச் செய்வோம் சமரசம்., – நாமெல்லாம்                           70*

*வேண்டுவம் ஓரினமாய்  யாண்டு மொருமித்து*

*ஆண்டவ னாக்கிய அண்டத்தில் – மீண்டும்                            *

*இயற்கையைப் போற்று மியல்புற்று வாழ                              *

*நயந்தேன் நடக்குமென நம்பு.
 74*



*முடிவுரை*

*கட்டளைக் கலித்துறை*



*இன்னமும் கொள்ளணும் இன்மனச் சிந்தனை ஏற்றமுற*

*சொன்னமும் சொர்க்கமும் கூடு மிதாலெனச் சூளுரைப்பேன்*

*இன்மையைத் தீர்க்க வியற்கையைப் போற்றணும் இன்முகத்தே*

*வன்தொழில் நீங்கிட வண்மையும் சேர்ந்திடும் வாழ்நிலத்தே*



*பெற்ற சுதந்திரம் பேணப் பகை**யதன்** பே**ரொழித்து*

*கற்றவர் சூழ்ந்திடக் கல்வி யெனுமொளி காத்திட**ணும்*

*சுற்**றுப் புறமதன் **சூழ**லும் மேம்படத் துப்புரவைச்*

*சற்று**நம் சிந்தனை **சாரணும் பின்வரும் சந்ததிக்கே.*



*அருஞ்சொற்பொருள்:*

*வள்ளுவர் சாற்றினார் "உள்ளவருள் ஒண்பொருளே":*

*“**அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்*
*பூரியார் கண்ணும் உள**” (திருக்குறள் – 241)*

*ஒண்பொருள் – சிறந்த பொருள்*

*ஒள்ளிய – அறிவு மிகுந்த*

*“பகைவனுக் கருள்வாய் நன்நெஞ்சே” – பாரதி*

*தக்காத – தகாத என்பதன் நீட்டல் விகாரம்*

*தகவு – பெருமை, மதிப்பு, ஒழுக்கம்*

*எக்காளம் – இறுமாப்பு, கேலி*

*ஓமச் சடங்கு – வேள்வி*

*வாடை – வடக்கிலிருந்து வீசும் காற்று*

*விஞ்சுதல் – மேன்மையுறல்*

*அத்தன் – மேலோன், இறைவன்*

*மண்டும் – நெருங்கும்*

*ஆர்த்திடும் – ஓங்கி முழங்கிடும்*

*கோடு – மலை, மலைத்தொடர்*

*வாஞ்சை – ஆசை, விருப்பம்*

*நெகிழி -  இளகிய நிலையிலிருந்து இறுகிய நிலைத்தாம் பொருள் – plastic items*

*கமழிப் படலம் – ozone layer., இது அண்டத்தில் குறைவதனால் தோல் சம்பந்தமான
நோய்கள் ஏற்படும்.*

*சித்தி – வெற்றி*

*வெருவுதல்  - அஞ்சுதல்*

*யாண்டும் - எப்போதும்*

*சொன்னம் – சுவர்ணம், தங்கம்*

*வன்தொழில் – வஞ்சகமான செயல்., வண்மை - வளமை*


*அன்பன்*

*ராம் ராமகிருஷ்ணன் (ராம்கிராம்)*




On Thu, Nov 6, 2025 at 6:17 PM இமயவரம்பன் <[email protected]> wrote:

பேரெழில் மிக்க தோரண வாயிலின்  எழுச்சிமிக்க எழுத்துகள் இனிமை!

On Nov 6, 2025, at 12:35 AM, Subbaier Ramasami <[email protected]>
wrote:

ஒருகணத் துடிப்பில் உச்சியைப் பிடிப்பாய்
        உதவிய மகிழ்ச்சியில் மீண்டும் கிடப்பாய்
இருகணத் தொடர்ச்சி ஏன் கிடையாது?
                இன்னும் கொஞ்சம் ஏன் முடியாது?

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/santhavasantham/AD97E91C-9A1E-4CF1-8331-71C438E9C3FD%40gmail.com
<https://groups.google.com/d/msgid/santhavasantham/AD97E91C-9A1E-4CF1-8331-71C438E9C3FD%40gmail.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"சந்தவசந்தம்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiz5GrJY%3DgnAi5dQF8ykrHWzPdhsOCh-esWz%2BWiupc49g%40mail.gmail.com
<https://groups.google.com/d/msgid/santhavasantham/CAENLqtiz5GrJY%3DgnAi5dQF8ykrHWzPdhsOCh-esWz%2BWiupc49g%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an
email to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/921730067.3268035.1762486872248%40mail.yahoo.com
<https://groups.google.com/d/msgid/thatha_patty/921730067.3268035.1762486872248%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoqiHSLXANfNEhhYb5eu_AcKU5sS%3DYoxeRWhcSZsP%2BehQQ%40mail.gmail.com.

Reply via email to