Bhagavad Gita: Chapter 3, Verse 35

श्रेयान्स्वधर्मो विगुण: परधर्मात्स्वनुष्ठितात् |

स्वधर्मे निधनं श्रेय: परधर्मो भयावह: || 35||

śhreyān swa-dharmo viguṇaḥ para-dharmāt sv-anuṣhṭhitāt

swa-dharme nidhanaṁ śhreyaḥ para-dharmo bhayāvahaḥ

BG 3.35: It is far better to perform one’s natural prescribed duty, though
tinged with faults, than to perform another’s prescribed duty, though
perfectly. In fact, it is preferable to die in the discharge of one’s duty,
than to follow the path of another, which is fraught with danger.

KR IRS 61225

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <[email protected]>
Date: Sat, 6 Dec 2025 at 07:15
Subject: Fwd: Indira Priyadarshini
To:




*தேட்ட மின்றி விழியெதிர் காணும் தெய்வமாக விளங்குவிர் நீரே! (பாரதி)*

*இந்திரா ப்ரியதர்ஷிணி *

பாரதி தொழில் கவிதையின் அழகான முத்தாய்ப்பு. தொழிலாளிகளின் பெருமை பற்றி
சொல்லி வரும் பாரதி நாங்கள் தேட வேண்டிய அவசியம் தேவை இன்றி எங்கள் எதிரே
பிரத்யக்ஷமாகக் காணும் தெய்வம் நீங்கள் தான் என்று தொழிலாளிகளைப் பார்த்து
சொல்கிறான்.

உண்மை தான். அவனுக்கு தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல், இமைப்பொழுதும்
சோராதிருத்தல்! இந்தப் பொதுவுடைமை தொழில்வன்மை தானே காட்டிய ஒரு தெய்வம்
நமக்குண்டு. யாரது? ஆய கலைகள் அறுபத்து நான்கிற்கும் தலைவன் எந்தை ஈசன்
எம்பெருமான் தில்லை நடராசன் தான். தொழிலும் வர்ணமும் பேசி மக்களைப் பிரிக்கும்
ஒரு சமூகத்தில் எத்தொழிலும் செய்த ஒரு இறை நமக்குத்தான். அம்பலவாணன்தான்.

நானும் யோசித்து யோசித்துப் பார்த்தேன். ஒரு வேலை பாக்கி கிடையாது. பிள்ளைப்
பேறு முதல் சுடலை வரை.
பிள்ளைப் பேறு மருத்துவம் தாயுமானவ சுவாமி, திருச்சி. காடுடைய சுடலைப் பொடி
பூசி உள்ளங் கவர் கள்வன் சுடலை ஈசன் எங்கும். வைரவளை, ரத்னவளை, முத்து வளை
விற்ற வியாபாரி வாணியம் மதுரை சொக்கேசன். பிட்டுக்கு மண் சுமந்து கலாசி வேலை
மதுரை வைகை அணை மேட்டில். கடலூர் மாவட்டம் திருத்தினை நகரிலும், திருவாரூர்
மாவட்டம் திருநாட்டியத்தான் குடியிலும், கோவை மாவட்டம் பேரூரிலும், புதுச்சேரி
மாநிலம் திருத்தெளிச்சேரியிலும் விவசாயியாக அம்பிகையுடன் வயலில் வேலை செய்த
உழவன். அம்மாவை வேறு துணைக்கு அழைத்தான். பாட்டுப் பாடி அசத்திய பாகவதன்
ஹேமநாதனை பாடகனாகத் தோற்கடித்து பாணபத்திரர் பக்தியில் திளைத்து. தில்லையில்
அம்மையுடன் நடனம். நிரந்தர நடனம் பல பதிகளிலும். அன்ன தானப் பிரபு அங்கங்கே
அப்பர் பெருமானுக்கு திருப்பைஞ்ஞீலி மற்றும் தம்பிரான் தோழருக்கு
திருக்கச்சூர். காசு கொடுக்கும் வள்ளல் திருவாவடுதுறை திருமிழலை. கல்யாண
புரோக்கர் வேலை திருமழபாடியில் நந்தியெம் பிரானுக்கு அப்புறம் பரவை
நாச்சியாருக்கு, சங்கிலி நாச்சியாருக்கு, வொற்றியூர் மற்றும் ஆரூரில்.

பிச்சைக்கார வேஷம் எப்போதும் அம்மா அன்னபூரணி தேவியிடம். அவ்வப்போது
திருக்கச்சூர் போலே சுந்தரர்க்கு வேண்டி.  படியெடுப்பாளன் ஸ்க்ரைப்
திருவாசகத்திற்கு தில்லை. புலவன் வேஷம் தருமிக்கு கிழி கொடுத்து மதுரையில்.
வாதி மற்றும் வக்கீல் வேஷம் திருவெண்ணெய் நல்லூரில். வழக்குரைத்த காதையில்
நீதிபதி வேஷம். நித்ய சந்யாசி சிறுத்தொண்டர் மற்றும் திருக் குறிப்புத்
தொண்டர் திருநீலகண்டர் முதலான பல திருவிளையாடற் கதைகளில். அப்புறம் குதிரை
வியாபாரி மதுரையில் ஆவணி மூல வீதியில். சோமாசி மாறர் யாகத்திற்கு சண்டாளக்
கோலத்தில் நாலு நாய்களைப் பிடித்துக் கொண்டு விஜயம். திருப்பெருந்துறை
தலத்தில் ஞானகுரு. வாத்யார்.

இடையில் மீனவத் தொழில் அம்மையை மணக்க உண்டு. அர்ச்சுனனோடு கிராதனாக வேடர்
தொழில். திருமுருகன் பூண்டியில் சுந்தரர்க்கு  பொருள் தந்து தானே களவு செய்து
வழிப்பறி கள்வன். எங்கள் வைக்கத்தில் வைக்கத்தஷ்டமி அன்று சமையற்காரர் பாயாசம்
வைத்து உறங்க, தானே கரண்டியுடன் மடப்பள்ளியில் தன் பாயாசம் உண்டாக்கி தானே
நைவேத்யம். இன்றும் முதல் இலை சுவாமிக்குத் தான். சமையக்காரன் பந்தியில்
முந்தி. காசியில் கால பைரவ வேஷத்தில் காவல் வேறு.  முதல் தமிழ்ச் சங்கத்தின்
தலைமை வித்தகன், பண்டிதன் ஈசன்தான். பண்டிதனாய் தமிழ்ச் சங்கத்தில். பாமரனாய்
ஞான பண்டித சுவாமியிடம் பொருள் கேட்கும் சிஷ்யகோடி.

இருப்பதற்கு பூசலார் மனக்கோயில் இஷ்டம். உண்ண உலர்ந்த அரிசியும் உணக்கப்
பாகற்காயும் தாராளம். தந்தை தாய் குரு தமையன் கணவன் தலைவன் என்று பல
பொறுப்பும் வகித்து பல தொழிலும் செய்து, தந்தையும் தாயும் தனக்கில்லாது, ஆனால்
வள்ளலார் சுவாமிகள் சொல்வது மாதிரி தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற
நீர்மையுடைய தெய்வம் வேறு எங்காவது உண்டா?  இதற்கு அப்புறமும் பிரம்படி, ஏச்சு
சுந்தரர் பேச்சு, சாக்கியர் கல்லெறி  எல்லாம் அடியார்க்காக வாங்கிய எளிமை
வேறு.  நீர்மையது. ஐந்தொழில் இறையாக உண்டெனினும் இறை மனிதனாகக் காட்டிய
தொழில்கள் சுவையானவை. இனிமேல் யாராவது இந்தத் தொழில் மட்டம் உசத்தி சொன்னால்
காலரை உயர்த்திச் சொல்ல இடமுண்டு. என்னப்பனே செய்த தொழில், நீ என்னடா கொசுறு?
என்று.

செய்யும் தொழில் உன் தொழிலே காண்! பாரதி வாக்கு.  இறை வலியது.

*-- இந்திரா ப்ரியதர்ஷிணி *
***********************************************
*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorWuLH40osHHrN4w-Ww46BkpfJD1M%3D3Qzgx3bBHNTWODA%40mail.gmail.com.

Reply via email to