தமிழும் பிச்சையும் பிச்சை இழி சொல் அல்ல; சமஸ்கிருத பிக்ஷ தமிழில் பிச்சையென ஆனது. பிக்ஷையின் குறிக்கோள், நான் எனும் அகங்காரம் அடக்குவது; எனவே அதை, மொழி அறியாதார், கேவலம் எனக் கருதினார்கள். தலையே நீ வணங்காய் என பாடியவரும் , அடக்கம் அமரருள் உய்க்கும் என எழுதியவரும் ஒன்றை தான், கூறினார்கள். இறைவனிடம் தலை வணங்கு. பிச்சை எடுப்பவன் , உன்னை வணங்க வில்லை; தலையே நீ வணங்காய்; உன்னுள் உறையும் ஆத்மாவை வணங்குகிறான். அடக்கம் உய்க்கும். பிட்சை சிவனும் எடுத்தார். தமிழ் பேசினால் தானாக வளரும்; பிற மொழிகளும் அவ்வாறே; பிள்ளைகளில் அன்னைக்கு என்ன வித்தியாசம்? மொழி என்பதே, வாக்கில் வெளிப்பட்டது தானே? எம்மொழியும் செம்மொழியே. எனில் மொழிப்போராட்டம் எனும் பராசக்தி பம்மாத்து வேலை எதற்காக? தமிழ் பேசும் மக்கள் இன்று பேசும் கொச்சை தமிழால், பிச்சைதான் எடுக்கிறார்கள்; ஈவேரா கூற்று சரிதானே? நிர்மலா கூற்றும் சரிதான்; கமல ஹஸ்ஸன் தமிழில் தானே பிச்சை எடுத்தார்; பிறமொழி அரியaதோர், ஒரே மொழியையும், சரியாக அரியaதோர், தமிழ் பற்று நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள் . மொழிகள் அறிந்தவர், "யாமறிந்த மொழிகளிலே .... எனும் "தன் குஞ்சு பொன் குஞ்சு" தத்துவத்தை மெய்ப்பிக்கிறார்கள்;அவ்வளவே. மொழியை யாரும் வளர்க்க வேண்டாம்; பழகுவதில் தானாக வளரும். வெறும் தமிழ் வெறுப்பை வளர்க்கும் ; நற்றமிழ் நற்பண்பை,பொற்றாமரையை விளக்கும் K RAJARAM IRS 9226
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Mon, 9 Feb 2026 at 06:39 Subject: Fwd: Indirapriyadarshini - Pichchai To: *பிச்சையும் தமிழும்* *இந்திரா ப்ரியதர்ஷிணி * இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான் - குறள். பிச்சை என்பதற்கு தமிழ் ஏன் நமது பண்பாடு பல வகை காட்டுகிறது? ஐயம் பிச்சை ஆந்தனை என்பது ஆண்டாள் நாச்சியார் அன்றே காட்டியது. இரத்தல். பாணர் பரணர் பாவலர் புலவர் தமிழில் பாடிப் பரிசில் பெற்றதும் ஒரு வகை இரப்பு என்று எள்ளுவாருண்டு. பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை என்று பாரதி சூளுரை. பிச்சை புகினும் கற்கை நன்றே என்று ஔவைப் பாட்டி அறிவுரை. எது பிச்சை ? யாருக்குப் பிச்சை? எதற்காகப் பிச்சை? எதனால் பிச்சை? என்று பெரிய பட்டி மன்றம் நடத்துகிறோம். பல குழந்தைகளுக்கு பெருமாள் பிச்சை, அல்லா பிச்சை, ஆண்டவன் பிச்சை என்று பெயர் இருக்கும். இறைவன் மடிப் பிச்சையாகத் தந்த பொருள் என்று அர்த்தம். மடிப் பிச்சை வேண்டி மலைப் படிகளில் குழந்தை வரம் வேண்டி நிற்கும் தாய்மார் சமயபுரம் பழனி போன்ற கோவில்களில் நாம் காண முடியும். கோயில் படி ஏறினால் தெரியும். பவதி பிக்ஷாம் தேஹி என்பது உஞ்சவிருத்தி எனும் தவ விரதம் நோன்பு மேற்கொண்ட ஞானிகள் அன்றாடம் வாழ்வின் சொற்பத் தேவைகளை நிறைவு செய்ய உச்சரிக்கும் சொல்லாடல். க்ஷீரடி ஸாயிகூட ஒரு தகரக் குவளையுடன் எல்லா உணவையும் கலந்து அருவருப்பின்றி இரந்துதான் உண்பார். இரத்தலில் "தான்" என்ற அகந்தை போய் விடும் என்பதற்காகவும் தேவை சொற்பம் என்பதற்காகவும் மட்டுமே ஞானிகள் அதை மேற்கொள்கிறார்கள். சில்லறைக்கு அல்ல. அவர்களுக்கு உண்மையில் பணத்தைக் கண்டால் பயம் அருவறுப்பு. ஸ்ரீ இராம கிருஷ்ண பரமஹம்ஸர் காஞ்சனம் என்றால் தூர வைப்பார். ஸ்ரீ க்ஷீரடி ஸாயியின் ஸன்ஸ்தானத்தின் பல ஆஸ்திகளும் இராதாகிருஷ்ண மயி அம்மா விட்டுச் சென்றவை. சில்லறைகள் நவீன காலம் மட்டுமல்ல நம் பண்பாட்டில் எக்காலத்திலும் உதவியதாக சரித்திரமில்லை. ஒரே ஒன்று தான் உதவும். அது நல்லறம். தமிழ்ப் பண்பாட்டின் உயரிய நெறியாகும். அந்த அறமும் அறம் சார்ந்த ஆன்மீகமும் நீதி நூல்களும் தமிழின் நம் குல ஆணிவேர். தமிழ் உயர் தனிச் செம்மொழியாய் வீறு நடை போட்டாலும் பிற மொழியைத் தூற்றுவது கிடையாது. வடசொல் திசைச்சொல் எல்லாம் உண்டு தமிழில். நற்றமிழ் அறிஞர் ஒரு நாளும் இச்செயலைச் செய்வது கிடையாது. சாஹித்யம் சங்கீதம் அதாவது இயல் இசை எதுவும் முழுவதும் அறிந்தவர் இங்கு கிடையாது. கொஞ்சம் தெரிந்திருக்கிறது என்றாலும் ஆன்மீகத்திலும் அறத்திலும் நமக்கு நம்பிக்கை கிடையாது. ஆனால் எங்கும் எப்போதும் எல்லாவற்றைப் பற்றியும் வாய் இருக்கிறது என்று நமக்குப் பேசியாக வேண்டும் என்று ஏன் தோன்றுகிறது? தெரியாது. அறிவு ஜீவி என்று தோற்றம் அளிப்பதாலோ? ஆஹா பிரம்ம ரிஷி மாதிரி. முன்பு ஒரு முறை "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாக ஒரு திரிபு வந்தது. அது மாதிரிதான். இந்த தர்க்கங்களில் ஈடுபடும் இவர்கள் யாவரின் இறுமாப்பு செருக்கைப் பற்றியும் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. பாரதி சொல்வது மாதிரி நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ சொல்வீர்? என்று கூற வேண்டும் போல் இருக்கிறது. பாரதி செல்லம்மாவிற்கு எழுதிய கடிதத்தில் இந்தக் கால நேரத்தில் நீ தமிழை நன்கு படித்து வந்தாயானால் இன்புறுவேன் என்று எழுதுவான். தமிழ்த் தாத்தா உ.வே.சா இவ்வுலகில் வாழ அவ்வுலகில் மேன்மையுற தமிழ் படித்தால் போதும் என்றார். தியாகராஜ சுவாமி நாம் இப்படி தர்க்கிக்க உஞ்ச விருத்தி செய்யவில்லை. அவர்கள் போட்ட தமிழ்ப் பண்பாட்டுப் பிச்சை தான் நம்மை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. பெரியவர்கள் யாரையும் காரணம் காட்டி குற்றப்படுத்தி இங்கு யாரும் தமிழ் வளர்க்க வேண்டாம். தமிழ்ப்புதையல் மேல் இருந்து கொண்டு அறிவுப் பிச்சை எடுக்கும் ஒரே இனம் நாம் தான். நம் பாடத் திட்டத்தில் நல்ல தமிழைப் பிள்ளைகள் கற்க வையுங்கள் என்பதே அவா. தமிழ் தானாய் வளரும். சூழ்கலி நீங்க தமிழ் மொழி ஓங்க துலங்குக வையகமே! *இந்திரா ப்ரியதர்ஷிணி * *************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZorYaMPBcrfj%2BtQhP_%2Bos1O%2BW-9_ih%2Bh2WGHz_pnL9X-8g%40mail.gmail.com.
