---------- Forwarded message --------- From: GOPAL Vis <[email protected]> Date: Thu, 12 Mar, 2026, 10:44 am Subject: Re: தேசிகரின் பூஸ்துதி தமிழாக்க முயற்சி (கோபால்) To: <[email protected]>
மிக்க நன்றி. கோபால் On Thu, Mar 12, 2026 at 6:21 AM Govindaraju Arunachalam <[email protected]> wrote: > உரை இனிது. உரைக்கும் விதமும் இனிது. > > rgds, > > Dr. A. GOVINDARAJU, > Retired Principal - National Awardee, > > > > On Wed, 11 Mar 2026 at 9:21 PM, GOPAL Vis <[email protected]> wrote: > >> மிக்க நன்றி, திரு யோகியார் அவர்களே. >> கோபால். >> >> On Wed, Mar 11, 2026 at 9:09 PM Kaviyogi Vedham < >> [email protected]> wrote: >> >>> அபாரம் கோபால். அருமையாக வந்துளது. தொடர்க..உம் பணி, >>> யோகியார் >>> >>> On Wed, Mar 11, 2026 at 2:19 AM GOPAL Vis <[email protected]> >>> wrote: >>> >>>> சந்த வசந்த அன்பர்களுக்குப் பணிவான வணக்கம். சுமார் 3 வாரங்களுக்கு முன், >>>> திருப்புல்லாணி திரு ரகுவீரதயாள் அவர்கள், உ வே *ஸ்ரீ வேதாந்த தேசிகர்* >>>> இயற்றிய 33 விருத்தங்களைக் கொண்ட *பூஸ்துதி *என்ற வட்மொழி நூலைத் >>>> தமிழ்க் கவிதை வடிவில் யாத்துத் தருமாறு பணித்தார். அது அடியேன் அறிந்திராத >>>> நூலாதலினால் புத்தகத்திலிருந்து தமிழ்ப் பொழிப்புரையோடு கூடிய் pdf நகல் >>>> ஒன்றையும் அனுப்பி வைத்தார். வடமொழி நூலின் தமிழாக்கமாக நான் இதுவரை >>>> முயன்றதில்லை. அவர் பணித்ததால், இறைவன் சித்தம் என்று ஏற்றுக் கொண்டேன். அது >>>> இன்று முழுமை அடைந்தது. தேவநாகரி வடிவில் பாடல்கள் தனித்தனியாக வலைத்தளத்தில் >>>> கிட்டின. அவற்றை *அக்ஷரமுகா *துணை கொண்டு தமிழ் எழுத்து வடிவத்துக்கு >>>> மாற்ற இயன்றது. பொழிப்புரைகள் புத்தக நகலாதலின் தனித்தனியே எடுக்க இயலவில்லை. >>>> ஆகவே பொழிப்புரை, பதவுரைகளோடு கூடிய நகலை இங்கே >>>> இணைப்பாகச் சேர்த்திருக்கிறேன். தமிழ் எழுத்தில் வடமொழி வடிவையும், அடியேன் >>>> முயன்ற தமிழாக்கத்தையும் அறிஞர்களின் பார்வைக்காக இங்குப் பத்துப் பத்தாக இட >>>> எண்ணி, இன்று தொடங்குகிறேன். பிழைகளைச் சுட்டி அருளுமாறு வேண்டுகிறேன். >>>> என் பாடல்கள் எண்சீர் விருத்தங்களால், பொதுவாக விள/விளாச் சீர்களாலும், >>>> சில (பெரும்பாலும் விளமாகத் தொனிக்கக் கூடிய) காய்ச் சீர்களாலும் ஆனவை. >>>> சொல்லுக்குச் சொல் தமிழாக்கம் இல்லாமல் தேசிகர் சொல்ல வந்த கருத்துகளாக >>>> எனக்குப் பட்டதை ஆதாரமக வைத்து என் உணர்ச்சிகளுக்கும் ஞானத்திற்கும் எட்டிய >>>> சொற்களால் தமிழாக்கம் செய்ய முயன்றிருக்கிறேன் என்பதையும் >>>> பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். >>>> நன்றி. >>>> >>>> >>>> தேசிகன் திருவடிகள் சரணம்! >>>> >>>> *பூஸ்துதி தமிழாக்க முயற்சி! [பாடல்கள் 01 - 10]* >>>> ஸ்ரீமான் வேங்கட நாதார்ய: கவிதார்கிக கேஸரீ | >>>> வேதாந்தாசார்ய வர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி || >>>> >>>> >>>> >>>> >>>> >>>> *வேதாந்த தேசிகனே சீமானே வேங்கட நாதாவெம் ஆசானே ஆசுகவி நாவலனே வாதத்தில் >>>> பேரரியே வாழ்ந்திருப்ப தென்னெஞ்சில் நீதானே என்றும் நிலைத்து! ..(0.1)* >>>> >>>> *சமர்ப்பணம்* >>>> >>>> >>>> >>>> *மாவருளி மாலருள மாகவியாய் ஆனநின நாவருளும் பாவின் நகலாக்க - ஆவதிலை! >>>> தேசிகனே நீயருளிச் சேர்த்துவிடு பூமிக்கே யாசித்தேன் யாப்பிதனை ஏற்று! (0.2)* >>>> [மா = திருமகள்; நகல் (இற்றைய வழக்குச் சொல்) = பிரதி] >>>> >>>> >>>> *முன்மொழி* >>>> >>>> *இருமறைத் தத்துவத்(து) இணையிலான் தேசிகன்* >>>> >>>> *……இமையடி விழியென இறைவனைக் கொண்டவன்* >>>> >>>> *கருவையும் கருத்தையும் கவினையும் கொண்டதாய்க்* >>>> >>>> *……கருணையால் தந்ததோர் காவியம் பூத்துதி!* >>>> >>>> *அருகதை இன்றியோர் ஆசையால் அதனையீங்(கு)* >>>> >>>> *……அமுதெனும் தமிழினில் ஆக்கிட முயன்றுளேன்!* >>>> >>>> *வருபிழை என்கவி வறுமையால், நிறைவுநான்* >>>> >>>> *……வணங்கிடும் தேசிகன் வாக்கினில் வந்ததே! (0.3)* >>>> >>>> >>>> பூஸ்துதி*:* >>>> வேதா³ந்ததே³ஶிகக்ருʼதா . >>>> *வேதாந்த தேசிகர் இயற்றிய பூத்துதி* >>>> >>>> ஸங்கல்பகல்பலதிகாமவதி⁴ம்ʼ க்ஷமாயா꞉ >>>> ஸ்வேச்சா²வராஹமஹிஷீம்ʼ ஸுலபா⁴னுகம்பாம் . >>>> விஶ்வஸ்ய மாதரமகிஞ்சனகாமதே⁴னும்ʼ >>>> விஶ்வம்ப⁴ராமஶரண꞉ ஶரணம்ʼ ப்ரபத்³யே .. 1.. >>>> >>>> *எண்ணிய எண்ணுமுன் ஈந்திடும் கற்பகம்!* >>>> >>>> *……எல்லையில் லாப்பிழை இயல்பினால் பொறுப்பவள்!* >>>> >>>> *அண்ணல்வ ராகனின் அன்புடை மனையவள்!* >>>> >>>> *……அருள்வதில் எளியவள் அகிலமிஃ(து) ஈன்றவள்!* >>>> >>>> *நண்ணிடும் கதியிலார் நலம்பெற அளிப்பவள்!* >>>> >>>> *……நங்கைதன் சுதந்திரம் நனிஉணர்ந் தவளவள்!* >>>> >>>> *மண்ணெனும் தாயவள் மகனென புகலவள்* >>>> >>>> *……மலரடி அன்றியோர் மறுபுகல் இல்லையே! ..(1)* >>>> >>>> [மகன் என = மகனாகிய என்னுடைய] >>>> >>>> >>>> . . . . . . . . >>> >> -- >> You received this message because you are subscribed to the Google Groups >> "சந்தவசந்தம்" group. >> To unsubscribe from this group and stop receiving emails from it, send an >> email to [email protected]. >> To view this discussion visit >> https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttevUimmOh5%2BXLDd5KMtqG6SONajpuS%2BTcR1s5RzJpdgg%40mail.gmail.com >> <https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCttevUimmOh5%2BXLDd5KMtqG6SONajpuS%2BTcR1s5RzJpdgg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> >> . >> > -- > You received this message because you are subscribed to the Google Groups > "சந்தவசந்தம்" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsE-i%3DpNBqbBpUHXhwkdqqgyn7EZ2vFXWC_Pz3BjAeY5A%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/santhavasantham/CAKHh4GsE-i%3DpNBqbBpUHXhwkdqqgyn7EZ2vFXWC_Pz3BjAeY5A%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "சந்தவசந்தம்" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtth5F%2Bt5CTugDKMsG6ege1vSLEU4Db9m0BuSMGVYXLd0w%40mail.gmail.com <https://groups.google.com/d/msgid/santhavasantham/CALjGCtth5F%2Bt5CTugDKMsG6ege1vSLEU4Db9m0BuSMGVYXLd0w%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> . -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Dduoef%2B9V1rqaiE8vS7LTA6EH7KSYuZxsq2Gfmct45HkUg%40mail.gmail.com.
