ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~ 177 / 27-01-2026 சீதையைத் தேடி புறப்படுதல்...
★அங்கு வானர சேனை பல்வேறு திசைகளில் இருந்து ஏராளமாக வந்து கொண்டு இருந்தனர். கண்ணுக்கெட்டிய தூரம் வரை வானரங்களாக தெரிந்தன. திரண்டு வந்த வானர படைகளை பற்றி சிறிது காண்போம். சதவலி என்னும் வானர வீரன், அங்கு தன் படைத் தளபதி களோடு, பதினாயிரம் வானரசேனை யினை அழைத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். சுசேடணன் எனும் வானர வீரன் மேரு மலையைத் தகர்த்து எடுக்கும் வலிமை கொண்ட வன். அவன் தன் பத்து லட்சம் வானர வீரர் படைகளுடன் அங்கு வந்து சேர்ந்தான். ★தாரன் என்னும் வானர வீரன் கண் சிமிட்டும் நேரத்துக்குள் தன் பெரிய படையான ஐம்பதாயிரம் வீரருடன் வந்து சேர்ந்தான். சுவாட்சன் என்னும் வானர வீரன் இரண்டாயிரம் படை வீரருடன் வந்து சேர்ந்தான். தாரன் என்னும் வானர வீரன் தன் இரண்டா யிரம் படைகளுடன் வந்து சேர்ந்தான். கரடி இனத் தலைவனான தூமிரன் இரண்டாயிரம் கரடிப்படையுடன் அங்கு வந்து சேர்ந்தான். பனசன், பெரிய மலையைப் போன்ற உருவம் கொண்ட மாபெரும் தலைவன் தன் பன்னிரெண்டாயிரம் படை வீரர்க ளுடன் அங்கு வந்து சேர்ந்தான். ★வானர வீரனான நீலன் தன் பதினைந்து ஆயிரம் நெடிய வானரப் படையுடன் வந்து சேர்ந்தான். கவயன் எனும் வீரன் முப்பதினாயிரம் சேனை யுடன் அங்கு வந்து சேர்ந்தான். ஆறைந்து தன் முப்பது ஆயிரம் குரங்குச் சேனையுடன் அங்கு வந்தான். தரிமுகன் என்பவன் தன் பெரிய படையான அறுபது ஆயிரம் படைவீரருடன் வந்து சேர்ந்தான். ராமரின் உத்தரவுப்படி சுக்ரீவன் தன் சேனாதிபதிகளை அழைத்து அவர்க ளுடன் வெகு தீவிரமாக ஆலோசித்து ஒரு கூட்டத்திற்கு ஒரு தலைவனை நியமித்து எட்டு திசைகளுக்கும் சென்று சீதையை தேட ஆணை இட்டான். ★சுக்ரீவன், அனுமனிடம் பேச ஆரம்பித்தார். நீ சீதையை கண்டு பிடிக்கும் ஆற்றல் உடையவன். உன் தந்தையின் வேகமும் நல்ல பலத்தை யும் நீ பெற்றிருக்கிறாய். பலம், அறிவு, உபாயம் ஆகிய அனைத்தும் உன்னிடத்தில் நிறைவுடன் இருக்கி ன்றது. எனவே சீதையை தேடும் இந்த பொறுப்பை உன்னிடமும் ஒப்படைக்கிறேன். உன்னை நான் இந்தப் பெரும் காரியத்தில் நம்பி யிருக்கிறேன். உனக்குச் சமமாக வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை. நீ அங்கதனுடன் சென்று சீதை எங்கிருக்கிறாள் என்பதை அறிந்துவா! என்று அனுமனுக்கு ஆணை பிறப்பித்தான் சுக்ரீவன். ★வடக்கே சதபலி என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். கிழக்கு பக்கமாக வினதன் என்கின்ற வானர வீரன் தலைமையில் சென்றார்கள். மேற்கே சுஷேணன் என்கின்ற வானர வீரன் தலைமை யில் சென்றார்கள். அன்னையை அந்த அரக்கன் தெற்குதிசை நோக்கி அழைத்துச் செல்வதை கீழிருந்து நாம் கண்டோம். ஆகவே நீ தெற்கு திசை நோக்கி புறப்பட்டுவெற்றி பெற்று வா என்று அனுமனிடம் சுக்ரீவன் கூறினான். அதன் பின்னர் தெற்கே அனுமன் மற்றும் அங்கதன் தலைமையில் சென்றார்கள். எப்படியாவது சீதையை கண்டு பிடிக்க வேண்டும். எங்கே ஒளித்து வைக்கப்பட்டிருந்தாலும் அவர்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும் அதற்கான மன வலிமை உடல் வலிமை உங்களிடம் இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் கட்டாயம் திரும்பி வந்து என்னிடம் சொல்ல வேண்டும் என்று மிகுந்த கண்டிப்பாக ஆணை இட்டான் ★சுக்ரீவன், எட்டு திசைகளில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் எப்படி செல்ல வேண்டும் என்றும் அதற்கான வழிகளையும் தெளிவாக வானர வீரர்களின் கூட்டங்களுக்கு விளக்கிச் சொல்லி அனுப்பினான். வானர கூட்டங்கள் புற்றிலிருந்து ஈசல் வேகமாக கிளம்புவது போல் எட்டு திசைகளுக்கும் பிரிந்து சென்றனர். ராமர் சீதையை கண்டு பிடிக்கும் காரியத்தை அனுமன் சரியாக செய்து முடிப்பார் என்று எண்ணினார். எந்தவிதமான இடையூறுகள் வந்தாலும் அதனை நீக்கி செய்து முடிப்பான் அனுமான் என்பதை உணர்ந்தார். ★அனுமனை தன்னருகே அழைத்தார் ராமார். தன்னுடைய மோதிரத்தை அனுமனிடம் கொடுத்தார். உன்னால் சீதை கண்டு பிடிக்கப்பட்டால் இந்த மோதிரத்தை அவளிடம் நீ காட்டு இந்த மோதிரத்தை பார்த்தவுடன் நீ என்னுடைய தூதன் என்பதை அவள் அறிந்து கொள்வாள். விரைவில் அவளை மீட்பேன் என்ற செய்தியை அவளிடம் சொல்லி அவள் இருக்குமி டத்தை விரைவில் அறிந்துவா. நான் சீதையை மறுபடியும் அடையும்படி செய்வாயாக என்று ராமர் அனுமனி டம் கூறினார். விரைவில் சீதை இருக்குமிடம் அறிந்து கொண்டு தங்களை வந்து சந்திக்கிறேன் என்று ராமரை வணங்கி விடைபெற்றுக் கொண்டு சென்றார் அனுமான். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869. நாளை................. -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduYA7Yk-rcqaPZ7CP%2BRJorL%3D4E%3D1Rf2JaBE7xpfyAtcNw%40mail.gmail.com.
