ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~
186 /05-02-2026

சுந்தர காண்டம் -
முன்னுரை ..4

★சுந்தரகாண்டம் என்னும் பெயரை சொல்லும்போதே மனத்தில் ஒரு குதூகலம்
ஏற்படுகிறது. வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம் என்று கூறுவதை உணர்த்தும்
படலம் என்பதால் ராமாயணத்தில் இந்தப் பகுதிக்குள்ள ஏற்றம் அது. நமது
இதிகாசங்களில் மிக உயர்ந்தது  ராமாயணம், அதிலே மிக உயர்ந்தது சுந்தர காண்டம்.
அற்புதமான சுந்தர காண்டம் பற்றிய அழகான ஸ்லோகம் இது.

"ஸுந்தரே ஸுந்தரோ ராம:
ஸுந்தரே ஸுந்தரி கதா
ஸுந்தரே ஸுந்தரி ஸீதா
ஸுந்தரே ஸுந்தரம் வநம்
ஸுந்தரே ஸுந்தரம் காவ்யம்
ஸுந்தரே ஸுந்தரோ கபி:
ஸுந்தரே ஸுந்தரம் மந்த்ரம்
ஸுந்தரே கிம் ந ஸுந்தரம்"

அழகான சுந்தர காண்டத்தில் ராமபிரான் அழகு, அன்னை சீதா அழகு, சுந்தரியான
சீதையைப் பற்றி பேசுகிற காண்டம். அதனால் சுந்தர காண்டம் என்று பெயர். சுந்தர
காண்டம் கதை அழகு, அசோகவனம் அழகு, வானரர்கள் அழகு, சுந்தர காண்டத்தில் உள்ள
சொற்கள் அழகு, நல்ல பலனைக் கொடுக்கும் அந்த மந்திரங்கள் அழகு, காண்டம்
முழுவதும் காணப்படும் அனுமன் அழகு. சுந்தர காண்டத்தில் எல்லாமே அழகுதான்!
அனுமனுக்கு அவர் தாயார் அஞ்சனை வைத்தப்  பெயர் சுந்தரன். அவரின் சாகசங்களை
சொல்லும் படலம் என்பதாலும் இப்பெயர்.

★ராமாயணத்தில் 'சுந்தர காண்டம்' தான் மிகச்சிறந்தது என்று போற்றப் படுகிறது.
மற்ற காண்டங்கள் கதாநாயகன் என ஶ்ரீராமனைப்
பற்றித்தான் அதிகம் பேசுகிறது. ஆனால் 'சுந்தரகாண்டம்' ஒன்றுதான் பிராட்டி
சீதையைப் பற்றியும் பக்தன் ஆஞ்சனேயரைப் பற்றியும் சிறப்பாக
கூறுகிறது.  ஸ்ரீவைஷ்ணவத்தில், பகவானை விட பிராட்டிக்குத்தான் ஏற்றம் அதிகம்.
பகவானுடைய அடிகளை நாம் அத்தனை போற்றுகி றோமே அதற்கு அந்த பிராட்டிதான் காரணம்.
பாற்கடலில் அவன் தூங்கு ம்போது அவன் பாதங்களை பிராட்டி வருடி விடுவதின்
காரணமாக அவன் பாதங்கள் தனி சக்தியை பெறுகின் றன. ஆக அந்தப் பிராட்டியைப்
பற்றியும், பக்தன் ஆஞ்சனேயரைப் பற்றியும் முழுவதும் பேசுவதால் 'சுந்தர
காண்டம்'   முக்கியத்துவம் பெறுகிறது.

★ஹனுமாரின் சாகச செயல்களை விவரிக்கும் இந்த காண்டத்திற்கு வால்மீகி முதலில்
'ஹனுமத்
காண்டம்' என்று பெயரிட்டார். உடனே ஹனுமார் அவர் முன் தோன்றி தன் பெயரில் ஒரு
காண்டமும் இருக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
உடனே வால்மீகிக்கு ஆஞ்சனேயர் குழந்தையாக இருந்த காட்சி கண் முன் வர, அவருடைய
தாயாரான
அஞ்சனா தேவி சிறு குழந்தை ஹனுமனை ''சுந்தரா'' என்று மிக்க வாஞ்சையுடன் கூவி
அழைத்தது தெரிந்தது. ஆகவே அக்காண்டத்தி ற்கு 'சுந்தர காண்டம்' என்று பெயர்
சூட்டினார். பாவம் ஹனுமார்! ராமர்
அழகானவர் ஆனதால் அவருடைய பெயர்தான் வைக்கப்பட்டுள்ளது என்று சந்தோஷமடைந்தார்.

★இது ஏன் சுந்தர காண்டம் என்றால் பகவானுடைய திவ்ய மங்கள உருவம் மிக அழகாக
வர்ணிக்கப்படுகிறது. ராமனுடைய அழகை அனுமன் சீதை
க்கு மிக அழகாக வர்ணிக்கிறார்.
உபமானங்கள் சிறந்து விளங்குவது இந்த காண்டத்தில்தான். இலங்கை யில் ஹனுமான்
சந்திரோதயத்தை வர்ணிப்பதை இன்றெல்லாம் படித்து மகிழலாம். அனுமன் என்னும் பக்த
ரத்தினம், சுந்தர காண்டம் என்னும் மந்திர ரத்தினம் ஆகிய இரண்டு ரத்தினங்களை
ராமாயணம் என்னும்
பொக்கிஷம் நமக்கு அளித்துள்ளது.

★பக்தர்களில் சிறந்தவர் அனுமன். கணப்பொழுதும் ராம நாமத்தை மறவாதவர் அவர்.
ராமரின் அருளை விரைவில் அடைய விரும்புவோர்
ஒருமுறை 'ஸ்ரீராமஜெயம்' என்று சொல்லி அனுமனை சரணடைந்தால் போதும். இதனால்தான்
அவர் 'பக்த ரத்தினம்' என போற்றப்படுகிறார்.
வாழ்வில் எத்தகைய துன்பம், தடை கள், கவலைகள் குறுக்கிட்டாலும் மந்திர
ரத்தினமாகிய சுந்தர காண் டத்தை படித்தால் சூரியனைக் கண்ட பனிபோல அவைகள்
பறந்தோடும்.
அனுமனின் அருள் பெற நிச்சயம் 'சுந்தரகாண்டம்' சிறந்த வழி. இனி
ஶ்ரீராமகாவியத்தில் நுழையலாம்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை......................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsPNcmjvhL-FERumjceG-5USqRAzzosgddBRREQE4cKPA%40mail.gmail.com.

Reply via email to