ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~
185 /04-02-2026
சுந்தர காண்டம் -
முன்னுரை ..3
★அனுமன் உத்வேகத்துடன் மலை யிலிருந்து தாவிய அழகைப்பற்றி தன் எழுத்துகளில்
ஜாலம் புரிகிறார்.
"வன் தந்த வரிகொள் நாகம்
வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள் தோறும்
புறத்து உராய்ப் புரண்டு பேர்வ,
நின்று, அந்தம் இல்லான், ஊன்ற,
நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப்
பிதுங்கின குடர்கள் மான".
இதன் பொருள் என்னவென்றால்,
அனுமன் தன் காலை அழுத்தி ஊன்றி மேலே கிளம்பிய போது , அந்த நீல நிற மலையில்
உள்ள குகைகளில் இருந்த பாம்புகள் நெருப்பைக் கக்கிக் கொண்டு வெளியே
வந்தன.அது , ஏதோ அந்த மலையின் வயிறு பிளந்து அதன் குடல் வெளியே வந்தது மாதிரி
இருந்தது.
★எந்த வேலையையும் , தொடங்கும் போது உங்கள் அனைத்து ஆற்றலை யும் சேர்த்து
தொடங்குங்கள்.
மிக நன்றாக தொடங்கப்பட்ட எந்த
முயற்சியும் 50%சதவீதம் முடிந்ததைப் போன்றதே ! என்று சொல்வதுண்டு.
அது வெற்றியின் முதல் படி.
★எந்த காரியத்தை எடுத்தாலும் அதில் ஒரு உறுதி (Commitment)
வேண்டும். உடற் பயிற்சி செய்யப் போகிறேன், உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கப்
போகிறேன், இந்த படிப்பு (Course) படிக்கப் போகிறேன், என்று எதை எடுத்தாலும்
ஒரு உறுதி வேண்டும். எதையும் உறுதியோடு ஆரம்பித்தால் , உலகம் உங்கள் பின்னால்
நிற்கும். நீங்கள் எதிர் பார்க்காத இடத்தில் இருந்து உதவி தானே வரும். அனுமன்
இலங்கை நோக்கி செல்லத் தொடங்குகிறான்.
வானவர்களும், தேவர்களும் மற்றையவர்களும் வந்து நின்று அவன் மேல் பூ மாறி
பொழிந்து "வென்று வருக" என்று வாழ்த்துச் சொன்னார்கள். நீங்கள் ஒரு நல்ல
காரியத்தை , உறுதியோடு ஆரம்பியு ங்கள். மூவரும், தேவரும் உங்கள் பின்னால்
இருப்பார்கள். உறுதியாக நம்புங்கள்.
★ஶ்ரீராம காவியம் தரும் நம்பிக்கை இது. யார் நமக்கு உதவுவார்கள் என்று
சோர்ந்து இருக்காதீர்கள்.
எழுந்து சுறு சுறுப்பாக காரியத்தில் இறங்குங்கள். உதவி வரும். அனுமன்
தேவர்களின் உதவியைக் கேட்க வில்லை. அவர்களே வந்து வாழ்த்துச் சொன்னார்கள்.
அப்படி , உயர்ந்த ஆசீர்வாதம் உங்களுக்கும் நிச்சயம் கிடைக்கும். இதைத்தான்
கம்பர் தன்
பாடல் வரிகளில் மிக அழகாக
கூறுகிறார்..
"இத் திறம் நிகழும் வேலை,
இமையவர், முனிவர், மற்றும்
முத்திறத்து உலகத்தாரும்,
முறைமுறை விசும்பின் மொய்த்தார்,
கொத்து உறு மலரும், சாந்தும்,
சுண்ணமும், மணியும், தூவி,
‘வித்தக! சேறி ‘என்றார்;
வீரனும் விரைவது ஆனான்".
இதன் யாதெனில் பொருள் இப்படி யாக நிகழும் நேரத்தில் தேவர்கள், முனிவர்கள்
மேலும் மூன்று உலகில் உள்ள அனைவரும் வரிசை வரிசை யாக மலையின் கண் வந்து
சேர்ந்த னர். கொத்து கொத்தாகவிருக்கும் மலர்களையும்,சந்தனமும், வாசனைப்
பொடிகளையும், மணிகளையும் தூவி அறிஞனே! சென்று வா என்றார்கள். அந்த அனுமனும்
விரைந்தான்
★சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது மனதுக்கு நிம்மதி, தைரியம் தரும்.
நோயுற்றவர்கள், குழந்தைகளின் திருமணச் செலவு போன்ற இக்கட்டான நிலையில்
உள்ளவர்களும், வரன் தேடுபவர்களும் இதைப் படித்தால் அல்லது கேட்டால் உரிய பலன்
கிடைக்கும் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையாகும்.
நாளை.......................
--
You received this message because you are subscribed to the Google Groups
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email
to [email protected].
To view this discussion visit
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3Ddu_GMgWxeGR7pO_ddrah9VW-kz4c_DAZZbMs5PGTPMTiQ%40mail.gmail.com.