Sir, I do not know Tamil.Please give your posts in English also. YM Sarma On Sun, Mar 22, 2026 at 10:50 AM Venkatachalam Subramanian < [email protected]> wrote:
> ஶ்ரீராம காவியம் > ~~~~~~~~~~~~~ > 200 / 19-02-2026 > > அரக்கியரின் > அச்சுறுத்தல்... > > ★ராவணன் திரும்பி சென்ற பிறகு அரக்கிகள் சீதையை சூழ்ந்து கொண்டனர். அவர்கள் > சீதையிடம், அரசன் ராவணன் உன் மீது உண்மை யான ஆசை வைத்து இருக்கிறார். அவரை நீ > ஏற்றுக் கொள். இல்லை யேல் உன்னை நாங்களே கொன்று தின்று விடுவோம் என்றனர். நீ > ராவணனை ஏற்றுக் கொள்ள முடி யாது என்றால் உன்னால் உயிர் வாழ முடியாது. இனியும் > ராமன் இங்கு வந்து உன்னை காப்பாற்றுவான் என எண்ணிக் கொண்டு இருக்காதே. > > ★ராவணன் இம்மூவுலகுக்கும் அதிபதி ஆவான். அவனை நீ ஏற்று கொள்வதை விட உனக்கு > வேறு வழி இல்லை என பலவாறு சீதையை துன்புறுத்திக் கூறினர். இவர்களின் > துன்புறுத்தல்களை கேட்ட திரிசடை தூக்கத்தில் இருந்து எழுந்தாள். உடனே அவள் > மற்ற அரக்கிகளிடம், இனியும் நீங்கள் சீதையை துன்புறுத் துவதை நிறுத்திக் > கொள்ளுங்கள். சீதையின் கணவன் ராமன், சீதையை மீட்டுச் செல்ல போகிறார். இது நான் > கண்ட கனவு ஆகும். பொதுவாக விடியற்காலையில் காணும் கனவு கள் பலிக்கும் > என்றுதான் சொல்வார் கள் என்றாள். > > ★இதைக் கேட்ட மற்ற அரக்கிகள் உன் கனவை விரிவாக கூறு என்றனர். வெள்ளைக் > குதிரை கொண்ட தங்கத்திலான புஷ்பக தேரில் ராமனும் லட்சுமணனும் வந்து இந்த > சீதையை மீட்டுச் சென்றனர். ராவணன் அத்தேரில் இருந்து தள்ளப்பட்டு, கழுதை மீது > ஏறி தென் திசை நோக்கிச் சென்றான். அவனுடன் தம்பி கும்பகர்ணனும் சென்றான். > விபீஷணன் மட்டும் யானை மீது அமர்ந்திருந்தான். இலங்கை நகரம் தீப்பிடித்து > எரிவது போல நான் கனவு கண்டேன் என்றாள். > > ★இதைக் கேட்ட சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். திரிசடை! நீ கண்ட கனவு > பலித்தால் நான் நிச்சயம் உனக்கு தேவைப்படும் உதவி செய்வேன் என்றாள். > இருந்தாலும் சீதை, ராவணனின் தொல்லைகளையும், மற்ற அரக்கிகளின் பயங்கரமான > அச்சுறுத்தல்களையும் நினைத்து மிகவும் வேதனையடைந்தாள். > ஆனால் ஒவ்வோரு ராட்சசிகளாக மாற்றி மாற்றி சீதையிடம் பேசிக் கொண்டே > இருந்தார்கள். அரக்கன் > ராவணனைப் பற்றி மிகவும் பெருமையாகவும், ராமரை சிறுமைப் படுத்தியும் தங்களால் > இயன்ற வரை அமைதியாகவும், சில நேரங்களில் பயமுறுத்தியும் பேசினார்கள். இறுதி > யில் ஒருத்தி சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டோம் இனி உன்னுடைய > விருப்பம் என்று கூறினாள். > > ★ராமர் எப்படியும் நாம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, இந்த ராட்சதர்கள் > அனைவரையும் அழித்து, நம்மை மீட்பார் என்று மன தைரியத் தில் இருந்த சீதை, அந்த > ராட்சசிக ளிடம் பேச ஆரம்பித்தாள். சூரியனை சுற்றி அதனுடைய பிரகாசமானது பரவி > நிற்பது போல் நான் எனது பதி ராமனை சுற்றியே நின்று கொண்டி ருப்பேன். நீங்கள் > என் ராமரைப் பற்றிய மிகத் தவறான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகி > ன்றீர்கள். ஒரு மனிதப் பெண்ணை ஒரு ராட்சசன் விரும்புவது சற்றும் முறையில்லை. > ஒரு மனித பெண் எப்படி ஓர் ராட்சதனுடன் இருக்க முடியும்?. > > ★நீங்கள் சொல்வது அனைத்தும் பாவகரமான வார்த்தைகளாக இருக்கிறது என்றாள். > இதனைக் கேட்ட ஒரு ராட்சசி, சீதையிடம் பேசி பிரயோஜனம் இல்லை, அவளைத் தின்று > விடலாம் என்றாள். உடனே இன்னொரு ராட்சசி, அவள் மார்பை கிழித்து அந்த இதயத்தை > நான் தின்று விடுகிறேன் என்றாள். ராவணன், சீதை எங்கே என்று கேட்டால், சீதை > துக்கத்தில் இறந்து விட்டாள் என்று நாம் சொல்லி விடலாம். இதனால் ராவணன் இனி > எந்த கவலையும் சிறிதும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவார். இப்போது இவளை நாம் > அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருப்போம். பிறகு ஒவ்வொரு > ராட்சசியும் தனது பங்கிற்கு சீதையின் ஒவ்வொரு பாகமாக சொல்லி, தின்று விடுவதாக > தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தார்கள். > > ★ராட்சசிகளின் கொடூரமான பேச்சை கேட்ட சீதை, ராமரை நினைத்துக் கொண்டாள். > தண்டகாரண்ய காட்டில் சுமார் 14000 ராட்சசர்களை சில கணங்களில் கொன்ற ராமர், > ஏன் இன்னும் என்னை மீட்டு போக இங்கு வரவில்லை? நான் இருக்கும் இடம் இன்னும் > அவருக்குத் தெரியவில் லையா? தெரிந்தால் சும்மா இருப்பாரா? என்று நினைத்துக் > கொண்டே பலமாக வாய்விட்டு அழுதாள். சீதையின் அழுகையை கண்டு கொள்ளாத ராட்சசிகள் > அவளை பயமுறுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணி, சீதையை > எப்படி உண்பது என்று அவள் முன்பாக பயமுறுத்தி பேசிக்கொண்டே இருந்தார்கள். > > வணக்கத்துடன் > நாக சுபராஜராவ் > 9944110869. > > நாளை.................... > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsRU6biVz3vip5pZ4Scy1s91vEedY7DWZfScbW0O9RHFw%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsRU6biVz3vip5pZ4Scy1s91vEedY7DWZfScbW0O9RHFw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- *Mar* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CACDCHCJXfydEz7D8UZgb3Z0Vgpb4nhc5vY%2B5FWVFO8eNx_PVTg%40mail.gmail.com.
