ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~
200 / 19-02-2026

அரக்கியரின்
அச்சுறுத்தல்...

★ராவணன் திரும்பி சென்ற பிறகு அரக்கிகள் சீதையை சூழ்ந்து கொண்டனர். அவர்கள்
சீதையிடம், அரசன் ராவணன் உன் மீது உண்மை யான ஆசை வைத்து இருக்கிறார். அவரை நீ
ஏற்றுக் கொள். இல்லை யேல் உன்னை நாங்களே கொன்று தின்று விடுவோம் என்றனர். நீ
ராவணனை ஏற்றுக் கொள்ள முடி யாது  என்றால் உன்னால் உயிர் வாழ முடியாது. இனியும்
ராமன் இங்கு வந்து உன்னை காப்பாற்றுவான் என எண்ணிக் கொண்டு இருக்காதே.

★ராவணன் இம்மூவுலகுக்கும் அதிபதி ஆவான். அவனை நீ ஏற்று கொள்வதை விட உனக்கு
வேறு வழி இல்லை என பலவாறு சீதையை துன்புறுத்திக் கூறினர். இவர்களின்
துன்புறுத்தல்களை கேட்ட திரிசடை தூக்கத்தில் இருந்து எழுந்தாள். உடனே அவள்
மற்ற அரக்கிகளிடம், இனியும் நீங்கள் சீதையை துன்புறுத் துவதை நிறுத்திக்
கொள்ளுங்கள். சீதையின் கணவன் ராமன், சீதையை மீட்டுச் செல்ல போகிறார். இது நான்
கண்ட கனவு ஆகும். பொதுவாக விடியற்காலையில் காணும் கனவு கள் பலிக்கும்
என்றுதான் சொல்வார் கள் என்றாள்.

★இதைக் கேட்ட மற்ற அரக்கிகள் உன் கனவை விரிவாக கூறு என்றனர்.  வெள்ளைக் குதிரை
கொண்ட தங்கத்திலான புஷ்பக தேரில் ராமனும் லட்சுமணனும் வந்து இந்த சீதையை
மீட்டுச் சென்றனர். ராவணன் அத்தேரில் இருந்து தள்ளப்பட்டு, கழுதை மீது ஏறி
தென் திசை நோக்கிச் சென்றான். அவனுடன் தம்பி கும்பகர்ணனும் சென்றான். விபீஷணன்
மட்டும் யானை மீது அமர்ந்திருந்தான். இலங்கை நகரம் தீப்பிடித்து எரிவது போல
நான் கனவு  கண்டேன் என்றாள்.

★இதைக் கேட்ட சீதை மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். திரிசடை! நீ கண்ட கனவு
பலித்தால் நான் நிச்சயம் உனக்கு தேவைப்படும் உதவி செய்வேன் என்றாள்.
இருந்தாலும் சீதை, ராவணனின் தொல்லைகளையும், மற்ற அரக்கிகளின் பயங்கரமான
அச்சுறுத்தல்களையும் நினைத்து மிகவும் வேதனையடைந்தாள்.
ஆனால் ஒவ்வோரு ராட்சசிகளாக மாற்றி மாற்றி சீதையிடம் பேசிக் கொண்டே
இருந்தார்கள். அரக்கன்
ராவணனைப் பற்றி மிகவும் பெருமையாகவும், ராமரை சிறுமைப் படுத்தியும் தங்களால்
இயன்ற வரை அமைதியாகவும், சில நேரங்களில் பயமுறுத்தியும் பேசினார்கள். இறுதி
யில் ஒருத்தி சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி விட்டோம் இனி உன்னுடைய
விருப்பம் என்று கூறினாள்.

★ராமர் எப்படியும் நாம் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, இந்த ராட்சதர்கள்
அனைவரையும் அழித்து, நம்மை  மீட்பார் என்று மன தைரியத் தில் இருந்த சீதை, அந்த
ராட்சசிக ளிடம் பேச ஆரம்பித்தாள். சூரியனை சுற்றி அதனுடைய பிரகாசமானது பரவி
நிற்பது போல் நான் எனது பதி ராமனை சுற்றியே நின்று கொண்டி ருப்பேன். நீங்கள்
என் ராமரைப் பற்றிய மிகத் தவறான தகவல்களை தெரிந்து வைத்துக் கொண்டு பேசுகி
ன்றீர்கள். ஒரு மனிதப் பெண்ணை ஒரு ராட்சசன் விரும்புவது சற்றும்  முறையில்லை.
ஒரு மனித பெண் எப்படி ஓர் ராட்சதனுடன் இருக்க முடியும்?.

★நீங்கள் சொல்வது அனைத்தும் பாவகரமான வார்த்தைகளாக இருக்கிறது என்றாள். இதனைக்
கேட்ட ஒரு ராட்சசி, சீதையிடம் பேசி பிரயோஜனம் இல்லை, அவளைத் தின்று விடலாம்
என்றாள். உடனே இன்னொரு ராட்சசி, அவள் மார்பை கிழித்து அந்த இதயத்தை நான்
தின்று விடுகிறேன் என்றாள். ராவணன், சீதை எங்கே என்று கேட்டால், சீதை
துக்கத்தில் இறந்து விட்டாள் என்று நாம் சொல்லி விடலாம். இதனால் ராவணன் இனி
எந்த கவலையும் சிறிதும் இல்லாமல் நிம்மதியாகத் தூங்குவார். இப்போது இவளை நாம்
அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருப்போம். பிறகு ஒவ்வொரு
ராட்சசியும் தனது பங்கிற்கு சீதையின் ஒவ்வொரு பாகமாக சொல்லி, தின்று விடுவதாக
தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

★ராட்சசிகளின் கொடூரமான பேச்சை கேட்ட சீதை, ராமரை நினைத்துக் கொண்டாள்.
தண்டகாரண்ய காட்டில் சுமார்  14000 ராட்சசர்களை சில கணங்களில் கொன்ற ராமர்,
ஏன் இன்னும் என்னை மீட்டு போக இங்கு வரவில்லை? நான் இருக்கும் இடம் இன்னும்
அவருக்குத் தெரியவில் லையா? தெரிந்தால் சும்மா இருப்பாரா? என்று நினைத்துக்
கொண்டே பலமாக  வாய்விட்டு அழுதாள். சீதையின் அழுகையை கண்டு கொள்ளாத ராட்சசிகள்
அவளை பயமுறுத்தி தங்கள் வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்று எண்ணி, சீதையை
எப்படி உண்பது என்று அவள்  முன்பாக  பயமுறுத்தி பேசிக்கொண்டே இருந்தார்கள்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை....................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdsRU6biVz3vip5pZ4Scy1s91vEedY7DWZfScbW0O9RHFw%40mail.gmail.com.

Reply via email to