A GREAT WORK KR 280326 On Fri, 27 Mar 2026 at 21:30, Venkatachalam Subramanian < [email protected]> wrote:
> ஶ்ரீராம காவியம் > ~~~~~~~~~~~~~~~~ > 212 / 03-03-2026 > > இநதிரஜித்... > > ★அரசே! அந்த குரங்கின் மிகுந்த வலிமையை அறிந்த பின்பும் தாங்கள் அரக்கர்களை > அந்த கொடிய குரங்கிடம் அனுப்பி, எமலோகத்திற்கு அவர்களை அனுப்புகிறீர்கள். > அப்படித்தான் கிங்கர அரக்கர்கள், ஐந்து சேனைத்தலைவர்கள், என் தம்பி அட்சய > குமாரன் என ஒருவர் பின் ஒருவராக இறந்து போயினர். இவ்வளவு பேரையும் கொன்ற பிறகு > அக்குரங்கை சும்மா விடுவது சரியல்ல. நான் சென்று அக்குரங்கை கணப்பொழுதில் > பிடித்து வருகிறேன். தாங்கள் வருந்த வேண்டாம் என்றான் > இந்திரஜித். ராவணன் அவனை கட்டித் தழுவிக் கொண்டு பேச ஆரம்பித்தான். > > ★இந்திரனுக்கு சமமான வீரன் > நீ ஆவாய். அனைத்து விதமான அஸ்திரங்களையும் நன்றாக பயின்று அதனை அடைந்து > இருக்கிறாய். நம்மை எதிர்த்த தேவர்களையும் அசுரர்களையும் யுத்தத்தில் > வென்றிருக்கிறாய். பிரம்மாவை, கடின தவம் செய்து பூஜித்து அவரிடமிருந்து > உயர்ந்த பிரம்மாஸ்திரம் பெற்று வந்து இருக்கின்றாய். உன்னை எதிர்த்து யுத்தம் > செய்யக் கூடிய வீரர்கள் இந்த உலகத்தில் யாரும் இல்லை. அறிவில் சிறந்த நீ > காரியங்களை மிகச் சரியாக யோசனை செய்வதில் உனக்கு நிகர் யாருமில்லை. > > ★அசோக வனத்தில் ஒரு துஷ்ட வானரம் நம்மை எதிர்த்துக் கொண்டு இருக்கிறது. இது > அந்த தேவர்களின் சூழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் அனுப்பிய > கிங்கரர்கள், ஜம்புமாலி, நம்முடைய , வீரமான சேனாதிபதிகள் 5 பேர், உனது அருமை > தம்பி அட்சயகுமாரன் ஆகிய அத்தனை பேரும் அந்த வானரத்தால் கொல்லப்பட்டனர். நீ > தான் அந்த துஷ்ட வானரத்தை வெல்லும் வல்லமை அதிகமாக கொண்டவன். அந்த வானரத்தை > நமது சேனைகளின் பலத்தால் வெல்ல முடியாது. அந்த கொடிய வானரத்தின் > அறிவாற்றலையும், வல்லமையையும் அத்துடன் அதன் பராக்கிரமத்தையும், சிந்தித்து > பார்த்து உன்னுடைய தவ பலத்தை உபயோகித்து, சிறந்த அஸ்திரத்தை பயன் படுத்தி, > கைது செய்து இங்கே வெற்றியுடன் திரும்பி வா என்று சொல்லி இந்திரஜித்தை அனுப்பி > வைத்தான் ராவணன். > > ★இந்திரஜித், தந்தையை வலம் வந்து ஆசி பெற்றுக்கொண்டு நான்கு சிங்கங்கள் > பூட்டிய தேரில் நின்று, வில்லின் நானை இழுத்து சப்தம் செய்து, அசோக வனத்தை > நோக்கிச் சென்றான். அவன் பின்னே பெரும் ராட்சத சேனைகள் பெரும் கூட்டமாக > வந்தார்கள். அனுமனுக்கு வெகு தூரத்தில் ஒரு கூட்டம் வருவது தெரிந்தது. > மீண்டும் யுத்தம் செய்வதற்கு தயாரானான். இந்திரஜித்தின் அரக்கர் படைகள் > அனுமனை சூழ்ந்துக் கொண்டன. > > ★அனுமன் தன் விஸ்வரூபத்தை எடுத்தான்.அனுமன் தன் அருகில் இருந்த ஆச்சா மரத்தை > பிடுங்கி அரக்கர்களிடம் போரிட்டான். அரக்கர் படை அனைத்தையும் கொன்றான். பிறகு > அனுமன் தன் தோள்களைத் தட்டி என்னிடம் போருக்கு வாருங்கள் என முழக்கமிட்டான். > அரக்கர்களுக்கு அழிவு வந்துவிட்டது என்றான். இதைக்கேட்ட இந்திரஜித், உன் > எண்ணத்திற்கு நான் முடிவு கட்டுகிறேன் எனக்கூறி அனுமன் மீது அம்புகளை ஏவினான். > இந்திரஜித் தன்னுடைய வில்லை எடுத்து அம்புமழை பொழிந்தான். அனைத்து அம்புகளில் > இருந்தும் அனுமன் லாவகமாக தப்பினான். > > ★சில அம்புகள் அனுமன் மீது பட்டாலும் அந்த அம்புகளால் அனுமனின் வஜ்ரம் போன்ற > உடம்பை துளைக்க சிறிதும் முடியவில்லை. இந்திரஜித் விட்ட அம்புகள் அனைத்தும் > பயன் அற்றுப் போனது. ராட்சதர்கள் ஏற்படுத்திய பேரிகை, முரசு மற்றும் நாணோசை > ஆகிய பெரும் சத்தங்களுக்கு எதிராக அனுமனின் கர்ஜனை சத்தம் பெரிதாக இருந்தது. > வீரர்கள் இருவருக்கிடையிலும் நடந்த யுத்தம் இருவரின் அபரிமிதமான > சாமர்த்தியத்தையும், அற்புதமான வலிமையையும் காட்டியது. யுத்தம் நீண்டு கொண்டே > சென்றது. > > ★அனுமன் தன் உடலை மிகவும் பெரிதாக்கிக் கொண்டே சென்றான். இந்திரஜித்தால் > அனுமனை பாதிக்குமேல் காண முடியவில்லை. பிறகு அனுமன், > ஒரு மரத்தை வேரோடு பிடுங்கி இந்திரஜித் மீது எறிந்தான். இதனால் > இந்திரஜித்தின் மணிமுடிகள் உடைந்து கீழே விழுந்தன. இதனால் மிகுந்த கோபங்கொண்ட > இந்திரஜித் அனுமன் மீது ஆயிரக்கணக்கான பாணங்களை ஏவினான். அனுமன், > இந்திரஜித்தை அவன் நின்றிருந்த தேரோடு தூக்கி எறிந்தான். தரையில் விழுந்த > இந்திரஜித் எழுந்து வானில் சென்றான். > > ★என்ன செய்வதென தெரியாத நிலையில் இந்திரஜித், மனதில் > சிந்திக்கத் தொடங்கினான். எத்தனை அம்புகள் விட்டாலும் இந்த வானரத்தை ஒன்றும் > செய்ய முடியவில்லை. தந்தை சொன்னது முற்றிலும் சரியே. நமது தவத்தினால் பெற்ற > அஸ்திரத்தை உபயோகித்து இந்த வானரத்தை அடக்க வேண்டும் என்று ஓர் முடிவு > செயதான். அனுமன் மீது திவ்ய பிரம்மாஸ்திரத்தை ஏவ மனதில் நினைத்தான். அதனால் > அந்த பிரம்மாஸ்திரத்திற்கு விஷேச அர்ச்சனைகளும், பூஜைகளும், வழிபாடுகளும், > செய்து வணங்கி அந்த பிரம்மாஸ்திரத்தை தன் கையில் எடுத்துக் கொண்டான் ராவணன் > மைந்தன் இந்திரஜித். > > வணக்கத்துடன் > நாக சுபராஜராவ் > 9944110869. > > நாளை...................... > > -- > You received this message because you are subscribed to the Google Groups > "Thatha_Patty" group. > To unsubscribe from this group and stop receiving emails from it, send an > email to [email protected]. > To view this discussion visit > https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvgpMRjM8x3fYC_CD7_8peb9N0gOpY1-Vyaaak2Ravrqg%40mail.gmail.com > <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvgpMRjM8x3fYC_CD7_8peb9N0gOpY1-Vyaaak2Ravrqg%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer> > . > -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopOw3ye7aD8zakPTK0nGhrcAHZ%3DbHkmeKT2i6GSg72UqA%40mail.gmail.com.
