THE REALITY SPEAKS WHO UNDER THE SUBJECT COMEDY, SPOILED THE HINDUISM; NEITHER LEARNT NOR RESPECTIVE KR IRS 13626
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Fri, 12 Jun 2026 at 20:39 Subject: Fwd: Nandhu Sundhu To: இன்று க்ரேசி மோகன் அவர்களின் நினைவு நாள். ஏதோ..என்னால் ஆன ஒரு அஞ்சலி. அவர் ஸ்டைலில் ஒரு குட்டி நாடகம். ******************************************* *ஸ்வாதித் திருநாள்* *நந்து சுந்து* மாது செல்போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு ஜானகியைக் கூப்பிடுகிறான். மாது: ஜானகி இங்கே கொஞ்சம் வாயேன். ஜானகி: (உள்ளிருந்து வருகிறாள்) என்ன விஷயம்? மாது: என்னோட தூரத்து உறவு நரசிம்மாச்சாரி இருந்தார் இல்லையோ. அவர் போயிட்டாராம். ஜானகி: தஞ்சாவூர்ல இருந்தாரே..அவரா? நல்லாத்தானே இருந்தார். மாது: ஆமா. 98 வயசுல அகால மரணம். ஜானகி: அகால மரணமா? மாது: ஆமா. ஒரு சின்ன சாக்கடையை தாண்டறதுக்காக காலை அகலமா வைச்சிருக்கார். மனுஷன் உள்ளே விழுந்துட்டார். அகால மரணம். ஜானகி: சே..இப்படி பிறந்த நாள் அன்னைக்கு போயிட்டாரே மாது: ஓ. நரசிம்மாச்சாரிக்கு இன்னைக்கு பிறந்த நாளா? அவர் சாக்கடைலயா பொறந்தாரு? சர்க்கார் ஆஸ்பத்திரில பொறந்ததா தானே சொல்லிகிட்டிருந்தாரு ஜானகி: பொறந்த நாள் அவருக்கு இல்லே.எனக்கு மாது: போன வாரம் தானே உனக்கு பிறந்த நாள் வந்தது. நீ அநியாயத்துக்கு அடிக்கடி பொறக்கறே ஜானகி. ஜானகி: போன வாரம் வந்தது இங்க்லீஷ் பர்த் டே. இன்னைக்கு வர்ரது நட்சத்திர பர்த் டே மாது: ஓ. இது சமஸ்கிருத பர்த்டேவா? ஜானகி: ஆமா பெருமாள் கோவிலுக்கு போய் என் நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்ணிட்டு வாங்க மாது: (யோசிக்கிறான்) இவ என்ன நட்சத்திரம்னு சொல்லவே இல்லையே. எனக்கும் மறந்து போச்சே! ஜானகி: என்ன யோசிக்கறீங்க? மாது: அது வந்து உன் நட்சத்திரம்.. ஜானகி: ஆமா..என் நட்சத்திரத்துக்குத் தான் அர்ச்சனை பண்ணணும். போங்க ஜானகி உள்ளே போகிறாள். மாது: (தனக்குள்) ஹா...ஐடியா. ஜானகி அப்பாவுக்கு போன் செஞ்சு நட்சத்திரம் கேட்டுக்கலாம். போன் செய்கிறான். மாது: (போனில்) மாமா...உங்க பொண்ணு பேருக்கு அர்ச்சனை செய்யணுமாம். உங்க பொண்ணு என்ன நட்சத்திரம்? மாமனார்: எந்த பொண்ணு? ஓ.. ஜானகியோட தங்கச்சி வைதேகி நட்சத்திரத்தை கேக்கறீங்களா? மாது: மாமா. மச்சினி நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்றது தப்பு. மகா விஷ்ணுவே ஒத்துக்க மாட்டார். எனக்கு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சீங்க இல்லே மாமனார்: அப்படியா? மாது: என்ன அப்படியா? மறந்துட்டீங்களா? மாமனார்: உங்களுக்குத்தான் தெரியுமே..எனக்கு கொஞ்சம் ஞாபக மறதி. அல்சமர். மாது: உங்களுக்கு கொஞ்ச நஞ்சமா ஞாபக மறதி? உடம்பு முழுக்க ஞாபக மறதி. உங்களுக்கு இருக்கறது அல்சமர் இல்லே. ஆல்சமர். என் ஒய்ப் ஜானகி இருக்கா இல்லையா? அவ என்ன நட்சத்திரம்? மாமனார்: அது வந்து எனக்கும் தெரியல்லியே மாது: சே..உங்க அம்மா உங்களை இப்படி நட்சத்திரம் தெரியாம வளர்த்திருக்காங்களே..இப்போ என்ன செய்யறது? நான் எந்த நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்றது? மாமனார்: இப்படி பண்ணுங்க. வீட்ல டெய்லி ஷீட் காலண்டர் இருக்கா? மாது: இருக்கு. நயந்தாரா படம் போட்டு ஒரு காலண்டர் இருக்கு மாமனார்: அதுதான். அதுதான் வேணும் மாது: நயந்தாரா வேணுமா? நாரயணா! மாமனார்: அதில்லே. டெய்லி ஷீட் காலண்டர்ல இன்னைக்கு என்ன நட்சத்திரம்னு போட்டிருக்கும். போய்ப் பாருங்க மாது: பாத்தேன் மாமா. தட்சிணாயணம்னு போட்டிருக்கு மாமனார்: அதேதான். தட்சிணாயண நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்ணிட்டு தட்சணை கொடுத்திட்டு வந்திடுங்க. மாது: இல்லே மாமா. எனக்கு என்னவோ தப்பா தெரியுது. ஒரு நட்சத்திரம் ஆறு மாசம் இருக்குமா? கொரானா அலை கூட மூணு மாசம்தான் இருக்குது மாமனார்: ஆமா இல்லே. அஸ்வினி, பரணின்னு ஏதாவது போட்டிருக்கான்னு பாருங்க. மாது: பாத்துட்டேன் மாமா. இன்னைக்கு நட்சத்திரம் ஸ்வாதி. ரொம்ப தாங்க்ஸ் மாமா (கோவிலுக்குப் போகிறான் மாது. அர்ச்சனைத் தட்டு விற்கும் பெண் முன்னால் நிற்கிறான்) மாது: ஸ்வாதி நட்சத்திரத்துக்கு ஒரு அர்ச்சனைத் தட்டு கொடுங்க. பெண்: எல்லா நட்சத்திரத்துக்கும் ஒரே தட்டுதான் ஸ்வாமி. மாது: அதில்லே. நட்சத்திரம் மறக்காம இருக்க ஸ்வாதின்னு அடிக்கடி சொல்லிகிட்டிருக்கேன். பெண்: சரி ஸ்வாதி உள்ளே போகிறான். அர்ச்சகர் வருகிறார். மாது: (அர்ச்சகரிடம்) பெருமாள் அழகா நிக்கறார். அர்ச்சகர்: ஆமா மாது: ஸ்வாதீனமா நிக்கறார். அர்ச்சகர்: என்ன சொல்றேள்? மாது: அர்ச்சனை பண்ணணும். ஜானகிக்கு அர்ச்சகர்: பெருமாளுக்கு தான் அர்ச்சனை செய்ய முடியும். மாது: இல்லே. அர்ச்சனையோட sender ஜானகி. receiver பெருமாள். அர்ச்சகர்: போஸ்ட் ஆபிஸ்ல மணி ஆர்டர் அனுப்பற மாதிரி என்னமோ சொல்றேள். உங்களுக்கு என்ன வேணும்? மாது: என் ஒய்ப் ஜானகிக்கு பொறந்த நாள். அவ ஸ்வாதி நட்சத்திரம். ஒரு அர்ச்சனை பண்ணணும் அர்ச்சகர்: இப்படி தெளிவா சொல்லுங்கோ மாது: அர்ச்சனை பண்றப்ப ஸ்வாதின்னு சொல்றப்ப கொஞ்சம் பலமா சொல்லணும். மைலாப்பூருக்கு கேக்கணும். அர்ச்சனை நடக்கிறது. அர்ச்சகர் மெதுவாக முணுமுணு குரலில் அர்ச்சனை செய்து முடிக்கிறார். மாது: ஸ்வாமீ..ஸ்வாதின்னு சொல்றது மைலாப்பூருக்கு கேக்கணும்னு சொன்னேன். இப்படி mute ல போட்டு முடிச்சிட்டீங்களே? (அர்ச்சகர் குங்குமம் கொடுக்கிறார். அதை ஒரு பேப்பரில் மடித்து கட்டுகிறான் மாது. அதன் மேல் ஜானகி பெயரும் நட்சத்திரமும் எழுதுகிறான் மாது. பிறகு வீட்டுக்குப் போகிறான்) மாது: ஜானகி. அர்ச்சனை முடிஞ்சது. ஜானகி: சந்தோஷம் மாது: உன் நட்சத்திரத்துக்கே செஞ்சேன். அடடா..அருமையான நட்சத்திரமாம். எல்லாரும் சொன்னாங்க. உலகத்துல 27 பேருக்கு ஒருத்தருக்குத் தான் இந்த மாதிரி நட்சத்திரம் அமையுமாம் ஜானகி: ஆமாங்க. என்னோடது அதிர்ஷ்டமான நட்சத்திரம் (மாது குங்கும பொட்டலைத்தை நீட்டுகிறான்) மாது: பாரு. பொட்டலத்து மேல கூட உன் பேர், நட்சத்திரம் எழுதியிருக்கு. ICICI Bank க்ரெடிட் கார்ட் மாதிரி ஜானகி: என்ன இது? ஜாதின்னு எழுதியிருக்கு? மாது: ஐய்யய்யோ..ஸ்வாதியை அவசரத்துல ஜாதின்னு எழுதிட்டேன். அதை அழிச்சிடலாம். ஜாதியை அழிச்சிடலாம் ஜானகி: ஸ்வாதியா? யார் அது? மாது: நீ தான் ஜானகி. மை ஸ்வீட் ஸ்வாதி ஜானகி: நான் கேட்டை மாது: அப்படின்னா? ஜானகி: கேட்டைங்கறது என் நட்சத்திரம் மாது: ஏதோ ரயில்வே ஸ்டேஷன் பேர் எல்லாம் சொல்றே? ஜானகி: அது கோட்டை. Fort ஸ்டேஷன். இது நட்சத்திரம் மாது: ஜானகி. உண்மைய சொல்லிடறேன். உன் நட்சத்திரம் எனக்கு மறந்து போச்சு. டெய்லி ஷீட் காலண்டர்ல பாத்தேன். இன்னைக்கு ஸ்வாதின்னு போடிருந்தது. ஜானகி: அப்படியா? வாங்க காலண்டரைப் பாக்கலாம். (காலண்டரைப் பார்க்கிறார்கள்) ஜானகி: இன்னைக்கு என்ன தேதி? மாது: பத்து ஜானகி: காலண்டர்ல 7 னு போட்டிருக்கு. மாது: அதானே. எப்படி? காலண்டர் வளரவே இல்லே. காம்ப்ளான் சரியா கொடுக்கறதில்லையா நீ? ஜானகி: நீங்க மூணு நாளா தேதியே கிழிக்கல்லே. அதான் நட்சத்திரம் ஸ்வாதிலயே நிக்குது மாது: ஸாரி ஜானகி. இனிமே சரியா கிழிக்கறேன். ஜானகி: சரி. கிளம்புங்க மாது: எங்கே? ஜானகி: கோவிலுக்கு. போய் கேட்டை நட்சத்திரத்துக்கு அர்ச்சனை பண்ணிட்டு வாங்க மாது: போறேன். ஆனா வேற கோவிலுக்குப் போறேன். இல்லேன்னா அந்த அர்ச்சகர் என்னை கேவலமா பாப்பார். ********************************************* -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopP-UOO0%3DkopPaaWRmr%2Ba6Vv_aV%2B7F-%3D86%2Bp%3DJbY0_k6w%40mail.gmail.com.
