சேது, தற்போது உபுண்டு 8.10 இற்கான தபுண்டுவை இறுதிப்படுத்தும் நிலையில் இருக்கிறேன். இந்த நேரத்தில் உங்களுடைய இந்த மடல் பேருதவியாக அமைகிறது.
// ttf-tamil-fonts பொதி இற்றறைப்படுத்தப்பட்ட பின் மங்குதல் இல்லாமலும் எழுத்துகள் சிதையாமலும் முன்னனேற்றப்பட்ட தோற்றத்துக்கு மாறுகின்றன// இதனை நானும் அவதானித்தேன். Hinting=Slight தபுண்டுவால் மாற்றப்பட வேண்டிய நிலை மற்றைய எழுத்துருக்கள் காரணமாக ஏற்படுகிறது. உண்மையில் நாம் பாவிக்கும் கணித்திரைக்கு ஏற்ப நான்கு விதமான combinations இதில் உண்டு. இந்த நான்கையும் உடனுக்குடன் சோதித்து எமது கணித்திரைக்கேற்ற hinting , smoothing போன்றவற்றை அமைத்துக்கொள்வதற்கான நிரல் இம்முறை தபுண்டுவில் இணைக்கப்படுகிறது. (அந்நிரல் துண்டை மட்டும் தனித்தியங்கும்வண்ணம் மாற்றியமைத்து இத்தோடு இணைக்கிறேன். ) //லோகித் தமிழ் மற்றும் TSCu எழுத்துருக்களை அகற்றாமல் sans/serif/monospace எழுத்துருக்களுக்கு சூரியன்டாட்காமை விருப்பத்தேர்வாக்கத் (preferred) தேவையான தொடர்பை (sym link) ஆக்கி மேலும் Hinting=Slight என்பதையும் பாவித்து அமைத்தபின்// முன்பு இந்த படரல் பிரச்சினைக்கு எளிய தீர்வாக ttf-indic-fonts-core பொதியை அகற்றிவிட்டு பயன்படுத்தினேன். ஆனால் குறிப்பாக இந்தப்பிரச்சினை லோகித் தமிழ் இனால் தான் ஏற்படுகிறது. மேலே சொன்னபடியான sym link உருவாக்கப்பட்டால் லோகித் தமிழ் இனை அகற்ற வேண்டியதில்லையா? அப்படியானால் தபுண்டுவைக்கொண்டு மேற்கண்ட symlink உருவாக்கத்தினை செய்யலாமா? // வலைப்பதிவிற்கு பின்னர் கொணரலாம். நான் செய்யாவிடில் நண்பர் மயூரன்அதைச்செய்து உதவி விடுவார் :>)// அடுத்த வேலை அதுதான் ;-) -மு.மயூரன்
hinting.sh
Description: Bourne shell script
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam