வணக்கம்,

சென்னையில் வரும் பிஃப்ரவரி 01, 02, 03  தேதிகளில்  கட்டற்ற மென்பொருள் மாநாடு 
நடைபெற இரு
ப்பது நாமறிந்ததே. இதனுடன் "வேட்கை" எனும் பெயரில் இணை மாநாடு நடத்துவதற்கான 
முயற்சிகள் மே
ற்கொள்ளப்பட்டு வருகின்றன
இதன் பணிகளை மேற்கொள்ளவும் நிகழ்ச்சிகளைத் திட்டமிடவும் குழு ஒன்றின் அவசியத்தினை 
உணர்ந்து 
தங்களனைவருக்கும் இம்மடல் வரைகிறோம்.

வேட்கையின் இலக்குகளாக நாம் அவதானித்துள்ளது,

1) தமிழாக்கம்  - கே பணிச்சூழல், குநோம் முதலியன
2) ஆங்கிலத்தில் தங்கள் சிந்தனைகளை வெளிப்படுத்துவதில் சிரமப் படும், ஆனால் ஆற்றல் 
மிக்கோரை 
இனங்கண்டு நுட்ப விஷயங்களைப் வெளிப்படுத்த வைத்தல்.
3) கணினியில் தமிழ் நுட்ப விஷயங்கள். மின்னெழுத்து, எழுத்துருவாக்கம், தட்டச்சு 
முதலியன
4) எதிர்காலத் திட்டங்கள். குனுகுலம், கணிமொழி முதலியன
5) மற்றவை (ஸ்டால்மேன் கட்டுரைகள் வெளியீடு முதலியவை) 

இது குறித்து நாம் இந்நிகழ்வு நிறைவடையும் வரை தொடர்ச்சியாக சந்திப்பது 
நிகழ்ச்சியை நல்ல முறை
யில் கொண்டுச் செல்ல உறுதுணையாக இருக்கும். வாரந் நோறும் சனிக்கிழமை மாலை 3.00 
மணிக்கு இச் 
சந்திப்பு நடை பெறலாம். இடம்: எம்.ஐ.டி வளாகம், சென்னை

தங்கள் ஒத்துழைப்பையும் கருத்துக்களையும் நாடுகின்றோம்.

அன்புடன்,
ஆமாச்சு

Attachment: signature.asc
Description: This is a digitally signed message part.

-- 
Ubuntu-tam mailing list
[email protected]
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க