வணக்கம், பிப்ரவரி 01, 02, 03 தேதிகளில் நடைபெறவிருக்கும் கட்டற்ற மென்பொருள் மாநாடு நாமறிந்ததே! அது சமயம் "கட்டற்ற கணிநுட்பமும் - தமிழுலகும்" எனும் தலைப்பில் மரத்தடியின் கீழ் இதுவரை நடந்த, நடைபெற்றுக் கொண்டிருக்கிற விடயங்களையும் இனி நடைபெற வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆலோசிக்கலாம். அது சமயம் தாங்களும் இம்மரத்தடி மொக்கையில் ;-) கலந்து கொண்டு சக்கைப் போடு போட உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
துவக்க காலத்திலிருந்து இதற்காகப் பங்களித்தோர் உள்ளிட்ட விவரங்கள், மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள், மேற்கொண்டோர் விவரங்கள் உள்ளிட்ட விடயங்களை அறிய ஆவல். தங்களுக்கு தெரிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். -- அன்புடன், ஆமாச்சு. http://amachu.net வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு!
-- Ubuntu-tam mailing list [email protected] Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam
