Here is my attempt at a translation: Subject: இன்று நடைபெற்ற கூடுதலில்.. Happenings in today's get together
வணக்கம், Greetings! குறிப்பிட்ட தலைப்புகளேதும் இல்லையென்றாலும் இன்றைய கூட்டம் கலகலப்பாக இருந்தது. Even though there was no particular topic for discussion, the gathering was lively. கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்து கொண்டமை பற்றிய சுவையான கசப்பான விஷயங்களை நாகு, விக்னேஷ், அருளப்பன், ஆமாச்சு ஆகியோர் கலகலப்பாக பகிர்ந்து கொண்டனர். கண்காட்சியில் ஏற்பட்ட அனுபவங்களும் தமிழ் இணைய மாநாட்டு அனுபவங்களும் சுவாரஸ்யமாக இருந்தன. பார்க்காத பேசிராத பலரையும் ஒன்று கூட்டுவதே இத்தகைய நிகழ்வுகளின் சிறப்பாகையால் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படுவது நல்லது என பகிர்ந்து கொள்ளப்பட்டது. Nagu, Vignesh, Arulappan and Amachu shared the positive and negative experiences which they had while they participated in the World Tamil Conference in Coimbatore. In particular, they spoke about their experiences in the exhibition and the Tamil Web conference, all of which were very interesting. Bringing together several people, who were hitherto unknown to each other is the speciality of these events, and this is what would make it good to conduct these events on a regular basis. கலந்து கொண்டு பங்களித்தோர் விரைவில உபுண்டு குரு டி சட்டை பெற இருக்கிறார்கள். All participants shall soon receive a Ubuntu Guru T-shirt. தொடர்ந்து ஐ லக்சி மடலாடற் குழுவில் தமிழ் மொழி மடல்கள் இடுவது தொடர்பாக தீடிரென பூதாகாரமாக கிளப்பப்பட்ட விஷயங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. தீர்வாக தமிழகத்தை மையமாகக் கொண்ட மடலாடற் குழுவொன்று இருக்கலாம் என்ற எம் ஐ டி மாணவர்களின் விருப்பங்களும் அலசப்பட்டன. நிறைய பேர் தமிழில் தொடர்ச்சியாக ஆக்கபூர்வமாக மடலாட இருக்கிறார்கள் என்கிற போது தொடங்குவது நல்லது என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. அது ஐ லக்சியின் மடலாடற் குழுவாக இருக்காதாகையால் ஐ லக்சியில் தொடர்ந்து தமிழில் எழுதலாம் என்றும் கருத்து வெளியிடப்பட்டது. A discussion was also held on the sudden and wild discussion and debate on the issue of Tamil e-mails on the ILUGC mailing list. The MIT students' proposal of having a separate Tamil Nadu focused mailing list was also discussed. Since several people intend to communicate on a regular basis in Tamil, the practice of Tamil mails will continue. Even otherwise, it was made known that people could continue writing Tamil mails in ILUGC. அடுத்த மாதம் நடைபெற இருக்கும் கூட்டமானது காலத்தால் சற்றே கூடுதலாக அமைந்து தமிழ்க் கணிமைத் திட்டங்களுக்கான காலக்கோடொன்றினை ஏற்படுத்தலாம் என்று பகிர்ந்து கொள்ளப்பட்டது. பணித்திட்டங்களை செயற்படுத்த தேவைப்படும் நிதியை திரட்டும் பணியை யாவர்க்குமான் மென்பொருள் அறக்கடளை ஏற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. Since there would be several attendees in next month's meeting, a suggestion was made to have a timetable for programs on Tamil computing. "Yaavarkkumaan Menporul" organization may hold the responsibility for arranging funds for the programs. உபுண்டு தமிழ்க் குழுமத்தின் அங்கிகாரம் காலவாதியானது. அதனை புதுப்பிக்க வரும் வாரம் அதன் லோகோ குழுமக் கூடுதலில் விண்ணப்பிக்கப்பட இருப்பாக அக்குழுமத்தின் பொறுப்பாளர் நாகராஜா தெரிவித்தார். அக்கூடுதல் பற்றிய விவரங்களை அவர் பகிர்ந்து கொள்வார். அது சமயம் குழுமத்தில் பணிகளால் பயனடைந்தோரும் ஆதரவாளர்களும் #ubuntu-meeting இல் கலந்து கொண்டு தங்களது மேலான ஆதராவை நல்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. The Ubuntu Tamil group's "official" recognition expired recently. To renew it, in the coming week, the group in-charge Nagaraja said that he was going to take necessary steps with the logo (unsure if I got this right). He will share details about that event with the list. Beneficiaries and supporters of the group were requested to join in the discussions in #ubuntu-meeting and voice their support for the group. ஆக அடுத்த மாதம் மூன்றாவது சனிக்கிழமை மறுபடியும் சந்திப்போம். சற்று முன்னதாகவே! We'll meet on the third Saturday of next month, a little earlier!
_______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
