Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-13 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம்,

வரும் சனிக்கிழமை உரையாடலுக்கான நினைவு மடல்.

தேதி: 16-01-2010

நேரம்: மாலை 3.00 மணி

அரங்கம்: irc.freenode.net இன் #ubuntu-tam

விவரங்கள்: 
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_16_01_2009

விவாதிக்க விரும்புவன இருந்தால் பக்கத்தில் சேர்க்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:

> 
> இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக
> அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. 
> 

ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில்
மலரும் என எதிர்பார்ப்போம்.

> எனது கருத்தேற்றங்கள் :
> 
> i) ubuntu-tam -  தொழில்னுட்ப உரையாடல்கள் மற்றும் பயனர்கள்
> வினா-மறுமொழிகள் ஆகியனவற்றிற்கு
> 
> ii) ubuntu-l10n-tam - அதன் தலைப்பில் உள்ளவாறு தமிழாக்கம் தொடர்பான
> உரையாடல்களுக்கு 
> 

இவ்வகையிலேயே தற்போதும் அமைந்துள்ளது.  மேலும் நாம் மேற்கொள்ள முனைந்துள்ள
திட்டங்களுக்கு லாஞ்சுபேடில் இருக்கும் திட்டங்களிலேயே மடலாடற் குழுக்களும்
இடம்பெற்றுவிடுகின்றன.


> iii) மேலும் பொதுவான அறிவிப்புகளுக்கு என தனி
> குழுமம் lists.ubuntu.com இல் அமைக்க இயலுமாயின் அறிவுப்புகளுக்கு அது.
> இயலாவிடில் தற்போது போல அறிவிப்புகளை மேல் இரண்டிலும் பதியாலம். 

தற்போதைக்கு மேற்கூறிய இரு மடலாடற் குழுக்களிலும் சேர்த்து பதிந்து
கொள்ளலாம். தொடர்ச்சியாக பொறுப்பாற்றக் கூடியோர் வருகிறபோதும் மடல்கள்
அதிகம் சேரத் தொடங்கும் கால கட்டங்களில் இதைப் பற்றிய முடிவு
மேற்கொள்ளலாம்.

--

ஆமாச்சு


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][XFCE] xfce4-panel.po மொழிபெயர்ப்பு

2010-01-06 திரி ஆமாச்ச ு|amachu
On Mon, 2010-01-04 at 02:24 +0530, Mohan R wrote:
> வனக்கம்,
> 
> கீழ்கானும் கோப்பினை மொழிபெயர்த்துள்ளேன்,
> 
> http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce4-panel-master.po
> 
> இதில் கிடைத்த சில சிக்கலான சொற்கள்/வாக்கியங்கள், அதற்கு நான் செய்த 
> மொழிபெயர்ப்பு,
> 
> msgid "The Xfce development team. All rights reserved."
> msgstr "முழு உரிமையும் Xfce உருவாக்க குழுவால் பதியப்படுகிறது"

அனைத்து உரிமங்களும் உருவாக்கக குழுவினதே. XFCE உருவாக்கக் குழு.

> 
> msgid "Could not open \"%s\" module"
> msgstr "\"%s\" நிரல்கூடகத்தை பயன்படுத்த முடியவில்லை"

\"%s\ பகுதியை திறக்க இயலவில்லை.

> Transparency - வெளிப்படை அலவு
> Opeque - ஒளிபுகாதன்மை
> Format - வரைவடிவம்
> Tooltip - சுட்டிப்பொருள் குறுவிலக்கம்
> 
> msgid "Perl Scripts"
> msgstr "பெர்ல் கட்டளைகோப்பு"
> 

பெர்ல் நிரட்துண்டுகள்

> msgid "Shell Scripts"
> msgstr "கட்டளைஏற்பான் கட்டளைகோப்பு"
> 

முனைய நிரட்துண்டுகள் (முனைய நிரல் என்றே சொல்லலாம்)

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 16:18 +0530, ஆமாச்சு|amachu wrote:
> அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு.

16 ஜனவரி.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2010-01-03 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டவை:
 
* வரும் காலங்களில் முதலாவது & மூன்றாவது சனிக்கிழமைகளில் நமது கூடுதல் நடைபெறும். 
அதே நேரம் ஏற்புடையதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.
* மோகன் XFCE தமிழாக்கம் செய்ய முன்வந்துள்ளார். அவரை வரவேற்போம்.
* யாவர்க்குமான அறக்கட்டளை முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்குரிய 
தளம், மடலாடற் குழு, முதற்கட்ட பணிகள், வங்கிக் கணக்கு விவரம் போன்றவை 
பகிர்ந்துக்கொள்ளப்படும்.
உபுண்டு தொடர்பான பணிகளில் அவ் அறக்கட்டளைக்கும் உபுண்டு தமிழ்க் 
குழுமத்திற்கும் தொடர்பு இருக்கும். மற்றபடி இரண்டும் தன்னிச்சையாகவே இயங்கும்.

அடுத்தக் கூடுதல் 17 ஜனவரி 09 மாலை 3.00 மணிக்கு.


விவாதப் பதிவுகள்:

http://logs.ubuntu-eu.org/freenode/2010/01/03/%23ubuntu-tam.html

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2010-01-03 at 01:54 +0530, Mohan R wrote:
> 
> Daemon - நினைவகத்தில் நிலையாக இருக்கும் ஓர் செயலி என்று நினைத்து 
> "நிலைநினைவகச்செயலி" என்று மொழிபெயர்த்துள்ளேன். 

மறைநிரல்?

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
கடந்த வாரம் குறைவானோரே கலந்து கொண்டமையால் குறிப்பிடத்தக்க வகையில்
விவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை.

இவ்வாரத்திற்கான கூடுதல் நாளை நடைபெறும் (03/01/2010 - மாலை 3 மணி)

விவாதிக்க விரும்பும் விஷயங்கள் இருப்பின் விக்கி பக்கத்தில்
சேர்த்துவிட்டு பங்குகொள்ளவும். விக்கியில் சேர்க்கப்படும் பொருளை
மாத்திரம் விவாதிப்பது நேரத்தை நல்ல முறையில் பயன்பட உதவும்.

வரும் வாரத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்னதாகவே நினைவு மடல்கள்
அனுப்புகிறேன். இப்பணியை யாரேனும் செய்ய முன்வந்தால் நல்லது. அவ்வார
உரையாடலுக்கான விக்கி பக்கத்தை அமைத்து விட்டு இணைப்பைப் கொடுத்து நினைவு
படுத்த வேண்டும். அவ்வளவு தான்.

நாளைய உரையாடலுக்கான
பக்கம்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_03_01_2009

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2010-01-02 at 18:16 +0530, Mohan R wrote:
> இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில்
> பிழையிருந்தால் 
> திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான
> முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) 
> மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவியை
> எதிர்பார்க்கின்றேன். 

மோகன்

வாங்க. இப்போ ட்ரையோ ஆயிட்டோம். கொஞ்சம் நாள் முன்னாடி FUEL நிகழ்ச்சி
நடந்தது. அது சமயம் திரட்டப்பட்ட சொல்
பரிந்துரைகள் https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பக்கத்தில்
இருக்கு.

தொடர்ந்து XFCE க்கு பொறுப்பு வகித்து வாருங்கள். வரும் ஆண்டு மூன்று
கட்டற்ற இடைமுகப்புகளுக்கும் நல்ல ஆண்டாக அமையும்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2009-12-25 திரி ஆமாச்ச ு|amachu
நாளைய உரையாடலுக்கான பக்கம்.

தாங்கள் விவாதிக்க விரும்பும் பொருள் இருந்தால் சேர்க்கலாம்.

http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_27_12_2009

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]Tamil Language - Few question s

2009-12-23 திரி ஆமாச்ச ு|amachu
On Wed, 2009-12-23 at 23:00 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> மேலும்
> எனது 
> https://lists.ubuntu.com/archives/ubuntu-l10n-tam/2009-December/002021.html
> மடலுக்கு தங்கள் மறுமொழி கருத்துக்கள் வேண்டுகிறேன். 

ஆம். தங்களது IBUS பற்றிய மடலுக்கும் பதிலளிக்க வேண்டியுள்ளது.

தாமதத்திற்கு மன்னிக்கணும்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]Tamil Language - Few question s

2009-12-22 திரி ஆமாச்ச ு|amachu
On Mon, 2009-12-14 at 12:54 +0530, Yogesh wrote:
> எனக்கு தமிழ் ஓரளவிற்கு எழுதத்தெரியும் .. உபுண்டு லினக்ஸ் ஐ தான்
> பயன்படுத்துகிறேன் .. ஆதலால் சிறு சிறு திருத்தங்களையும் ஒரு சில
> வழிகாட்டிகளையும் (guide / how-tos) என்னால் தர இயலும்.  எவ்வகையான உதவி
> மிகவும் தேவைப்படுகிறது என்று சொல்லமுடியுமா? அதற்கு ஏற்றாற்போல் என்னால்
> உதவி புரிய முடியுமா என்று பார்கிறேன்..

தங்களுக்கு விக்கியில் எழுதும் பழக்கம் இருக்கிறதா? தாங்கள் தொடர்ச்சியாக
இணைய வசதி கிட்டக்கூடிய நிலையில் இருக்கிறீர்களா?

இல்லைன்னா கவலை வேண்டாம் ;-) நாம் அதற்கேற்றாற் போல திட்டமிடணும்,
அதுக்குத் தான்.

நாம் முன்னர் கூட்டு முயற்சியில் கையேடு இயற்று முற்பட்ட போது இவையே
பங்களிப்போரிடையே நிலவிய முக்கியமான இடராக இருந்தன.

பங்களிப்புகள் பற்றிய வினாக்களையும் விவாதங்களையும்
நாம் http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam மடலாடற் குழுவில்
மேற்கொள்ளுதல் நல்லது.

இம்மடலாடற் குழுவை உபுண்டு பயன்பாடு தொடர்புடைய சந்தேகங்களுக்கும்
விளக்கங்களுக்கும் பயன்படுத்தலாம்.

--

ஆமாச்சு


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]வாராந்திர இணையரங்க உரையாட ல்

2009-12-20 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-12-20 at 08:53 +0530, ஆமாச்சு|amachu wrote:
> இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல்.
> 
> விவரங்கள்: 
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 
> 
விவாதங்களின் சாராம்சம்:

1) யாவர்க்குமான மென்பொருள் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது. முதற்கட்ட
பணியாக மென்பொருள்கள் சில உருவாக்கும் திட்டம் உள்ளது. தட்டச்சுப் பயிற்சி,
எழுத்துக் குறியீடு மாற்றி போன்றவை அவற்றுள் அடங்கும். அறக்கட்டளை பதிவு
செய்யப்பட்டதற்கான அத்தாட்சி ஆவணம் இன்னும் பெறப்படவில்லை. பெற்றுக்
கொண்டதும் வங்கிக் கணக்கு தொடங்குவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2)FUEL நிகழ்வு நடைபெற்றது. அது சமயம் சேர்க்கப்பட்ட சொற்களின்
பட்டியல் https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil முகவரியில்
கிடைக்கப்பெறுகின்றன. 

3) கடந்த நவம்பர் மாதம் தொடங்கி இதுவரை 155 விண்ணப்பங்களுக்கு வட்டுக்கள்
அனுப்பப்பட்டுள்ளன. அவற்றும் 38 விபிபி விண்ணப்பங்கள் ஆகும். இதனை இன்னும்
முறைப்படுத்த வேண்டும். விண்ணப்பிப்போருக்கு பொதுவாக உபுண்டுத் தமிழ்க்
குழுமம் தொடர்பான மடல் அனுப்பப்பட வேண்டும். இதனை பத்மநாதன் வடிவமைப்பார்.

4) உபுண்டுவின் கடந்த இரு வெளியீடுகளாகவே நாம் நமக்கென்ற பிரத்யேக வட்டு
வடிவமைப்பதில் ஈடுபட்டு பரிசோதித்து வருகிறோம். இப்பணியை கனகராஜ்
நல்லமுறையில் செய்து வருகிறார். இதன் வளர்ச்சியாக நாம் வடிவமைக்கும்
வட்டிற்கென்று தனிப்பட்ட தோற்றப்பின்னணிகள் போன்றவை உருவாக்க வேண்டும்.
தங்கமணி அருண & கனகராஜ் இவ்விஷயங்களில் கவனம் செலுத்துவர்.

விவாதப்பதிவு: http://logs.ubuntu-eu.org/freenode/2009/12/20/%
23ubuntu-tam.html

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-19 திரி ஆமாச்ச ு|amachu
இன்றைய வாராந்திர இணையரங்க உரையாடலுக்கான நினைவு மடல்.

விவரங்கள்: 
http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_20_12_2009 

தாங்கள் விவாதிக்க விரும்பும் விஷயம் இருந்தால் பொருள் பகுதியில் சேர்த்து
சேர்த்தவர் பகுதியில் நான்கு டில்டே () இடவும். தங்களது ஒப்பம் தானாக
கிடைக்கும்.

நேரம்: மூன்று மணி.

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-15 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம்,

குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அன்றாடம் அதிகம் காண நேரிடும் சொற்களுக்கான
தமிழாக்கப் பரிந்துரைகள் நிகழ்ச்சி டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை
தரமணியில் அமைந்துள்ள CDAC வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல்
நாளன்று தமிழ் இணையப் பல்கலைக் கழக டைரக்டர் திரு. நக்கீரன் கலந்துகொண்டு
உடன் விவாதித்து தமது பரிந்துரைகளை வழங்கிய வண்ணம் இருந்தார். அந்நாளில்
காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்களும் உடன்
இருந்தனர். BOSS இயங்குதளத்தின் சார்பில் சுதாகர், உபுண்டு தமிழ்க் குழும
தொடர்பாளர் அருண் ஆகியோரும் உடன் இருந்தனர்.

#fedora-tamil இணையரங்கத்தின் மூலமாகவும் தி வாசுதேவன் உள்ளிட்ட பலர் வந்து
கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை வழங்கிய வண்ணம் இருந்தனர். கோவை
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி பேரா. முத்துகுமார் ஆறுமுகமும்
நிகழச்சியில் கலந்து கொண்டு தமது பரிந்திரைகளை வழங்கினார். முதல் நாளன்று
நடைபெற்றது போலவே இரண்டாம் நாளைய நிகழச்சிகளும் அமைந்திருந்தன.

நிகழ்ச்சியின் இணையரங்கப் பதிவு, நிகழ்ச்சியின் நிறைவாகத் தொகுக்கப்பட்ட
சொற்களின் பட்டியல்
முதலியவற்றை https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பக்கத்தில்
இருந்து இறக்கிக் கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை
செய்திருந்த CDAC சென்னைக்கும், திரு ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும் மனமார்ந்த
நன்றிகள். நிகழச்சியின் ஒருங்கிணைப்பு பணிகளை ம ஸ்ரீ ராமதாசும், பெலிக்ஸும்
கவனித்துக் கொண்டனர். நிகழ்வின் நிறைவாக மேற்கொள்ளப்படவேண்டியதாய் முடிவு
செய்யப்பட்டப விஷயங்கள் வருமாறு.

1) அகராதியாக பயன்படுத்தக் கூடிய ஒரு பயக்பாட்டினை உருவாக்க வேண்டும்.

2) மொழிபெயர்க்க வேண்டு முன்வருவோருக்கு இச்சொற்கள் உறுதுணை புரிந்தாலும்
இவற்றை பயன்பாடுகளில் பொருத்திப் பார்த்து சோதிக்க வேண்டும்.

3) பெடோரா உபுண்டு BOSS ஆகிய இயங்குதளங்களில் இவற்றைப் பொருத்திப் பார்த்து
சீர் செய்யும் பணியை மாதமொரு முறை நடத்தலாம்.

4) இச்சொற் பட்டியலை பிரதான மொழிபெயர்ப்பு திட்டங்களிலும் கிடைக்கச் செய்ய
வேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.
 

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]குனு வின க்ஸ் பணிச் சூழல் களில் அன்றாடம் அ திகம் பயன்படுத் த நேரிடும் பதங்க ளுக்கு நிகரான தம ிழ்ச் சொல்லாக்க நிகழ்வு

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 11:33 +0530, ஆமாச்சு|amachu wrote:
> ---  நிகழ்ச்சி நிரல்  -
> நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த
> நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் 
> 
> தேதி: 12/12/2009 & 13/12/2009
> 
> இடம்:  1) CDAC சென்னை, தரமணி
>   2) #fedora-tamil at irc.freenode.net 
> 
> நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை
> - 

இன்று தொடங்கி நாளை வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வில் IRC மூலம் தாங்களும்
கலந்து கொள்வதற்கான
வழிமுறை: http://ubuntu-tam.org/wiki/index.php?title=Join_FUEL_2009_Dec_12_13

விவரங்கள்: https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil

பரிந்துரைகள் கோரப்படும்
பதங்கள்: http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods

கலந்து கொள்ள நினைவுபடுத்துகிறோம்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்][உபுண்டு பயனர்]உபுண்டு தம ிழ்க் குழும கலை ப டைப்புகள்

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
On Fri, 2009-12-11 at 23:57 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> 
> 
> அவ் வட்டு  உபுண்டு வெளியட்ட DVD வட்டா அல்லது remastered ஆ ? 

வெற்று வட்டாகவே தயாரித்துள்ளோம்.

தேவைக்கேற்றாற் போல் மாற்றிக் கொள்ளலாம். விண்ணப்பிப்போருக்கு உபுண்டுவின்
டிவிடிதான் அனுப்பப்படுகிறது.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] உபுண்டு தமிழ் க் குழும கலை படைப ்புகள்

2009-12-11 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம்

புதிய தலைமுறை கட்டுரையைத் தொடர்ந்து வந்த கோரிக்கைகளால் நம்மிடையே இருந்த
வட்டுக்களின் இருப்பு தீர்ந்து போனது.

தொடர்ந்து வட்டுக்களை வேண்டுவோருக்கு வழங்கிட வேண்டு இம்முறை நாம் 500
வெற்று வட்டுக்களை பெற்றுள்ளோம். அதற்கென்று பயன்படுத்தியுள்ள
மேலணி: 
http://ubuntu-tam.org/irakkam/artwork/cd-dvd-artwork/ubuntu-dvd-artwork-tamil.jpg

விவரங்கள்: http://ubuntu-tam.org/wiki/index.php?title=கலை_படைப்புகள்

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 திரி ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 06:02 +, பத்மநாதன் wrote:
> 
> 10 டிசம்பர் 2009 தேதியிட்ட 'புதிய தலைமுறை' இதழில்
> திரு. இரவிசந்கிரன் 

எழுதியது அ. ரவிசங்கர். குழப்பிக்காதீங்க ;-)

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]kanini - ubuntu ( கண ினி உபுண்டு பற்ற ி)

2009-12-10 திரி ஆமாச்ச ு|amachu
On Thu, 2009-12-10 at 13:18 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> 
> முன்னர் மேற்காட்டிய மடலாற்றக் குழுமம் தமிழ்நாட்டில் உள்ள பயனர்களுக்கு
> மட்டும் என்றுதானே ஏற்படுத்தப்பட்டிருந்தது. தற்போது எந்த இடத்திலும்
> உள்ள பயனர்களும் இணந்து கொள்ளலாமோ ? 

ஆம்.

--

ஆமாச்சு 
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-09 திரி ஆமாச்ச ு|amachu
On Sat, 2009-12-05 at 08:17 +0530, ஆமாச்சு|amachu wrote:
> On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote:
> > அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி.
> > http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009
> 

சென்ற வாரம் பங்கு கொண்டோர் குறைவாக இருந்த காரணத்தில் கூடுதல் நடைபெற
வில்லை. வரும் ஞாயிறன்று FUEL நிகழ்வு நடைபெறும் என்பதால் அனைவரும்
#fedora-tamil அரங்கத்தில் கலந்து கொள்ளவும். உபுண்டு தமிழ்க் குழுமக்
கூடுதலை தவிர்க்கலாம்.

நாளை டிசம்பர் 11 தேதி நாம் பகிர்ந்து கொண்டு வந்துள்ள அறக்கட்டளையின்
பதிவு பல்லவபுர சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ள
விருப்பம் உள்ளோர் எம்மை தனித்து தொடர்பு கொள்ளுங்கள். நேரம் காலை பத்து
மணி.

--

ஆமாச்சு



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] புதிய தலைமுறை வார இதழில் உபுண் டு

2009-12-05 திரி ஆமாச்ச ு|amachu
வணக்கம்

10 டிசம்பர் 2009 தேதியிட்டு வெளிவந்துள்ள புதிய தலைமுறை என்ற வார இதழில்
உபுண்டு - உபுண்டு தமிழ்க் குழுமம் - மலேசியப் பள்ளியில் உபுண்டு பயன்பாடு
பற்றிய செய்திகளை உள்ளடக்கிய அ. ரவிசங்கரின் கட்டுரை வெளியாகியுள்ளது.

இதன் பொருட்டு ரவிசங்கருக்கு நமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

அவ்விதழில் வெளியாகியுள்ள உபுண்டு தொடர்பான கட்டுரையை
வாசிக்க: 
http://ubuntu-tam.org/wiki/index.php?title=ஊடகங்களில்/புதிய_தலைமுறை_10_டிசம்பர்_2009

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்] குனு வினக்ஸ் ப ணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரி டும் பதங்களுக்க ு நிகரான தமிழ்ச் சொல்லாக்க நிகழ் வு

2009-12-04 திரி ஆமாச்ச ு|amachu
நாம் விரும்பிப் பயன்படுத்தும் இயங்கு தளங்களாக கட்டற்ற இயங்கு தளங்கள் திகழத் 
தொடங்கி விட்டன. பெடோரா, டெபியன், ரெட்ஹாட், பாஸ், ஜென்டூ, உபுண்டு என இவை பல 
வடிவங்களில் கிடைத்து நாம் விரும்பியதை தேர்வு செய்து
பயன்படுத்தும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன. இவை என்னுடயை மொழியில் கிடைக்க 
வேண்டும் என்பது தாய்மொழிப்பற்றுடைய எவரும் கொள்ளக் கூடிய விருப்பமாகும். 

இதனையே நோக்கமாகக் கருதி பல்வேறு மொழிப்பெயர்ப்பு குழுக்களும் பணியாற்றி 
வருகின்றன. அவற்றின் மூலம் பங்களிப்போருக்கும் புதிதாய் மொழிப்பெயர்க்க 
வருவோருக்கும் அடிக்கடி எழும் கேள்வி ஒரு சொல்லுக்கு நிகரானத் தமிழ்ச் சொல்
என்ன என்பதே. ஒரே பொருளைக் கொண்ட பலச் சொற்கள் இருக்கலாம் என்ற போதும் அவை ஒரே 
பணிச் சூழலில் வெவ்வேறு பகுதிகளில் பிரதிபலிப்பது இயங்குதளத்தை 
பயன்படுத்துவோருக்கு அனாவசியச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

இவற்றை போக்கும் ஒரு முயற்சியாக பெடோரா சமூகம், நாம் குனு லினக்ஸ் பணிச் சூழல்களை 
அன்றாடம் பயன்படுத்துகிற போது அதிகம் காண நேரிடும் சொற்களையும் சொற்றொடர்களையும் 
தொகுத்து அவற்றுக்கு நிகரான பிறமொழிச் சொல்லாக்க
முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை பெடோரா குழுமத்திற்கே அன்றி அனைத்து கட்டற்ற 
மென்பொருள்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் பயனளிக்கக் கூடியவை. இத்திட்டத்தை 
பெடோரா குழுமத்தார் Frequently Used Entries For
Localisation (FUEL)[1] என்று அழைக்கிறார்கள்.

இப்பதங்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் கோரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் 
பன்னிரெண்டாம் தேதியும் பதிமூன்றாம் தேதியும் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC 
அலுவல வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில்
நேரடியாக கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை அளிக்க விருப்பமுடையோர் எமது amachu 
at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து 
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  நேரடியாக கலந்து கொள்ள
இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற 
உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். 

அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் IRC மூலம் கலந்து கொள்ளலாம். 
irc.freenode.net வழங்கியின் #fedora-tamil அரங்கின் மூலம் தங்களது பரிந்துரைகளை 
வழங்கலாம். இந்நிகழச்சியின் ஏற்பாட்டுக்
காரியங்களிலும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் எம்மை தொடர்பு 
கொள்ளவும். இரண்டு நாட்களிலும் அமர்வுகள் காலை பத்து மணிக்குத் தொடங்கி மாலை ஐந்து 
மணி வரை நடைபெறும். பரிந்துரைகள் வேண்டப்படும்
சொற்கள் http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods கோப்பில் 
கிடைக்கப் பெறுகின்றன. 

---  நிகழ்ச்சி நிரல்  -
நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் 
பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் 

தேதி: 12/12/2009 & 13/12/2009

இடம்:  1) CDAC சென்னை, தரமணி
  2) #fedora-tamil at irc.freenode.net 

நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை
-

[1] - https://fedorahosted.org/fuel/ & 
https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]வாராந்தி ர இணையரங்க உரையா டல்

2009-12-04 திரி ஆமாச்ச ு|amachu
On Sun, 2009-11-29 at 19:27 +0530, ramadasan wrote:
> அடுத்தக் கூடுதல் டிசம்பர் ஆறாம் தேதி.
> http://ubuntu-tam.org/wiki/index.php?title=இணையரங்க_உரையாடல்_06_12_2009

நாளைய இணையரங்க உரையாடலுக்கான நினைவுணர்த்தும் மடல்..

--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam