2011/6/25 Nakinam sivam <[email protected]>

>
> **
>     <http://senthilvayal.wordpress.com/author/senthilvayal/>  உங்கள்
> குழந்தைக்கு ஜீரணக் கோளாறா? -காரணமும்... 
> நிவாரணமும்...!<http://senthilvayal.wordpress.com/2011/06/25/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%95/>
> *vayal <http://senthilvayal.wordpress.com/author/senthilvayal/>* | ஜூன்
> 25, 2011 at 2:21 பிற்பகல் | Categories: குழந்தை 
> பராமரிப்பு<http://senthilvayal.wordpress.com/?cat=897635>| URL:
> http://wp.me/pewfk-31m
>
> *பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
> அதற்கான காரணத்தையும் நிவாரணத்தையும் இங்கே தருகிறோம்.*
>
> காலை உணவு கட்டாயம்
>
> பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள்.
> அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த
> இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
>
> காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை
> வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத்
> தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
>
> பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை
> சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று
> குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது
> என்று நினைத்து அவர்கள் சாப்பிடாமல் சென்றாலும் கண்டு கொள்வதில்லை.
>
> உண்மையில் உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கத் தொடங்கும். அதேபோல
> குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்து பழக்கம் ஏற்படுத்திவிட்டால் சில நாட்களில்
> அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட
> மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால்
> பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத்
> தொடங்கி விடுவார்கள்.
>
> நிதானமாக சாப்பிடுதல்
>
> காலையில் ஏதாவது `ஹார்ன்' சத்தம் கேட்டாலே பள்ளி பஸ் வந்துவிட்டதோ என்று
> எண்ணும் குழந்தைகளும், பெற்றோரும் ஏராளம். அதனால் அவசரம் அவசரமாக சாப்பிட்டு
> விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.
>
> அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று
> நிதானமாக சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ்
> நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம்.
> மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக
> சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.
>
> செலியாக் நோய்
>
> அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள்,
> பால் மற்றும் பால் உணவுகளில் `குளூட்டன்' என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண
> பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய்
> `செலியாக்' எனப்படுகிறது.
>
> இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும்.
> வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின்
> வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த
> புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
>
> வயிற்றுப்போக்கு
>
> அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும்
> பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு
> காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில்
> சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச்
> சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.
>
> பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை
> ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள்
> பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா
> பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக் கொள்ளாத பிரச்சினையை `லாக்டோஸ் இன்டால
> ரன்ஸ்' என்று குறிப்பிடுவார்கள்.
>
> வயிற்று வலி
>
> நாம் பொதுவாக வயிற்றில் எங்கு வலித்தாலும் வயிற்று வலி என்று சொல்கிறோம்.
> ஆனால் வயிற்றின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் வலிக்கும் வேறுவேறு காரணங்கள்
> உண்டு. அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக
> வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடு
> பவர்களுக்கும் மேற்கண்டதுபோலவே வலி ஏற்படும்.
>
> அஜீரண கோளாறாலும் வயிற்று வலி ஏற்படும். பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள்
> நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும்.
>
> காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை
> தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.
>
> துரித உணவுகள்
>
> குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும்
> குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல `ஜங் புட்' எனப்படும் உணவுகளை
> சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை
> நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும்
> ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.
>
> குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து சரி செய்யப்
> பாருங்கள். உங்களுக்கு காரணம் தெரியாவிட்டால் மருத்துவரை அணுகுங்கள்.
>
> பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு
> பழக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் அந்த உணவின் ருசிக்கு அடிமைப்பட்டுப்
> போய்விடுவார் கள். அதனால் வீட்டில் எவ்வளவு ருசியாக உணவு சமைத்தாலும் அதை
> விரும்பமாட்டார் கள். எனவே எப்போதாவது ஓட்டல் உணவு, எப்போதுமே வீட்டு உணவு
> என்று பழக்கப் படுத்துங்கள்.
>
> தண்ணீர்
>
> தண்ணீர் பருகுவது பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீர் பருகா
> விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல்
> ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது
> மல துவாரத் தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் `ஆனல் பிஷர்' நோய்
> உண்டாகும்.
>
> தண்ணீர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடு
> வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும்
> குறிப்பிட்ட நேரத்தில் `டாய்லெட்' செல்லப் பழக்க வேண்டும். பழங்கள்,
> நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும்.
>
> *அம்மாக்கள் கவனிக்க...*
>
> குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படாமல் இருக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை:-
>
> * குழந்தைகள் அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவுங்கள்.
> * வாயு தொந்தரவு தரும் உணவுகளை குறைத்துக் கொடுங்கள்.
> * குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்
> படுத்தாதீர்கள்.
> * காரம் மிகுந்த உணவுகளை அதிகம் கொடுக்காதீர்கள்.
> * சுத்தம், சுகாதாரம் இல்லாத இடங்களில் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.
> * குழந்தைகளை தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வையுங்கள்.
> * நிறைய சத்து கிடைக்கும் என்று எண்ணி அதிகமாக பசும்பால் கொடுப்பது தவறானது
> என்பதை உணருங்கள்.
> * நிறைய தண்ணீர் குடிக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தினமும் நான்கு
> அல்லது ஐந்து தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
> * இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட உடன் தூங்கிவிடாமல்
> கொஞ்ச தூரம் நடந்து செல்ல வைப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
>
> இப்பதிவிற்கு ஒரு மறுமொழி 
> இட<http://senthilvayal.wordpress.com/2011/06/25/%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%80%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%95/#respond>
>
>
>  Thansk : http://senthilvayal.wordpress.com
>
>
>
> --
> Brotherly Athman
> Nakinam Sivam
>
> http://nakinam.blogspot.com
>
> --
> தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார்
> நலமே விளையும்.
> To post to this group, send email to [email protected]
> For more options, visit this group at
> http://groups.google.com/group/theyva-thamizh?hl=ta
>

Reply via email to