---------- Forwarded message --------- From: p.v. narayanan Date: Mon 23 Apr, 2018, 8:18 PM Subject: Maha Periyava To:
Subject: Maha Periyava நன்றி கடன் பட்டு இருக்கேன் - பெரியவா சங்கராச்சார்ய மஹாஸ்வாமிகள் அப்போது காஞ்சிபுரத்தில் இருந்தார்: ஒரு முறை வாரியார் அவரை தரிசிக்க சென்ற போது, மஹாஸ்வாமிகள் பூஜையில் இருந்ததால் . பூஜை முடிவதற்குள் காமாட்சியம்மனையும் , மற்ற கோயில்களையும் தரிசித்து விட்டு வரலாமென்று கிளம்பினார் வாரியார் ! தரிசனம் முடிந்து திரும்பி வரும் வழியில் சேங்காலிபுரம் அனந்தராமதீட்ஷதரை சந்தித்தார் வாரியார் .... இருவரும் கோயிலின் ஒரு பக்கமாய் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது ... ..சுமார் எண்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கோல் ஊன்றியபடி மெதுவாக நடந்து தீஷதரை வணங்கி , '' எனக்கு ஒரு ருத்ராட்ஷ மாலை கொடுங்களேன் !'' என்றார் : '' என்னிடம் தற்போது ருத்ராத்ஷமாலை இல்லையே '' என்றார் தீட்சதர் : உடனே அந்த மூதாட்டி , '' அதனாலென்ன ?....காஞ்சி பெரியவரிடம் சொல்லி வாங்கி தாருங்கள் !'' என்றார் : '' பெரியவாளிடம் என்ன சொல்லி ருத்ராத்ஷம் கேட்க வேண்டும் ?'' கேட்ட தீட்ஷதருக்கு தன் பெயரை கூறிய அந்த மூதாட்டி , பின் தொடர்ந்து , '' மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில் , கூட இருந்து ஒத்தாசை செய்த மருத்துவச்சி கேட்டதாக சொல்லுங்கள் !'' கூறிவிட்டு அந்த மூதாட்டி விடைபெற்று கிளம்ப... வாரியாரும் , தீட்ஷதரும் மடத்தை அடைந்தனர் : இரவு சுமார் ஒன்பது மணியளவில் வாரியாரும் , மஹா பெரியவரும் உரையாடிக்கொண்டிருக்க ... அப்போது அங்கே வந்தார் மடத்துசீடர் , அறையை சுத்தம் செய்யும் பொருட்டு : அப்போது அங்கே ஒரு சால்வையும் , ஒரு ருத்ராட்ஷ மாலையும் இருந்தன : அந்த சீடரை அழைத்த மஹா சுவாமிகள் , '' உடனே சேங்காலியை அழைத்து வா ! ( அனந்தராம தீஷதரை )'' என்றார் : அடுத்தகணம் அங்கே வந்த தீஷதரிடம் , '' இந்த ருத்ராட்ஷ மாலையும் , சால்வையும் உனக்கு தான் !.....'' என்று கூற .....தீஷதரோ மவ்னமாக இருந்தார் ! '' நீ இவற்றை ( பெயரை சொல்லி ) அந்த கிழவியிடம் சேர்த்து விடு !.....இந்த சரீரத்தை அடையாளம் காட்டினாளே , ...அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் !'' மஹா சுவாமிகள் கூற ..... சிலிர்த்து போனார்கள் வாரியாரும் , தீட்ஷதரும் ! கண்களில் நீர் மலக இருவரும் மஹா சுவாமிகளை நமஸ்கரித்தனர் ! பின்னர் , மடத்து பிரசாதங்களுடன் , ருத்ராட்ஷ மாலையையும் , சால்வையையும் சீடனிடம் கொடுத்து , தீட்சதர் மூலம் அந்த மூதாட்டியிடம் கொடுக்க செய்தார் மஹா சுவாமிகள் !! Image may contain: 1 person Sent from my iPhone -- P.V.NARAYANAN -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. For more options, visit https://groups.google.com/d/optout.
