| 
| ஓம் | 
| சுதந்திரத்தின் கதை |



| சுதந்திரம் பறிபோன கதை |

 |

 |


| சுதந்திரம் பறிபோன கதை ..தொடர்ச்சி..2
   |


| 
| 
| சுதந்திரப் போர்--
மெல்ல மெல்ல நுழைந்தனர் வெள்ளையர் |


 | இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிபெற்ற ஒட்டகம் கடைசியாக கூடாரம் முழுவதையும் 
ஆக்கிரமித்துக் கொண்டு கூடாரத்துக்குச் சொந்தக்காரனை வெளியே விரட்டிவிட்டதாம். 
.....
............................
 நமது நாட்டில், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டி விட்டதாம் என்று கதை 
சொல்வார்கள்
வெள்ளையர்கள் நமது சுதந்திரத்தை மிகச் சுதந்திரமாகச் சிறுகச் சிறுகப் பறித்து 
நம்மை அடிமைகளாக ஆக்கியது ஒட்டகம் கூடாரத்தில் இடம் பிடித்த கதைதான்
  கூடாரத்துக்குச் சொந்தக்காரன் எவ்வாறு ஏமாளியாக இருந்து, சிறுகச் சிறுகக் 
கூடாரத்தைக் கோட்டைவிட்டானோ அதைப்போன்று மௌனியாக இருந்தநாம் நமது சுதந்திரத்தை 
வெள்ளையரிடம் பறிகொடுத்தோம். 
  கூடாரத்துக்குச் சொந்தக்காரன் பறிகொடுத்தானோ அவ்வாறுதான் நாம் பறிகொடுத்தோம்.

 நம்முடைய பாரத தேசம் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே பிற உலக நாடுகளுடன் தொடர்பு 
கொண்டு வாணிபம் செய்து வந்தது.
   அயல் தேச  வணிகர்கள் நமது நாட்டுக்கு வருவதும், நமது தேச வர்த்தகர்கள் பிற 
தேசங்களுக்குச் செல்வதும் பண்டைக் காலம் தொட்டு இருந்துவரும்  வழக்கமாகும்.
  முக்கியமாக பாரத தேசத்திற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நெருக்கமான 
வாணிபத் தொடர்பு இருந்து வந்திருக்கிறது.
   வாஸ்கோட காமா என்னும் திறமை வாய்ந்த போர்ச்சுக்கீசிய மாலுமி கி.பி. 1498 ஆம் 
ஆண்டு கடல் மார்க்கமாக முதல் முதலாக பாரத நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
  அதாவது, பாரத தேசத்திற்கான கடல் வழியை வாஸ்கோடகாமாதான் கண்டுபிடித்தார் என்று 
கூறவேண்டும்.
    வாஸ்கோடகாமாவிற்கு முன்பே பாரத தேசம் நில மார்க்கமாக -- முக்கியமாக தென் 
மேற்கு ஆசிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.
  கடல் மார்க்கமாகவும் பாரத தேசத்திற்கு வரமுடியும் என்பதை வாஸ்கோடகாமா 
கண்டறிந்தபிறகு, பாரத தேசத்திற்கு மிகவும் எளிதாகவும், துரிதமாகவும், சிக்கல் 
இல்லாமலும் வர முடியும் என்பதை அந்நியர் விளங்கிக் கொண்டனர்.
  ஆக்வே போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என பல 
நாட்டவர் நமது நாட்டை நோக்கி வணிகக் கண்ணோட்டத்துடன் வரத் தலைப்பட்டனர்.
  இங்கிலாந்து நாட்டில் கி.பி. 1600 ஆம் ஆண்டில் எலிசபெத் அம்மையார் 
ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து இருந்தார்.
  பாரத தேச்த்துடன் நெருக்கமான வாணிபத் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் ஒரு வாணிபச் 
சங்கம் அமைக்கப் பட்டது.
  கிழக்கிந்திய வாணிபச் சங்கம் என்பது அந்தச் சங்கத்தின் பெயராகும்.
  வெறும் வர்த்தகம் என்ற நோக்குடன் கிழக்கிந்திய வாணிபச் சங்கம் பாரத தேசத்தில் 
காலடி எடுத்து வைத்தது.
  உண்மையில் அந்தச் சமயத்தில் வணிகம் மட்டுந்தான் கிழக்கிந்திய சங்கத்தின் 
நோக்கமாக இருந்தது.
  ஒட்டகம் கூடாரத்தில் இடம் பிடித்தது போன்றுதான் அதே கிழக்கிந்தியக் கம்பெனி, 
பின்னர் சிறுகச் சிறுக பாரத நாட்டின் ஆட்சி உரிமையைக் கைப்பற்றியது.
  1757-ஆம் ஆண்டுக்குப் பின்பு தான் கிழக்கிந்திய சங்கத்தின் மூலம் பிரிட்டீஷார் 
தங்கள் ஆதிக்கத்தை பாரத நாட்டின் மீது மெல்ல மெல்ல திணிக்க முற்பட்டனர்.
  அதற்கு முன்னர் பிரிட்டீஷாரின் நோக்கம் பாரத தேசத்தில் ஆட்சியை நிலை நாட்டுவதாக 
இல்லை.
  1757-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய சங்கத்தின் முக்கியமான 
நோக்கம் பாரதத்தில் வணிகம் புரிவதன் மூலம் லாபம் சம்பாதிப்பதாக மட்டுமே இருந்தது 
எனலாம்.
  பாரதத்துடன் வர்த்தகம் நடத்தி, வருவாய் சம்பாதிக்க மட்டுமே இருந்தது எனலாம்.
  பாரத்துடன் வர்த்தகம் நடத்தி, வருவாய் ஈட்ட அக்காலத்தில் பல நாடுகள் திட்டமிட்டு 
செயற்பட்டன.
  அந்த நாடுகளின் போட்டியை முறியடித்து இந்தியவில் தனிக்காட்டு ராஜாவாக வர்த்தகம் 
நத்தும் முயற்சியில்தான் ஆங்கிலக் கிழக்கிந்தியசங்கத்தினர் தீவிரமாக 
ஈடுபட்டிருந்தனர்.
  இந்தியப் பண்டங்களை வாங்குவதிலோ, அவற்றை அயல் நாடுகளில் விற்பனை செய்வதிலோ 
போட்டி இருப்பின் அது லாபகரமான தொழிலாக இருக்காது என அவர்கள் நினைத்தார்கள்.
  வெளிநாட்டு வியாபாரிகள் மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டின் பிற வர்த்தகர்களும் 
தங்களுக்குப் போட்டியாக பாரத தேசத்திற்கு வந்துவிடகூடாதே என்று கிழக்கிந்திய 
சங்கத்தினர் கருதினர்.
  அதனால், இங்கிலாந்து நாட்டிலிருந்து தங்களை தங்கள் நிறுவனத்தைத் தவிர வேறு எந்த 
ஆங்கிலேயரும் வர்த்தக நோக்கில் பாரதத்திற்கு வராதவாறு தடை செய்ய வேண்டும் என 
கிழக்கிந்திய சங்கத்தினர், பிரிட்டீஷ் ஆட்சியை நிர்பந்திக்கத் தொடங்கினார்கள்.
  பல வகையான குறுக்கு வழிகளைக் கையாண்டு, பாரத தேசத்தில் கிழக்கிந்தியச் சங்கம் 
மட்டுமே ஏகபோகமான வர்த்தகம் செய்யும் உரிமையினைப் பெற்றுவிட்டது.
  உள்நாட்டு வர்த்தகர்களின் போட்டியை கிழக்கிந்திய சங்கத்தினரால் எளிதாக வெற்றி 
கொள்ள முடிந்தது.
  ஆனால், ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகர்களும், வர்த்தக நிறுவனங்களும்,  பாரதத்துடன் 
வாணிகத் தொடர்பு கொள்வதை பிரிட்டீஷ் ஆட்சியினால் தடுக்க முடியவில்லை.
  ஆகவே, தங்களுக்கு எதிராக வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் குழுவினர்ரை எதிர்த்துப் 
போராட வேண்டிய நிலை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஏற்பட்டது.
  பெரும்பாலும் போட்டியாளர்கள் கடல் மூலமாகவே பாரதம் நோக்கி வர முயன்றதால்  
கிழக்கிந்தியக் கம்பெனி வலிமை மிக்க கடற்படை ஒன்றை வைத்துக்கொண்டு போர் முனையில் 
போட்டியாளர்களான எதிரிகளுடன் பல தடவை    மோதவேண்டியிருந்தது.
  அந்தச் சந்தர்ப்பத்தில் பாரதத்தில் வலிமை மிக்க முகலாய சாராஜ்ஜியம் 
நிலவியிருந்தது.
  முகலாய அரசுகளின் பாதுகாப்பில் வர்த்தகர்கள் இருந்ததால் , அவர்களுடன்   
போட்டியிடுவது கிழக்கிந்தியக் கம்பெனியருக்கு எளிதாக இல்லை.
  பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை கூட கிழக்கிந்தியக் சங்கத்தினரால் 
சுதந்திரமாக-- தங்கள் விருப்பம் போல வர்த்தகம் நடத்த இயலவில்லை.
  முகலாய மன்னர்களிடமும், அவர்களது அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்தும்-- 
விண்ணப்பம் செய்தும் ஓரளவுக்கு அவர்கள் வர்த்தகம் செய்ய உரிமை பெற முடிந்தது.
  பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாய சாம்ராஜ்யம் பல் வேறு காரணங்களால் 
பலவீனமடைய நேர்ந்தது.
  இதன் காரண்மாக ஆட்சி நடத்துவோரின் தலைமையகத்துக்கு நெடுந்தொலைவிலிருந்து கடலோரப் 
பகுதிகளில் முகலாய ஆட்சியினரின் அதிகாரம் மிகவும் தளர்ந்த நிலையில் இருந்தது.
  இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலக் கிழக் கிந்திய   சங்கத்தினர்  மிகவும் சரியாகப் 
பயன்படுத்திக் கொண்டனர். 
  தங்களுடைய வலிமை மிக்கக் கடற்படையின் துணையுடன் கடலோரப் பகுதிகளில் அவர்கள், 
தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தலைப்பட்டனர்.
  அத்துடன் பாரத வர்த்தகர்க
ளிடம்   நேரிடையாக மோதி அவர்க
ளைச் சீர்குலைக்கும்  முயற்சியிலும் ஈடுபட்டனர்.
  கிட்டத்தட்ட ஓர் அரசாங்கத்தை நடத்துவது போன்றே பாரதத்தில், தாங்கள் அபகரித்த 
இடங்களில் ஆங்கிலக் கிழக்கிந்திய சங்கம் செயற்படத் தொடங்கியது.
  அடிக்கடி அவர்கள் போரில் ஈடுபட வேண்டியிருந்ததாலும், தங்கள் கம்பெனி 
பாதுகாப்புக்காகவும், கம்பெனி நிர்வாகத் திற்காகவும் அவர்களுக்கு அதிகமான நிதி 
தேவைப்பட்டது.
  அவர்கள் விரும்பும் அளவுக்கு அவர்களிடம் பொருளாதார வசதியில்லை. பிரிட்டீஷ் 
அரசும் அவர்களுக்குப் பெருமளவு நிதி உதவக்கூடிய நிலையிலில்லை.
    ஆகவே, தேவைப்படும் நிதியில் கணிசமான பகுதியினை பாரதத்திலேயே திரட்டவேண்டிய 
அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
  கல்கத்தா, சென்னை, பம்பாய் போன்ற தனது கடலோரக் கோட்டை நகரங்களில் குடிமக்கள் 
மீது வரிவிதித்து கிழக்கிந்தியக் கம்பெனி தேவைப் படும் நிதியைத் திரட்டியது.
  மேலும், தங்கள் பொருளாதார வசதிகளைப் பெருக்குவதற்காக கம்பெனி தன் ஆதிக்கத்தை 
விரிவாக்க வேண்டியதாயிற்று.
  இதற்கு கிழக்கிந்தியக் கம்பெனியார் பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டனர்.
  மசூதிப் பட்டணம், சூரத், சென்னை, பம்பாய், கல்கத்தா, டாக்கா காஸிம்பஜார் ஆகிய 
இடங்களில் கிழக்கிந்தியக் கம்பெனி தன் வணிகத் தலங்களை அமைத்துக்கொண்டது.
  புதுச்சேரி, மாஹி, காரைக்கால், ஏனாம், சந்திரதாகூர் ஆகிய இடங்களில் 
பிரெஞ்சுக்கார்கள் தங்கள் வணிகத் தலங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
  இவ்வாறு, முதல் முதலாக வர்த்தக நிறுவனத்திற்காக இடம் பிடித்தவர்கள், பிறகு மெல்ல 
மெல்லத் தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்துத் தேசம் முழுவதையும் பிடித்துக்கொண்டனர். |

 |




-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/1558889172.153680.1662531464271%40mail.yahoo.com.

Reply via email to