Pranam
👋🏹👍

On Wed, 7 Sept 2022 at 11:47, subra manian <[email protected]> wrote:

>
>
>
> *ஓம்*
> *சுதந்திரத்தின் கதை*
>
> *சுதந்திரம் பறிபோன கதை*
> சுதந்திரம் பறிபோன கதை ..தொடர்ச்சி..2
>
>
>
> *சுதந்திரப் போர்--மெல்ல மெல்ல நுழைந்தனர் வெள்ளையர்*
>
> இவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அனுமதிபெற்ற ஒட்டகம் கடைசியாக கூடாரம் முழுவதையும்
> ஆக்கிரமித்துக் கொண்டு கூடாரத்துக்குச் சொந்தக்காரனை வெளியே
> விரட்டிவிட்டதாம். .....
> ............................
>  நமது நாட்டில், ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டி விட்டதாம் என்று
> கதை சொல்வார்கள்
> வெள்ளையர்கள் நமது சுதந்திரத்தை மிகச் சுதந்திரமாகச் சிறுகச் சிறுகப் பறித்து
> நம்மை அடிமைகளாக ஆக்கியது ஒட்டகம் கூடாரத்தில் இடம் பிடித்த கதைதான்
>   கூடாரத்துக்குச் சொந்தக்காரன் எவ்வாறு ஏமாளியாக இருந்து, சிறுகச் சிறுகக்
> கூடாரத்தைக் கோட்டைவிட்டானோ அதைப்போன்று மௌனியாக இருந்தநாம் நமது சுதந்திரத்தை
> வெள்ளையரிடம் பறிகொடுத்தோம்.
>   கூடாரத்துக்குச் சொந்தக்காரன் பறிகொடுத்தானோ அவ்வாறுதான் நாம்
> பறிகொடுத்தோம்.
>
>  நம்முடைய பாரத தேசம் நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே பிற உலக நாடுகளுடன்
> தொடர்பு கொண்டு வாணிபம் செய்து வந்தது.
>    அயல் தேச  வணிகர்கள் நமது நாட்டுக்கு வருவதும், நமது தேச வர்த்தகர்கள் பிற
> தேசங்களுக்குச் செல்வதும் பண்டைக் காலம் தொட்டு இருந்துவரும்  வழக்கமாகும்.
>   முக்கியமாக பாரத தேசத்திற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே நெருக்கமான
> வாணிபத் தொடர்பு இருந்து வந்திருக்கிறது.
>    வாஸ்கோட காமா என்னும் திறமை வாய்ந்த போர்ச்சுக்கீசிய மாலுமி கி.பி. 1498
> ஆம் ஆண்டு கடல் மார்க்கமாக முதல் முதலாக பாரத நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
>   அதாவது, பாரத தேசத்திற்கான கடல் வழியை வாஸ்கோடகாமாதான் கண்டுபிடித்தார்
> என்று கூறவேண்டும்.
>     வாஸ்கோடகாமாவிற்கு முன்பே பாரத தேசம் நில மார்க்கமாக -- முக்கியமாக தென்
> மேற்கு ஆசிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தது.
>   கடல் மார்க்கமாகவும் பாரத தேசத்திற்கு வரமுடியும் என்பதை வாஸ்கோடகாமா
> கண்டறிந்தபிறகு, பாரத தேசத்திற்கு மிகவும் எளிதாகவும், துரிதமாகவும், சிக்கல்
> இல்லாமலும் வர முடியும் என்பதை அந்நியர் விளங்கிக் கொண்டனர்.
>   ஆக்வே போர்ச்சுக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என பல
> நாட்டவர் நமது நாட்டை நோக்கி வணிகக் கண்ணோட்டத்துடன் வரத் தலைப்பட்டனர்.
>   இங்கிலாந்து நாட்டில் கி.பி. 1600 ஆம் ஆண்டில் எலிசபெத் அம்மையார்
> ஆட்சிப்பீடத்தில் அமர்ந்து இருந்தார்.
>   பாரத தேச்த்துடன் நெருக்கமான வாணிபத் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் ஒரு
> வாணிபச் சங்கம் அமைக்கப் பட்டது.
>   கிழக்கிந்திய வாணிபச் சங்கம் என்பது அந்தச் சங்கத்தின் பெயராகும்.
>   வெறும் வர்த்தகம் என்ற நோக்குடன் கிழக்கிந்திய வாணிபச் சங்கம் பாரத
> தேசத்தில் காலடி எடுத்து வைத்தது.
>   உண்மையில் அந்தச் சமயத்தில் வணிகம் மட்டுந்தான் கிழக்கிந்திய சங்கத்தின்
> நோக்கமாக இருந்தது.
>   ஒட்டகம் கூடாரத்தில் இடம் பிடித்தது போன்றுதான் அதே கிழக்கிந்தியக்
> கம்பெனி, பின்னர் சிறுகச் சிறுக பாரத நாட்டின் ஆட்சி உரிமையைக் கைப்பற்றியது.
>   1757-ஆம் ஆண்டுக்குப் பின்பு தான் கிழக்கிந்திய சங்கத்தின் மூலம்
> பிரிட்டீஷார் தங்கள் ஆதிக்கத்தை பாரத நாட்டின் மீது மெல்ல மெல்ல திணிக்க
> முற்பட்டனர்.
>   அதற்கு முன்னர் பிரிட்டீஷாரின் நோக்கம் பாரத தேசத்தில் ஆட்சியை நிலை
> நாட்டுவதாக இல்லை.
>   1757-ஆம் ஆண்டுக்கு முன்னர் ஆங்கிலக் கிழக்கிந்திய சங்கத்தின் முக்கியமான
> நோக்கம் பாரதத்தில் வணிகம் புரிவதன் மூலம் லாபம் சம்பாதிப்பதாக மட்டுமே
> இருந்தது எனலாம்.
>   பாரதத்துடன் வர்த்தகம் நடத்தி, வருவாய் சம்பாதிக்க மட்டுமே இருந்தது எனலாம்.
>   பாரத்துடன் வர்த்தகம் நடத்தி, வருவாய் ஈட்ட அக்காலத்தில் பல நாடுகள்
> திட்டமிட்டு செயற்பட்டன.
>   அந்த நாடுகளின் போட்டியை முறியடித்து இந்தியவில் தனிக்காட்டு ராஜாவாக
> வர்த்தகம் நத்தும் முயற்சியில்தான் ஆங்கிலக் கிழக்கிந்தியசங்கத்தினர் தீவிரமாக
> ஈடுபட்டிருந்தனர்.
>   இந்தியப் பண்டங்களை வாங்குவதிலோ, அவற்றை அயல் நாடுகளில் விற்பனை செய்வதிலோ
> போட்டி இருப்பின் அது லாபகரமான தொழிலாக இருக்காது என அவர்கள் நினைத்தார்கள்.
>   வெளிநாட்டு வியாபாரிகள் மட்டுமின்றி இங்கிலாந்து நாட்டின் பிற
> வர்த்தகர்களும் தங்களுக்குப் போட்டியாக பாரத தேசத்திற்கு வந்துவிடகூடாதே என்று
> கிழக்கிந்திய சங்கத்தினர் கருதினர்.
>   அதனால், இங்கிலாந்து நாட்டிலிருந்து தங்களை தங்கள் நிறுவனத்தைத் தவிர வேறு
> எந்த ஆங்கிலேயரும் வர்த்தக நோக்கில் பாரதத்திற்கு வராதவாறு தடை செய்ய வேண்டும்
> என கிழக்கிந்திய சங்கத்தினர், பிரிட்டீஷ் ஆட்சியை நிர்பந்திக்கத்
> தொடங்கினார்கள்.
>   பல வகையான குறுக்கு வழிகளைக் கையாண்டு, பாரத தேசத்தில் கிழக்கிந்தியச்
> சங்கம் மட்டுமே ஏகபோகமான வர்த்தகம் செய்யும் உரிமையினைப் பெற்றுவிட்டது.
>   உள்நாட்டு வர்த்தகர்களின் போட்டியை கிழக்கிந்திய சங்கத்தினரால் எளிதாக
> வெற்றி கொள்ள முடிந்தது.
>   ஆனால், ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகர்களும், வர்த்தக நிறுவனங்களும்,
> பாரதத்துடன் வாணிகத் தொடர்பு கொள்வதை பிரிட்டீஷ் ஆட்சியினால் தடுக்க
> முடியவில்லை.
>   ஆகவே, தங்களுக்கு எதிராக வர்த்தகப் போட்டியில் ஈடுபடும் குழுவினர்ரை
> எதிர்த்துப் போராட வேண்டிய நிலை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ஏற்பட்டது.
>   பெரும்பாலும் போட்டியாளர்கள் கடல் மூலமாகவே பாரதம் நோக்கி வர முயன்றதால்
> கிழக்கிந்தியக் கம்பெனி வலிமை மிக்க கடற்படை ஒன்றை வைத்துக்கொண்டு போர்
> முனையில் போட்டியாளர்களான எதிரிகளுடன் பல தடவை    மோதவேண்டியிருந்தது.
>   அந்தச் சந்தர்ப்பத்தில் பாரதத்தில் வலிமை மிக்க முகலாய சாராஜ்ஜியம்
> நிலவியிருந்தது.
>   முகலாய அரசுகளின் பாதுகாப்பில் வர்த்தகர்கள் இருந்ததால் , அவர்களுடன்
>  போட்டியிடுவது கிழக்கிந்தியக் கம்பெனியருக்கு எளிதாக இல்லை.
>   பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்க காலம் வரை கூட கிழக்கிந்தியக்
> சங்கத்தினரால் சுதந்திரமாக-- தங்கள் விருப்பம் போல வர்த்தகம் நடத்த இயலவில்லை.
>   முகலாய மன்னர்களிடமும், அவர்களது அதிகாரிகளிடமும் வேண்டுகோள் விடுத்தும்--
> விண்ணப்பம் செய்தும் ஓரளவுக்கு அவர்கள் வர்த்தகம் செய்ய உரிமை பெற முடிந்தது.
>   பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாய சாம்ராஜ்யம் பல் வேறு
> காரணங்களால் பலவீனமடைய நேர்ந்தது.
>   இதன் காரண்மாக ஆட்சி நடத்துவோரின் தலைமையகத்துக்கு நெடுந்தொலைவிலிருந்து
> கடலோரப் பகுதிகளில் முகலாய ஆட்சியினரின் அதிகாரம் மிகவும் தளர்ந்த நிலையில்
> இருந்தது.
>   இந்த சந்தர்ப்பத்தை ஆங்கிலக் கிழக் கிந்திய   சங்கத்தினர்  மிகவும்
> சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
>   தங்களுடைய வலிமை மிக்கக் கடற்படையின் துணையுடன் கடலோரப் பகுதிகளில்
> அவர்கள், தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தத் தலைப்பட்டனர்.
>   அத்துடன் பாரத வர்த்தகர்க
> ளிடம்   நேரிடையாக மோதி அவர்க
> ளைச் சீர்குலைக்கும்  முயற்சியிலும் ஈடுபட்டனர்.
>   கிட்டத்தட்ட ஓர் அரசாங்கத்தை நடத்துவது போன்றே பாரதத்தில், தாங்கள்
> அபகரித்த இடங்களில் ஆங்கிலக் கிழக்கிந்திய சங்கம் செயற்படத் தொடங்கியது.
>   அடிக்கடி அவர்கள் போரில் ஈடுபட வேண்டியிருந்ததாலும், தங்கள் கம்பெனி
> பாதுகாப்புக்காகவும், கம்பெனி நிர்வாகத் திற்காகவும் அவர்களுக்கு அதிகமான நிதி
> தேவைப்பட்டது.
>   அவர்கள் விரும்பும் அளவுக்கு அவர்களிடம் பொருளாதார வசதியில்லை. பிரிட்டீஷ்
> அரசும் அவர்களுக்குப் பெருமளவு நிதி உதவக்கூடிய நிலையிலில்லை.
>     ஆகவே, தேவைப்படும் நிதியில் கணிசமான பகுதியினை பாரதத்திலேயே
> திரட்டவேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது.
>   கல்கத்தா, சென்னை, பம்பாய் போன்ற தனது கடலோரக் கோட்டை நகரங்களில்
> குடிமக்கள் மீது வரிவிதித்து கிழக்கிந்தியக் கம்பெனி தேவைப் படும் நிதியைத்
> திரட்டியது.
>   மேலும், தங்கள் பொருளாதார வசதிகளைப் பெருக்குவதற்காக கம்பெனி தன்
> ஆதிக்கத்தை விரிவாக்க வேண்டியதாயிற்று.
>   இதற்கு கிழக்கிந்தியக் கம்பெனியார் பல்வேறு நடைமுறைகளைக் கையாண்டனர்.
>   மசூதிப் பட்டணம், சூரத், சென்னை, பம்பாய், கல்கத்தா, டாக்கா காஸிம்பஜார்
> ஆகிய இடங்களில் கிழக்கிந்தியக் கம்பெனி தன் வணிகத் தலங்களை அமைத்துக்கொண்டது.
>   புதுச்சேரி, மாஹி, காரைக்கால், ஏனாம், சந்திரதாகூர் ஆகிய இடங்களில்
> பிரெஞ்சுக்கார்கள் தங்கள் வணிகத் தலங்களை ஏற்படுத்திக் கொண்டனர்.
>   இவ்வாறு, முதல் முதலாக வர்த்தக நிறுவனத்திற்காக இடம் பிடித்தவர்கள், பிறகு
> மெல்ல மெல்லத் தங்கள் அதிகாரத்தை விஸ்தரித்துத் தேசம் முழுவதையும்
> பிடித்துக்கொண்டனர்.
>
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion on the web visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/1558889172.153680.1662531464271%40mail.yahoo.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/1558889172.153680.1662531464271%40mail.yahoo.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZoq%2BBGyzT8LwOT2%3Dt4O0W_sYCum56gvprSYLH85V0-4SWw%40mail.gmail.com.

Reply via email to