NANDRI. SIRUMAKKAL NEINAIVU KOORAPPADUGIRAARGAL KR IRS 3125 ---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Fri, 3 Jan 2025 at 04:06 Subject: Fwd: Indira Priyadarshini - Vegetable Purchases To:
*நாட்டு வணிகம்* *இந்திரா ப்ரியதர்ஷிணி * *கறிகாய் வாங்குவது எல்லார் வீட்டிலும் நிகழ்வதுதான். சந்தைக்குப் போய் ஆற அமர வாங்கும் வசதியும் நேரமும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. பெருநகரங்களில் பெரு வணிக சூப்பர் மார்க்கெட்டுகள் **ரிலயன்ஸ் ஃப்ரஷ், பிக் பாஸ்கட், நீலகிரிஸ், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் எனப் பல கடைகள் உண்டு. வீட்டிற்குத் தருவித்து வாங்கும்போது வேண்டியது வேண்டாதது குறைந்த பட்ச ஆர்டர். இருக்கவே இருக்கிறது ஆஃபர் தள்ளுபடி எல்லா வித டேக்களும். பெரும் கடைகளில் பாக்கெட்டில் வரும் உருளையில் ஒன்றாவது மோசமாய் இருக்கும்.* *நானும் அவசரத்திற்கு இவற்றைப் பயன்படுத்தினாலும் இப்போது ஒரு தெய்வம் தந்த கடை எனக்கு வாய்த்துள்ளது. அது லத்தீப் இக்கா கடை. இந்தக் கடை ஒரு தள்ளுவண்டி சைஸ். ஆனால் நகராது. இக்காவிற்கு என்று ஒரு இடம் இருக்கிறது. வண்டி எல்லாம் ரொம்ப நேரம் நிறுத்த முடியாது. இக்கா எல்லா நாளும் இருப்பார் என்று சொல்ல இயலாது. அப்புறம் அவரின் கையளவு முதலீட்டில் வாங்கும் கறிகாய் மூன்று மணி நேரத்தில் தீர்ந்து போகும். **சாதாரணமாக பெருங் கடைகளில் கிடைக்கும் பீன்ஸ் கேரட் பீட்ரூட் உருளை காலி ஃப்ளவர் வெண்டை கத்தரி குட்டைப் புடல் தாண்டி சிந்திப்பவர் நீங்களானால் இக்காவின் கடை உங்களின் மெக்கா. * *எங்கள் வீட்டில் நாட்டுக் காய்கறிகள் மிக விருப்பம். கத்தரியில் வயலட் கத்தரி, பச்சை வயலட் கலரில் பெரிய வெண்டை, நல்ல நீளப் புடலங்காய், பீர்க்கங்காய், சிறிய நாட்டுக் கத்தரி எல்லாம் கிடைக்கும் இக்காவிடம். இதைத் தவிர கிழங்கு வகைகள் கேரளமாதலால் ஏராளம். சிறிய சேம்பு, கண்டிச் சேம்பு, கூர்க்க, சேனை, மர வள்ளி, சக்கர வள்ளி அப்புறம் உருளை. வாழைக்காயில் ஏத்தக்காய் எனும் நேந்திரம் , படைச்சிக்காய் எனும் நாட்டு வாழைக்காய். சிறிய இடியன் சக்கை எனும் பலா முசு. கய்தச் சக்கை எனும் அன்னாசி. எலுமிச்சையில் சிறு நாரங்காய் எனும் சாதா எலுமிச்சை, கொடி நாரங்காய், வடுகப்புளி நாரங்காய், எல்லாம் கிடைக்கும். * *இஞ்சியில் முடிச்சு முடிச்சான நாட்டு இஞ்சி, மாங்காய் இஞ்சி. மிளகாயில் குண்டு மிளகாய், நீட்டு மிளகாய், காந்தாரி. சுரைக்காயில் நீட்டு மற்றும் உருண்டை. அப்புறம் இளவன் எனும் வெள்ளைப் பூசனி, மத்தன் எனும் பரங்கிக்காய். எப்போதும் கொடப்பன் என்னும் வாழைப்பூ மற்றும் வாழைப் பிண்டி எனும் தண்டு இருக்கும். பச்சைக் குறு மிளகு, பச்சைச் சுண்டைக்காய் இருக்கும். அப்புறம் நித்ய வழுதுணங்காய், ஜாம்பக்காய், இளம் டபுள் பீன்ஸ் எல்லாம் கிடைக்கும். * *எல்லாக் காயும் எல்லா நேரமும் இருக்காது. அந்தந்த சீசனில் விலை குறைவாக இருக்கும்போது வாங்கி வருவார். பீன்ஸ் வகையில் ஊட்டி பீன்ஸ், டபுள் பீன்ஸ், எங்கள் அச்சிங்காய் வயலட் பச்சை நிறத்தில் அதாவது பயத்தங்காய், கொத்தவரை எல்லாம் இருக்கும். தக்காளி நாட்டுத் தக்காளிதான். பெரும்பாலும் ஆர்கனிக் என்று பீற்றி விலை கூட்டிச் சொல்லும் எக்ஸோடிக் கடைகளைவிட மிகவும் நம்பகமாய் ரசாயன உரம் இன்றி விளைக்கப்படும் உண்மையான எக்ஸோடிக் காய்கறிகள் அவரிடம். கத்திரி வெண்டை முருங்கை இட்ட மாத்திரத்தில் சட்டியில் வேகும். நெல்லிக்காய் மாங்காய் நல்ல இனம் கிடைக்கும். * *அளவான முதலீடு, அளவான விலை. நிறைந்த சேவை. அவருக்கு என்று தனித்த வாடிக்கையாளர்கள். சிட்டியில் இருந்து இந்தக் கடையைத் தேடி வருவார்கள். மென்னியை பிடிக்கும் கெடுபிடி செக்கிங், கண் கவர் பாக்கிங் எல்லாம் கிடையாது. பெரிய வளாகம், சீருடை தடபுடல் கிடையாது. மோசமான காய் என்றால் அவர் தாமே தரவே மாட்டார். * *கொத்தமல்லி மட்டும் கிடையாது. அதற்குக் கீரைக் கடை ஒன்று இருக்கிறது. வியாபாரி பெயர் ஹரி இடும்பன். அவனிடம் எடை பார்க்கும் எந்திரம் கிடையாது. நம்பித்தான் வாங்க வேண்டும். எல்லாக் கீரை, கருவேப்பிலை மற்றும் மல்லி கிடைக்கும். மக்காச் சோளம் கிடைக்கும். * *நூறு மீட்டரில் வீட்டின் அருகில் இருக்கும் மாலில் நான் சாமான் வாங்குவது இல்லை. இக்காவும் இடும்பனும் எமக்கு ஏற்ற கறிகாய் தருகிறார்கள். உணவே மருந்து என்பது சரியாகும். * *பழங்களில் ஞாலீப்பூவன் ஏத்தப்பழம் பாளையங்கோட்டான் பூவன் மட்டும் இருக்கும். மாம்பழப் புளிசேரிக்குப் பயன்படுத்தும் சந்திரக்காரன் சில நேரம் கிடைக்கும். மற்றபடி ஆப்பிள் ஆரஞ்செல்லாம் கிடையாது. பணப்பைக்கும் இரைப்பைக்கும் பொருந்திய காய்கறிகள். "வையகம் காப்பவரேனும் சிறு வாழைப் பழக்கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்வோர் பூமியில் எங்கணும் மேலோர்" - பாரதி வாக்கு. இக்கா, இடும்பன் வணிகத்தில் எளிய உணவு. வளமான நலமான உணவு. இறைக்கு நன்றி. * *இந்திரா ப்ரியதர்ஷிணி * ******************************************************* *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor_%3D9r%3D2xPhXXbXdigr55%2BEOAgTiUBtWjY2G6OA%2B1irPQ%40mail.gmail.com.
