---------- Forwarded message --------- From: N Sekar <[email protected]> Date: Sat, Mar 15, 2025, 7:29 PM Subject: Fwd - Silent heroes, God Bless these people To: Kerala Iyer <[email protected]>, Rangarajan T.N.C. < [email protected]>, Narayanaswamy Sekar <[email protected]>, Chittanandam V. R. <[email protected]>, Mathangi K. Kumar < [email protected]>, Srinivasan Sridharan <[email protected]>, Suryanarayana Ambadipudi <[email protected]>, Rama (Iyer 123 Group) < [email protected]>, Dr Sundar <[email protected]>, Mani APS < [email protected]>
*465 நாட்கள் ✈️ HFN கதை 🌍 குழுவினரோடு.* ♥️ *கதை-406*♥️ *“வாழ்க்கையில், நாம் வெற்றி மற்றும் தோல்வி என்கிற விளையாட்டில், பரபரப்பாக இருக்கிறோம். ஒரு கணம் இடை நிறுத்தம் செய்து,,, நினைத்துப் பார்க்கலாம்; உண்மையிலேயே நாம் வெற்றி பெற்று இருக்கின்றோமா அல்லது நமது வெற்றியை இழந்து இருக்கின்றோமா?* *யார் வெற்றி பெற்றார்?* மாவட்டக் கல்வி அதிகாரியான பிறகு, நான் ஒன்றைத் தெரிந்து கொண்டேன்; அதாவது இந்த மாவட்டம் கல்வியில் மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றது; உயர் அதிகாரிகளும் கூட என்னிடம் தெரிவித்தார்கள்; நான் கிராமப் புறப் பகுதிகளில் சற்று கூடுதலாக சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும், என்பதையும் வலியுறுத்திச் சொன்னார்கள். ஆகவே, நான் ஒரு மாதத்தில் 8 முதல் 10 நாட்களுக்கு, கண்டிப்பாக கிராமப் புற பள்ளிகளைச் சென்று கவனித்தாக வேண்டும், என்று நான் முடிவு செய்தேன். விரைவிலேயே, கிராமப் புறங்களுக்கு பல் வேறு கட்ட தொடர் பயணம் ஆரம்பிக்கப் பட்டது. அங்கே சில மலைப் பிரதேசங்களும், காடுகளும் அடந்த பகுதியும் கூட அவற்றில் சேர்ந்து இருந்தன. ஒரு நாள், கீழ் நிலை ஊழியர் ஒருவர் என்னிடம் கூறினார்; படேரி என்று அழைக்கப்படும் கிராமம் அது! அது ஒரு குன்றில் மேல் இருக்கின்றது! எந்த ஒரு கல்வி அதிகாரியும், இது காறும் அந்த பள்ளிக்கு சென்று பார்த்தது இல்லை. காரணம் என்னவெனில், அங்கே போவதற்கு, 2 அல்லது 3 கி.மீ. தூரம் மரங்கள் அடர்ந்த, காட்டு சாலை வழியாக, அதுவும் கால் நடையாக உள்ள பயணம் மேற்கொண்டாக வேண்டும். அடுத்த நாளே, நான் அங்கே போக வேண்டும் என்று தீர்மானித்தேன். யாரோ திரு. பி.கே. வியாஸ் என்பவர் அங்கே தலைமை ஆசிரியராக இருக்கிறார். அவர் சில காரணங்களுக்காக அவர் அங்கேயே சிக்கி கொண்டு விட்டார். எந்தவிதமான முன்னறிவிப்பு தகவல் எதுவும், அவருக்குக் கொடுக்க வேண்டாம் என்று சொல்லி விட்டேன். இது ஒரு எதிர்பாராத வருகையாக இருக்கட்டும். அடுத்த நாள் காலை, நாங்கள் கிளம்பினோம். பிற்பகல் 12 மணிக்கு அந்த டிரைவர் கூறினார்; “சார், இங்கே இருந்து அந்த இடம் செல்ல நீங்கள் 2 அல்லது 3 கிமீ தூரம் காலால் நடந்தாக வேண்டும்” நாங்களும் மற்றும் இரண்டு ஊழியர்களும் நடக்கத் தொடங்கினோம். நாங்கள், பாறைகள், காடுகள் நிறைந்த, ஒடுங்கிய சாலைகள் வழியாக ஒன்றரை மணி நேரம் நடந்து மலை உச்சியில் இருக்கும், அந்த கிராமத்தை அடைந்தோம். நல்ல தரமான கட்டமைப்பு உள்ள நிலையான கட்டிடம்; அதில் பள்ளி இருந்தது. நிரந்தரமாக கட்டப் படாத நிலையில் உள்ள குடிசை வீடுகள் இருந்தன. அந்த பள்ளிக் கூடம் சுத்தமாகவும், மேலும் நேர்த்தியான முறையில் அழகாக வண்ணம் பூசப்பட்டும் இருந்தது. அங்கே மூன்று அறைகளும், மேலும் விசாலமான வராண்டாவும் கூட இருந்தன. நாங்கள் உள்ளே நுழைந்த போது, 125 குழந்தைகள் மூன்று வகுப்புக்களில் தங்களுடைய படிப்பில் மூழ்கி இருந்தார்கள். எனினும், அங்கே ஆசிரியர் யாரும் பிரசன்னமாக இல்லை. வராண்டாவில் இருந்த வயதான நல்ல மனிதர், அனேகமாக அங்கே பியூனாக வேலை பார்க்கின்ற நபராக இருக்கலாம். அவர் கூறினார், “விரைவில், தலைமை ஆசிரியர், வந்து விடுவார், சார்.” நாங்கள் அந்த முகப்பில் அமர்ந்து இருந்தோம். விரைவில் 42 வயதான ஒரு நல்ல மனிதர் மேலிருந்து, இரண்டு கைகளில், 2 பக்கெட் தண்ணீரோடு நடந்து , வந்து கொண்டு இருந்தார். முட்டு வரைக்கும் தொங்கிய பைஜாமாவும், மேலே காதி குர்தாவும், அவரது ஆடையாக இருந்தது. அவர் வந்தவுடனேயே, அவராகவே, தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்டார், நான் தான், பிரசாந்த் வியாஷ், தலைமை ஆசிரியராக இங்கே இருக்கிறேன். சாலைக்கு கீழே இருக்கும் கிணற்றில் இருந்து குழந்தைகளுக்கான தண்ணீரை நாங்கள் எல்லா நாட்களிலும், கொண்டு வந்தாக வேண்டும். இங்கே இருக்கும், நமது பியூனுக்கு வயதாகி விட்டது. அவரால் இப்பொழுது இதனைச் செய்திட இயலாது. ஆகவே நானே இதைக் கொண்டு வருகின்றேன்; இது ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் கூட இருக்கிறது.” அவர் புன்முறுவல் சிந்தினார். அவருடைய முகமும், அந்த பெயரும் கூட அந்த அதிகாரிக்கு பரிச்சயம் ஆனது போல தோன்றியது. நான் அவரைப்பற்றிய பார்த்துக் கொண்டு கேட்டேன்,“ நீங்கள் பிரசாந்த் வியாஸ், இந்தூரில் குஜராத்திக் கல்லூரியில் இருந்துதானே!” நான் என்னுடைய தொப்பியை அகற்றி விட்டேன். என்னை அடையாளம் கண்டு,அவர் ஆச்சரியத்தோடு கூறினார், நீங்கள், “அபினவ், அபினவ் ஸ்ரீ வஸ்தா!” “நான் கூறினேன். “வேறு யாராக இருக்க முடியும் சகோதரரே!” சரியாக, 20 வருடங்களுக்கு முன்பாக, இந்தூரில் தட்என் கல்லூரி படிப்பில், நாங்கள் இருவரும் சேர்ந்து படித்தோம். அவன் மிகவும் புத்திசாலி. மேலும் அறிவாளி எவ்வளவோ சிறப்பாக முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், நான் எப்போதாவது மிக அரிதாகத்தான், அவரைக் காட்டிலும், அதிகமான மதிப்பெண்கள், வாங்குவேன். எங்களிடையே, எப்போதும் போட்டிகள், அங்கே இருந்து கொண்டே இருக்கும்! அவர்தான், எப்போதும் வெற்றி அடைபவராக இருப்பார். இன்றைக்கு அவர் ஒரு தலைமை ஆசிரியர். ஆனால், நானோ, ஒரு மாவட்டக் கல்வி அதிகாரி. ன முதன் முதலாக நான் சிறப்பாக இருக்கின்றேன், என்ற உணர்வு வந்து விட்டது. உண்மையைச் சொன்னால், வெற்றி அடைந்து விட்டோம், என்கிற உணர்வு மேலிட, அங்கே எனக்குக் கொஞ்சம் மகிழ்ச்சி இருக்கிறது. நான் சந்தோஷமாகக் கேட்டேன், “நீங்கள், எப்படி இங்கே இருக்கிறீர்கள்? வீட்டில் யார் யார் இருக்கிறார்கள்?” அவர் விவரிக்கத் தொடங்கினார், நான் எம்.காம். படித்துக் கொண்டு இருந்த பொழுது, அப்பாவுக்கு, மால்வா மில் வேலை இல்லாமல் போய் விட்டது. அப்போது, அவருக்கு, ஆஸ்த்மா நோயும் சேர்ந்தே இருந்தது. குடும்பத்தை நடத்துவது என்பதே, கஷ்டமாகி போய் விட்டது. எப்படியோ,நான் என்னுடைய படிப்பை நிறைவு செய்தேன். மேலும் நான் நல்ல மதிப்பெண்கள் பெற்று. இருந்ததால், ஒரு ஒப்பந்த ஆசிரியராக நியமனம் ஆனேன். இதனை விட்டு விட்டு, என்னால் போக முடியவில்லை. நான் மேலும் தொடர்ந்து படிக்கின்ற சூழ்நிலைகள் சரிவர கிடைக்க வில்லை. என்னை இந்த கிராமத்தில் ஆசிரியராக நியமித்தார்கள். நான் இங்கு என்னுடைய பெற்றோர்களையும் கூடவே அழைத்து வந்தேன். குறைந்த அளவு பணத்தை வைத்து இங்கே வாழுவது எளிதானதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். பிறகு சிரித்துக் கொண்டே கூறினார், “என்னுடைய வேலை இந்த மாதிரியான தொலைவில் உள்ள கிராமம் என்பதாலும், இன்னும், நோய்வாய்ப்பட்ட பெற்றோர்கள் என்னோடு இருப்பதாலும், யாருமே, எனக்குத் திருமணம் செய்ய பெண் கொடுக்க முன் வரவில்லை. மேலும் இது எனக்கும், சரியாகவே பட்டது. எந்த ஒரு படித்த பெண்ணாவது இங்கே வந்து இருக்கத்தான் முடியுமா? எனக்கு யாருடனும் எந்தவிதமான தொடர்பும் இல்லாததால் இங்கிருந்து எனக்கு மாற்றல் ஏதும், கிடைக்கவும் இல்லை. ஆகவே நான் இங்கே தங்கி விட்டேன். இங்கே வந்த சில வருடங்களுக்காகவே, என்னுடைய பெற்றோர்களும், விட்டுப் போய் சேர்ந்து விட்டார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சேவையை, நானும் அவர்களுக்கு செய்து முடித்தேன். இப்போது, இந்தப் பள்ளி, மற்றும் இங்குள்ள குழந்தைகளோடு நான் மகிழ்ச்சியாக இங்கே இருக்கின்றேன். விடுமுறை நாட்களில், நான் அவர்களை, பக்கத்தில் உள்ள குன்றுகளுக்கு அழைத்துச் சென்று, மரங்களை நடச் செய்கிறேன். மாலை வேளைகளில், பள்ளி வரண்டாவில் வைத்து முதியோர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கிறேன். அநேகமாக, படிப்பறிவு இல்லாதவர்கள், இந்தக் கிராமத்தில் இனிமேலும், இருக்கப் போவது இல்லை. நான் ஒரு போதை தடுப்பு பிராச்சாரத்தையும் கூட இங்கே நடத்திக் கொண்டு இருக்கின்றேன். நானாகவே, எனது உணவை சமைத்துக் கொள்கிறேன்; புத்தகங்களைப் படிக்கின்றேன். என்னுடைய லட்சியம் என்னவென்றால், இந்தக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும்; அவர்கள் சிறந்த நன்னெறிகளைப் படிக்க வேண்டும். மேலும், நல்லொழுக்கங்களில் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதுதான். என்னால், C.A. ஆக முடியாமல் போய் விட்டது. ஆனால் என்னுடைய மாணவர்களில் இரண்டு பேர் C.A. முடித்து விட்டார்கள். மேலும் சில பேர் நல்ல வேலைகளில் சேர்ந்து, நன்றாக இருக்கிறார்கள். எனக்கு இங்கே பெரிய செலவு என்று ஏதுமில்லை. என்னுடைய வருமானத்தில், மிகுதியான அளவை இந்தத் குழந்தைகளின், கல்வி மற்றும் விளையாட்டு என்பனவற்றிற்காக செலவு செய்கின்றேன். கல்லூரி நாட்களில் இருந்தே எனக்குக் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் உண்டு, என்பது உங்களுக்குத் தெரியும். அந்த பொழுது போக்கும் கூட, இந்தக் குழந்தைகளோடு விளையாடி நிறைவேறி வருகிறது. எனக்கு போதுமான அளவுக்கு, அமைதி இங்கே கிடைக்கின்றது. நான் இடையே குறுக்கிட்டு, கூறினேன், “உங்கள் பெற்றோர்களின் மரணத்திற்குப் பிறகு, நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்வதைப் பற்றி நினைத்திட வில்லை? அவர் புன் சிரிப்போடு கூறினார், “ உலகத்தில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களும் எனக்காக இல்லை. ஆகவே, என் முன்னே இருக்கும் எல்லாவற்றையும் நல்லதாக மாற்ற முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். அவருடைய எளிமையான சிரிப்பு, என்னுடைய அடி ஆழத்தையே அதிர செய்ய வைத்து விட்டது. நான் திரும்பும் போது அவரிடம் கூறினேன், “ பிரசாந்த்! நீங்கள் எப்போது விரும்புகின்றீர்களோ, நான் உங்களை இட மாற்றம் செய்கிறேன்; தலைமை இடத்திற்கோ அல்லது நீங்கள் விரும்புகின்ற இடம் எதுவோ, அந்த இடத்திற்கோ, மாற்றி தருகிறேன். அவர் புன்சிரிப்போடு கூறினார்,“இது இப்போது, மிகவும் கால தாமதம் ஆகி விட்டது சார்! இங்கே இப்பொழுது, இந்த மக்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.” கைகளை கூப்பியவாறே அவர் கூறிக் கொண்டு இருந்தார். என்னுடைய சொந்த சாதனைகளை வைத்து, நான் அவரை விடவும் முன்னேறிச் சென்று விட்டேன், என்ற பெருமித உணர்வும், வெற்றி அடைந்து விட்டேன் என்று இருந்த மாயையும் இப்போது தகர்ந்து, நொறுங்கிப் போய் விட்டது. அவருடைய வாழ்க்கையில் குறைபாடுகள் உண்டு; இன்னும் கஷ்டங்கள், வசதியின்மை இவை அனைத்துமே இருக்கின்ற நிலையிலும், அவர் வசதியாகத்தான் இருக்கிறார். அவருடைய மன சாட்சியால், நான் மனம் தடுமாற்றம் அடைந்து விட்டேன். அவருடைய வாழ்க்கையில், அவர் நடத்தையில், எந்த விதமான துன்பத்தின் அல்லது குறைபாட்டின் அடையாளமே கிடைக்கவில்லை. நாம் வசதிகள், சாதனைகள், பதவிகள் இவற்றின் அடிப்படையில், மக்களை மதிப்பீடு செய்கிறோம். ஆனால் இவை எதுவுமே இல்லாமலேயே கூட, அவர் என்னை, தோற்கடித்து விட்டார்! திரும்பும் போது, உணர்ச்சிகளில் மூழ்கிய என்னால் அவரிடம் ஒன்றே ஒன்றுதான் கூற முடிந்தது; கைகளைக் கூப்பியவாறே, “உங்களுடைய இந்த புனிதமான தொண்டில் எப்போதாவது நான் உங்களுக்குத் தேவைப் படுகிறேன் என்றால், அப்போது, கண்டிப்பாக என்னை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் நண்பரே!” நிர்வாக மட்டத்தில், நீங்கள் எப்படிப்பட்ட பதவி வகித்தாலும் சரி, வகித்துக் கொண்டிருந்தாலும் சரி, உண்மையில் அது ஒன்றுமே இல்லை. விஷயம் என்னவென்றால், நீங்கள் எப்படிப் பட்ட மனிதராக இருக்கிறீர்கள், என்பதுதான் முக்கியம். மேலும் என்னவாக மாறிக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதும் முக்கியம்! *தாஜி மகராஜ்:* *நம்மிடம் பணிவும், எளிமையும் இருக்கின்றது என்றால், நம்மிடம் எல்லாமே இருக்கின்றன என்று நாம் நம்ப இயலும். வேறு எந்த ஒன்றுமே நமக்குத் தேவை இல்லை. பணிவு என்பதுடன், ஒரு பெரிய இதயமும் இருக்கின்றது என்றால், நாம் மரியாதை என்பதையும் சம்பாதிப்பதோடு, மிகச் சிறப்பானதையும் சாதிக்கின்றோம்.* *ஹார்ட்ஃபுல்னெஸ் தியானம்.*💌 *HFN கதைக் குழு, ஜோத்பூர்.* Yahoo Mail: Search, Organize, Conquer <https://mail.onelink.me/107872968?pid=nativeplacement&c=US_Acquisition_YMktg_315_SearchOrgConquer_EmailSignature&af_sub1=Acquisition&af_sub2=US_YMktg&af_sub3=&af_sub4=100002039&af_sub5=C01_Email_Static_&af_ios_store_cpp=0c38e4b0-a27e-40f9-a211-f4e2de32ab91&af_android_url=https://play.google.com/store/apps/details?id=com.yahoo.mobile.client.android.mail&listing=search_organize_conquer> -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CABC81ZdGgsbotcy%2BYHgoNzgwZ26sUpggbyvF7PSffHSzcRniAw%40mail.gmail.com.
