ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~ 184 /03-02-2026
சுந்தர காண்டம் - முன்னுரை ..2 ★எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அதை வெல்ல முடியும் என்று தைரியம் சொல்வது சுந்தர காண்டம். துன்பத்தில் துவண்டு விடலாம், தோள் தந்து நம்மை தூக்கி நிறுத்துவது சுந்தர காண்டம். சுந்தர காண்டத்தை படிக்க படிக்க மனதில் ஒரு உற்சாகம், நம்பிக்கை, உத்வேகமும் வரும். முடியும். இது என்னால் முடியும். என்னால் இந்த துன்பத்தை வெற்றி காண முடியும் என்று தன்னம்பிக்கை தருவது சுந்தர காண்டம். மனம் சோர்வடையும் போதெல்லாம் சுந்தர காண்டத்தை படியுங்கள். அது ஆயிரம் "சுய உதவி கள்" (Self Help) புத்தகங்களுக்கு சமம். மேலும் சிந்திப்போமா ? ★இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, நமது குறிக்கோள் என்ன என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது. அடுத்து இரண்டாவது, குறிக்கோளை அடையும் வழியில் பல சலனங்கள், சபலங்கள் வரும். அவற்றைக் கண்டு , அதில் மயங்கி நின்று விடக் கூடாது. அல்லது குறிக்கோளை விட்டு வேறு வழியில் போகக் கூடாது. அனுமனுக்கு தேவர்களின் உலகம் கண்ணில் பட்டது. அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாமே என்று நினைத்திருக்கலாம். அழகான பெண்கள், கற்பக மரம், இனிமை யான இசை, நல்ல கட்டிடங்கள், மனதை மயக்கும் நறுமணம் என்று எல்லாமே இருந்திருக்கும். அதில் எல்லாம் மனதைச் செலுத்தாமல், தனது குறிக்கோள் என்ன என்பதில் கவனமாக இருந்தான். ★துன்பத்தை வெல்ல முதல் படி, குறிக்கோளில் தெளிவாக இருக்க வேண்டும். எடையை குறைக்க வேண்டும் என்பது குறிக்கோள். உணவை கட்டுப் படுத்த வேண்டும் என்று தெரியும். நல்ல ice cream ஐ பார்த்தால் உடனே குறிக்கோள் மறந்து போய் விடுகிறது. படிக்க வேண்டும் , நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பது குறிக்கோள். தொலைக்காட்சியில் கிரிக்கட் வந்தால், பெரிய நடிகரின் திரைப் படம் வந்தால் குறிக்கோள் மறந்து போய் விடுகிறது. சலனத்திற்கு ஆட்படாமல், குறிக்கோளில் குறியாக இருக்க வேண்டும். துன்பம் ஓடிப் போய்விடும். போகட்டும். ★அனுமன் தோள் கொட்டி ஆர்பரித் தான். ஏன் தெரியுமா? இலங்கை நகரைப் பார்த்தான். அவ்வளவுதான். அதுக்கு உலகம் பூரா கேட்கும்படி மகிழ்ச்சி ஆரவாரம். ஒரு வேலையை தொடங்கும் போது மிகுந்த உற்சாகம் வேண்டும். ஒரு ஆகாய விமானத்தி ற்கு எப்போது அதிக பட்ச சக்தி வேண்டும் என்றால் அது தரையில் ஓடி விண்ணில் தாவும் அந்த ஒரு நேரத்தில் தான். அதே போல நமக்கு எப்போது அதிக பட்ச சக்தியும், உற்சாகமும் வேண்டும் என்றால் ஒரு வேலையை தொடங்கும்போது. மகிழ்ச்சியாக, உற்சாகமாக தொடங்கிவிட்டால் அதுவே பாதி வெற்றி பெற்ற மாதிரிதான். ★எனவே, எதை ஆரம்பித்தாலும், சந்தோஷமாக, உற்சாகமாக, மிகுந்த உத்வேகத்துடன் ஆரம்பியுங்கள். சோர்ந்து, தளர்ந்து, சந்தேகத்துடன் ஆரம்பிக்காதீர்கள். அந்த உற்சாகம், உந்துதல் மட்டுமே கூட அந்த வேலையை சிறப்பாக செய்து முடிக்க உதவும். உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். இன்னும் அடுத்து வரும் சில பாடல்களில் அனுமனின் உற்சாகத்தை, மகிழ்ச்சியை நாம் காணலாம். எப்போதெல்லாம் சோர்வு வருகிறதோ, தளர்ச்சி வருகிறதோ... சுந்தர காண்டம் படியுங்கள். அந்த அனுமனின் உற்சாகம் உங்களையும் பற்றிக் கொள்ளும். பற்றட்டும் ! ★ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு சில துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன. நாமும் சோர்ந்து போய் விடுகிறோம். என்ன செய்வது, யாரிடம் போய் உதவி கேட்பது , என்று குழம்பிப் போய் நின்றிருப்போம். கடைசியில் ஏதோ ஒருவழிதோன்றும். அது சரியா தவறா என்று கூடத் தெரியாது. எப்போது ஒரு வழி சரி என்று தெரிந்து விட்டதோ, அப்போது அதில் முழு மூச்சுடன் செல்ல வேண்டும். அனுமன் இலங்கையை கண்ட பின் , ஆரவாரத்துடன் கிளம்புகிறான்... எப்படி என்றால்? கம்பர் சொல்கிறார்... நாளை................ ......... -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvGbO4QzVbiOKDdAz0rA0h98E9AnLJ1ziL3NhEUv3eZzA%40mail.gmail.com.
