ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~~~
197 / 16-02-2026

ராவணன்
அசோகவனம் வருதல்...

★திரிசடை தன் கனவை பற்றி கூறியதை கேட்ட சீதை, திரிசடை தாயே! உன் கனவின்
மிஞ்சிய பகுதியையும் கண்டுவிட்டு, எனக்கு கூறு. இப்பொழுது நீ உறக்கத்திற்கு
செல் என்றாள். மரத்தில் அமர்ந்து இருந்த அனுமன் கீழே இறங்கி சீதை யிடம்
பேசலாமா என நினைத்தான். அப்போது அங்கு தூங்கி கொண்டு இருந்த அரக்கியர்கள்
தூக்கத்தை கலைத்து சீதையை காவல் புரிய தொடங்கினர். இதை பார்த்ததும் அனுமன்
உடனே ஓடி சென்று தன்னை யாரும் பார்க்காத வண்ணம் மரத்தில் ஏறி கொண்டான்.

★அப்போது அந்த அரக்கிகள் சீதை. யிடம், நீ எதற்கு அழுது கொண்டிருக் கிறாய்?
உன்னை யார் என்ன செய்தார்கள்? எங்கள் அரசனான ராவணனுக்கு அறிவே கிடையாது. அவர்
எங்களில் யார் ஒருவரையா வது விரும்பி இருந்தால் நாங்கள் மகிழ்சியாக அவரின்
மனைவியாக மாறி இருப்போம். எங்கள் அரசரை நீ ஏற்றுக் கொண்டால் இங்கு நீ.மிக்க
மகிழ்சியாக இருக்கலாம். எங்கள் அரசர் இங்கு வந்தால் அவரை வரவேற்று வணக்கம்
சொல் என்று அச்சுறுத்தினார்கள். இவர்களின் இச்சொற்களை கேட்டு சீதை மிகவும்
துன்பம் கொண்டாள். அனுமன் சீதையின் பரிதாப நிலைமையை பார்த்து மனம் கலங்கினான்.

★தூங்க முயற்சித்துக் கொண்டு இருந்த ராவணன், சீதை தன்னுடைய ஆசைக்கு
இணங்கவில்லையே என்ற கோபத்தில் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது இருட்டு மறைந்து காலை சூரியன் மெல்ல வெளிவந்தது. வேத மந்திரங்கள்
முழங்க ராவணன் எழுப்பப்பட்டான். காலையில் எழுந்ததும் தன் படை வீரர்கள்,
பரிவாரங்களுடன் சீதையை பார்க்க செல்லலாமென ராவணன் நினைத்தான் .

★ராவணன், மிகவும் ஒளி வீசுகின்ற மணிகளை அணிந்து சீதையை நோக்கி புறப்பட்டான்.
இந்திரன் சபையில் உள்ள அப்ஸரஸ் ஊர்வசி உடைவாளை ஏந்திக் கொண்டு அவனுடன்
வந்தாள். மேனகை வெற்றிலை பாக்கை மடித்து கொடுத்துக் கொண்டு உடன் வந்தாள்.
திலோத்தமை அவனுடைய காலணிகளை தூக்கிக் கொண்டு உடன் வந்தாள். மற்றும் ஏனைய தேவ
மாதர்கள் சூழ மிகுந்த ஆடம்பரமாக ராவணன் நடந்து வந்தான். அவன்
அசோக வனத்திற்கு வந்தவுடன் அங்கு இருந்த அரக்கிகள் அவனுக்கு வழிவிட்டு
நின்றனர். ராவணன் வருவதை கண்ட அனுமன் மரத்தில் நன்கு ஒளிந்து கொண்டான்.

★இரவில் தூங்கும் போது கண்டதை விட இப்போது மேலும் பராக்கிரம சாலி போல் ராவணன்
அனுமனுக்கு தெரிந்தான். அங்கு நடப்பவற்றை அறிந்து கொள்ள அனுமன் மரத்து
இலைகளுக்கு இடையே தன்னை மறைத்துக் கொண்டான். இலங்கை வேந்தன் ராவணன், ஆடம்பரமான
ஆடை அலங்காரத்தோடும், அரம்பை மகளிரும் பணிப் பெண்களும் அவனைச் சூழ்ந்து
வரவும், சீதையிரு க்கும் இடம் நாடி வந்தான். அரக்கிய ரையும் அரம்பையரையும்
விலகியி ருக்க சொல்லித் தான் மட்டும் தனி ஒருவனாய் சீதையின்  அருகில்
சென்றான். அவள் கடும்புலிக்கு நடுங்கும் இளமான் ஆனாள். ராவணன் சீதையின் முன்
நின்றான்.

★அவனைக் கண்டதும் சீதையின் உடல் கூசியது. சீதை,ராவணனை கண்டதும் பெரும்காற்றில்
நெடிய மரங்கள் நடுங்குவதை போல நடுங்கினாள். சீதையிடம் ராவணன் பேச
ஆரம்பித்தான். அழகியே என்னை கண்டதும் ஏன் இப்படி நடுங்குகிறாய்? நான் உன் மேல்
வைத்திருக்கும் அன்பை நீ தெரிந்து கொள். என்னைக் கண்டு பயப்பட வேண்டாம்.
உன்னுடைய முழுமை யான அன்பு என்மீது வரும் வரையில் நான் உன்னை தொட மாட்டேன்.

★ஆசை வெட்கம் அறிவதில்லை என்று கூறுவதைப் போல அந்த
ராவணன் சீதையிடம், நீ என் மேல் இரக்கம் காட்ட மாட்டாயா? இதுநாள் வரை உனக்காக
காத்திருந்து நாட்கள் வீணாகி விட்டது என்று நாக்கூசாமல் தன் ஆசைகளை
வாய்விட்டுப் பேசி னான். தன்னை அவள் அடைவதால் அவளுக்கு உண்டாகும் நன்மைகளை
எடுத்து உரைத்தான். “செல்வச் சிறப்பும், ஆட்சிப் பொறுப்பும் உடைய என்னை
மதிக்காமல், காட்டில் திரியும் அற்ப மனிதனான ராமனைக் கற்பு என்னும் பேரால்
நினைத்துக் கொண்டு இருப்பது அறியாமை. வாழத் தெரியாமை” என்று உரக்க கூறினான்.

★நீ என்னை அடைந்தால் இந்த மூவுலகமும் உன்னை வந்து அடையும். ராமனிடம் இருந்து
பிரிந்து வந்த பிறகு அவனை நினைத்து அழுவதில் ஒரு பயனும் இல்லை. உன் அழகுக்கு
ஏற்றவன் நான் மட்டும் தான். என்னை வேண்டாம் என்று சொல்லாதே. என்னை போல் பலம்
கொண்டவன் இவ்வுலகில் எவரும் இல்லை. உனக்கு நல்ல ஒரு வாழ்வு காத்துக் கொண்டு
இருக்கிறது. அதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். நீ என்னுடன் வந்தால் என் செல்வங்
கள் மேலும் பெருகும். நீ ராமனையே நினைத்து கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை.
ராமன் இங்கு வரப் போவதில்லை. அப்படி வந்தாலும் உன்னை மீட்டு செல்லப் போவது
இல்லை.

★தேவர்கள் முதலானோர் என் அடிமைகளாக இருக்கின்றனர். நான் உனக்கு அடிமையாக
இருக்கிறேன். உனது சிறப்பான அடிமையாகிய என்னை நீ ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
என தன் இரு கரங்களை யும் கூப்பி மண்டியிட்டு கேட்டான்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை....................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdvG%3DayLHMV%2BZsF2ugj4149jWWS0NL-BD6VSfzNYZ5%2BkJw%40mail.gmail.com.

Reply via email to