ஶ்ரீராம காவியம் ~~~~~~~~~~~~~~~~~~ 206 / 25-02-2026
சூடாமணியளித்தல்... ★மேலும் சீதை, அனுமனிடம் 'தப்பித்துச் செல்ல நினைப்பதை விட உயிர் விடுவதே மேல்’ என்பதைச் சுட்டிக் காட்டினாள். காவிய நாயகி யின் கடுமையான சொற்கள் அவனை அடக்கி வைத்தன. வீர மறக்குலத்தில் பிறந்த பாரதப் பெண் மணியைக் கண்டான் அனுமன். “வாழ்க்கை கிடைக்கிறது” என்பதற் காக அவள் தாழ்ந்து போக சிறிதும் விரும்பவில்லை. வீர சுதந்திரம் வேண்டி நிற்கும் பேராண்மை அவளிடம் காணப்பட்டது. ★ “ராமனிடம் தாங்கள் சொல்ல நினைக்கும் செய்திகள் ஏதேனும் உள்ளதா?” என்று அடக்கமாய்க் கேட்டான் அனுமன். “இந்திரன் மகன் ஜயந்தன், எங்கள் ஏகாந்தத்தின் இடை புகுந்து, காக்கை வடிவில் என் காலைத் தொட்டான். புல் ஒன்று கொண்டு அப்பறவையை விரட்டி னார் ராமர். இந்தச் செய்தியைச் சொல்லுக” என்றாள். “காக்கை ஒன்று தொட்டதற்கே அவர் பொறுமை காட்டவில்லை. அரக்கன் ஒருவன் சிறை வைத்திருப்பதை அவரால் எப்படிப் பொறுத்திருக்க முடியும்?” என்ற கருத்தை உண்டாக்க இந்தச் செய்தியை நினைவுப் படுத்தினாள். ★“அன்பாக வளர்த்து வந்த தன் கிளிக்கு யார் பெயர் இடுவது?” என்று ராமரைக் கேட்க, அவர், தான் நேசித்து வந்த மதிப்புமிக்க அன்னை கைகேயி பெயரை வைக்கும்படி கூறியதை நினைவு படுத்தினாள். மிகுந்த அர்த்தமுள்ள நிகழ்ச்சியாக இது இருந்ததால் அதனை எடுத்து உரைத்தாள். “எந்தத் தாயை அவர் உயிரினும் மேலாக நேசித்தாரோ, அவளே அவன் வாழ்வுக்கு உலை வைத்தாள்” என்பதை நாகரிகமாய்ச் சுட்டிக் காட்டினாள். ★கணையாழியைக் கொடுத்த ராமருக்கு, அதற்கு இணையாய் தன் தலையில் குடியிருந்த சூடாமணியை எடுத்து அவனிடம் தந்தாள். “இது எங்கள் திருமண நாளை நினைவு படுத்தும் அடையாளம்” என்றாள். சீதை, தன் ஒளிமிக்க சூடாமணியை கையில் எடுத்து அனுமனிடம் கொடுத்ததும் அனுமன், இது என்ன? எனக் கேட்டான். நான் கொடுத்த அடையாளமாக ராமரிடம் இந்த சூடாமணியை கொடு. இந்த ஆபரணத்தை பார்த்தால் ராமருக்கு என் நினைவு மட்டுமின்றி, என் தாய் மற்றும் ராமரின் தந்தையான தசரதனின் ஞாபகமும் வரும் என்றாள் சீதை. ★அனுமன், சீதையை வணங்கி அவள் அளித்த சூடாமணியை வாங்கி பத்திரப்படுத்திக் கொண் டான். பிறகு அனுமன் நிச்சயம் இத்துன்பத்தில் இருந்து தாங்கள் மீள்வீர்கள். ராமர் தங்களை காப்பாற்ற பேராற்றல் கொண்ட ஒரு பெரும்படையுடன் இங்கு வருவார் என ஆறுதல் கூறினான். பிறகு அனுமன் சீதையிடம் ஆசியை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட ஆரம்பித்தான். நீ சென்று ராமரையும் லட்சுமணனையும் உங்களது பராக்கிரமம் கொண்ட வானர சேனைகளையும் இங்கே அழைத்துவா. நான் அதற்காக காத்திருக்கிறேன். ராமருடைய அம்புகளால் இந்த இலங்கை அழிந்து ராவணன் எமன் உலகம் அனுப்பப்பட வேண்டும். ஆகவே விரைந்து சென்று வா என்று சீதை அனுமனிடம் கூறினாள். ★தாயே! நான் ஒருவன் தான் இந்த பெரிய கடலை தாண்டக் கூடியவன் என்று எண்ணி விடாதீர்கள். அரசன் சுக்ரீவனின் வானரப் படையில் உள்ளவர்கள் அனைவரும் பல யோசனை தூரம் தாண்டி பறந்து செல்லும் சக்தியை பெற்றிருக்கிறார் கள். என்னை விட மிக அதிகமான சாமர்த்தியசாலியாக அவர்கள் இருப்பார்கள். இந்த கடலை தாண்டு வது எங்கள் வானரப் படைகளுக்கு ஒரு பெரிதான காரியமில்லை. என்னை விட பலசாலிகளும், அறிவாளிகளும் சாமர்த்தியசாலி களும் ஆகாய மார்க்கமாக பறந்து செல்லக் கூடிய சக்தியை பெற்றவர்க ளும் ஆயிரக்கணக்கில் எங்களிடம் இருக்கிறார்கள். தங்களுக்கு ஒரு சந்தேகமும் வேண்டாம். ★எனது முதுகில் ராமர் மற்றும் லட்சுமணன் இருவரையும் அமர்த்திக் கொண்டு விரைவில் இங்கு தாவி வந்து விடுவேன். ராமரும் இளவல் லட்சுமணனும் வில் அம்புடன் இலங்கையின் எல்லையில் நிற்பார்கள். இந்த செய்தி தங்களின் காதுகளுக்கு வந்து சேரும். அசுரன் ராவணனையும் அவனை சார்ந்தவர் களையும் அடியோடு ராமரும் தம்பி லட்சுமனணும் அழிப்பதை பார்ப்பீர் கள். வானர சேனைகள் குதித்து கூத்தாடி இந்த இலங்கை நகரத்தை அழிப்பதை பார்ப்பீர்கள். தைரியமாக இருங்கள் என்று சீதையை வணங்கி நான் செல்கிறேன் எனக்கு அனுமதி அளியுங்கள். ★அதற்கு முன்பாக எனக்கு ஒரு விண்ணப்பம் இருக்கிறது அதற்கும் அனுமதி கொடுங்கள் என்று கேட்டார் அனுமன். அதற்கு சீதை என்ன என்று கேட்டாள். அனுமன் சீதையிடம் இந்த அசோகவனத்தில் உங்களின் இந்த அவலநிலையே கண்ட பின்பு நான் அப்படியே செல்ல விரும்பவில்லை. தங்களை கொடுமைப்படுத்தும் இங்குள்ள ராட்சசிகளை அழிக்க என் கைகள் துடிக்கின்றன. தயவு செய்து தாங்கள் இதற்கு அனுமதி கொடுங் கள் என்றார். ஆனால் சீதையோ உனது கோபம் அர்த்தமில்லாதது. ராவணன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவது ராட்சசிகளின் கடமை. தங்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள். இவர்களை தண்டிப்பது முறையாகாது என்று கூறினாள். வணக்கத்துடன் நாக சுபராஜராவ் 9944110869. நாளை.................. -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DduakhdmxZaP1CRFNh6nUSF%3DVSLx%3Dp%3DVjA_RoYQN%3DBM5Dw%40mail.gmail.com.
