ஶ்ரீராம காவியம்
~~~~~~~~~~~~~~~~~~
208 / 27-02-2026

அசோகவனம்
சோகவனமானது...

★அசோக வனத்தில் தனது சிறிய உருவத்தை பெரிய வடிவமாக்கி கொண்ட அனுமன் அந்த அசோக
வனத்தை சோகவனமாகச்செய்ய ஆரம்பித்தான். மரங்களை வெட்டி வீசினான். கொடிகளை நாசம்
செய்து குவியல் போன்று வைத்தான். அலங் காரங்கள் அனைத்தையும் உடைத்து
எறிந்தான். மிக ரம்மியமான அழகு டன் இருந்த அசோகவனம் இப்போது தன்னுடைய  அழகை
முற்றிலும் இழந்தது. அங்கே இருந்த மான்களும் மற்றும் எல்லா பறவைகளும் பயந்து
ஓடி அசோகவனத்தை விட்டு விலகி வெளியேறின. அனுமன் அந்த நந்தவனத்தை அழித்து
விட்டு மதில் மேல் ஏறி அமர்ந்தார்.

★அனுமன் ராட்சதர்கள் வரட்டும் அவர்களை ஒரு வழி செய்து விடலாம் என்று மதில்
சுவற்றில் சுகமாக அமர்ந்திருந்தார். அரசன் ராவணனிடம் சென்ற ராட்சசிகள்
அசோகவனத்தை ஒரு பெரிய வானரம் அழித்து விட்டு எல்லா ராட்சசிகளையும்
பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சீதையை சுற்றி இருக்கும் மரங்கள் கொடிகளை
மட்டும் அந்த வானரம் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்துள்ளது. சீதையிடம் அந்த
வானரம் ஏதாவது தகவல் சொல்ல வந்திருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.
சீதையிடம் கேட்டுப் பார்த்தோம் அவர் எனக்கு தெரியாது என்று சொல்லி விட்டார்.
அந்த வானரத்தை அழிக்கத் தக்க ஆட்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்
கொண்டார்கள்.

★தன் சுகபோகத்திற்காக உருவாக்க ப்பட்ட அசோகவனம் அழிந்துவிட்டது என்ற செய்தியை
கேட்ட ராவணன் மிகவும் கோபம் கொண்டான். தனது ராட்சச வீரர்களிடம் அந்த வானரத்தை
பிடித்துக் கொண்டு வாருங்கள் என்று கட்டளையிட்டான். இரும்பு உலக்கை கள், கத்தி
மற்றும் பலவிதமான கொடுரமான  ஆயுதங்களுடன் ராட்சத வீரர்கள் அனுமனை பிடிக்க அந்த
அசோக வனத்திற்கு விரைந்த னர். அனுமன் அசோகவனத்து
மதில் சுவற்றின் மேல் அமர்ந்து இருப்பதை கண்ட ராட்சதர்கள் அனுமனை தாக்க
முற்பட்டார்கள். அனுமன் ராட்சதர்களை கண்டதும், அசோகவனத்தின் வாயில் கதவில்
இருந்த பெரிய இரும்பு கட்டையை பிடுங்கி, எதிர்கொண்ட ராட்சதர்கள் அத்தனை
பேரையும் எதிர்த்து யுத்தம் செய்தான்.

★மரங்களை வேரோடு பிடுங்கி அவர்களின் மீது எறிந்தான்.  வந்திருந்த ராட்சதர்களை
ஒருவர் பின் ஒருவராக அழித்து விட்டு மீண்டும் அசோகவனத்தின் நெடிய மதில்
சுவற்றின் மேல் அமர்ந்தான்.
பின்னர்,  வாழ்க ராமர்! வாழ்க லட்சுமணன்! வாழ்க சுக்ரீவன்! என்று கர்ஜனை செய்த
அனுமன், ராட்சசர் களே! உங்களுக்கு அழிவு காலம் வந்து விட்டது. எங்களது பகைவர்க
ளான உங்களை அழிக்க வந்திருக்கி றேன். ஆயிரம் ராவணன்கள் இந்த இலங்கையில்
இருந்தாலும் இப்போது என்னிடம் யுத்தம் செய்ய வரலாம். என்னை எதிர்க்க வரும்
அனைவரையும் அழிக்க நான் மிகவும்  தயாராக நிற்கின்றேன். உங்கள் இலங்கை நகரத்தை
இப்பொழுது அழிக்க போகின்றேன் என்று அங்கிருந்த  அனைவரும் நடுங்கும்படி அனுமன்
கர்ஜித்தான்.

★வானரத்தை பிடிக்கச் சென்ற ராட்சதர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் என்ற
செய்தியை கேட்ட ராவணன் மிகுந்த கோபத்துடன் கொதித்து எழுந்து கர்ஜனை செய்ய
ஆரம்பித்தான். உடனே ராவணன் கிங்கரர் என்னும் ஒரு வகை அரக்கர் களை அழைத்து,
அக்குரங்கை தப்பிக்க விடாமல் என்னிடம் கொண்டு வந்து ஒப்படையுங்கள் என்று
ஆணையிட்டான். உடனே கிங்கர அரக்கர்கள் அனுமனை தேடி விரைந்துச் சென்றனர்.
அவர்கள் வானரவீரன் அனுமனை சூழ்ந்துக் கொண்டனர்.

★உடனே அனுமன் தன் அருகில் இருந்த மரத்தை பிடுங்கி கிங்கர அரக்கர்கள்
அனைவரையும் அழித்தான். அனுமனை பிடிக்கச் சென்ற கிங்கர அரக்கர்கள் அனைவ ரும்
இறந்த செய்தி ராவணனுக்கு தெரிவிக்கப் பட்டது.  அங்கே அழகான  அசோக வனத்தில்,
அனுமன் அருகில் இருக்கும் பெரிய மண்டபத்தின் மேலே ஏறி நின்றான். பெரிய
உருவத்தில் இருந்த அனுமன் நிற்பது,  இலங்கையின் மேல் ஆகாயத்தில் ஒரு பிரகாசமான
பொன்மயமான மலைத்தொடர் இருப்பது போல் இருந்தது. இந்த
இலங்கையை அழிக்கவே நான்  வந்திருக்கிறேன் என்று உரக்க  கர்ஜனை செய்த அனுமனின்
சத்தம் நகரத்தின் எட்டு திசைகளிலும் எதிரொலித்தது.

★அனுமனின் சத்தத்தை கேட்ட பல ராட்சசர்களின் உள்ளம் நடுங்கியது. அந்த பெரிய
மண்டபத்தில் காவல் காத்துக் கொண்டிருந்த ராட்சசர்கள் அனுமன் மீது பல பயங்கர
ஆயுதங் களை தூக்கி எறிந்து தாக்கினார்கள். அனுமன் மண்டபத்தின் தூணாக இருந்த
தங்கத்தினால் செய்யப்பட்டு வைரத்தினால் அலங்காரங்கள் செய்யப்பட்ட தூணை
பிடுங்கி எதிர்த்த ராட்சசர்களின் மீது எறிந்தான். தூணை எடுத்ததும் பெரிய
மண்டபம் கீழே இடிந்து விழுந்தது. தாக்கிய ராட்சதர்கள் அனைவரும் அழிந்தனர்.

வணக்கத்துடன்
நாக சுபராஜராவ்
9944110869.

நாளை....................

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJgp%3DdtknPkoSbxNf5FvkPBFq%3DiFT23fnnDMs7Pp63UKXSV8Xg%40mail.gmail.com.

Reply via email to