Azhwar thoughts are different from truth where Vedas say Brahmam is NIRGUNA KR 17526
---------- Forwarded message --------- From: Chittanandam V R <[email protected]> Date: Sat, 16 May 2026 at 21:05 Subject: Fwd: Tamilnayagam - Divya Prabandham To: நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் - குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே *தமிழ்நாயகம் * நாம் ஒருவரை நினைக்கிறோம் என்றால் எதை நினைப்போம்? அவருடைய உடை, உருவம் ஒரு புறம் நினைவு வந்தாலும், பெரும்பாலும் அவருடைய குணங்களே நம் நினைவில் நிற்கும். நல்லவர், பொல்லாதவர், கோபக்காரர், சிரிக்க சிரிக்க பேசுவார், அறிவாளி என்றெல்லாம் அவரின் குணநலன்களே பெரும்பாலும் நம் மனதில் வந்து போகும். உடல் தோற்றம் மாறக் கூடியது. நம் இளவயது புகைப்படத்தைப் பார்த்தால் நமக்கே சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். "நானா அது, அப்படியா இருந்தேன்" என்ற எண்ணம் வரும். உடல் மாறும். குறுகிய காலத்தில் பெரிய அளவில் மாறும். குணம் மாறுவது இல்லை. நாம் இறைவன் என்று நினைப்பது அவரின் அவதாரங்களையே. நீல வண்ணம், கறுப்பு வண்ணம், குள்ள உருவம், சிங்கத் தலை என்றெல்லாம் நினைக்கிறோம். இறை என்பது நம் சிந்தனையில் சிக்காத ஒன்று என்பது சமயக் கருத்து. உருவம்; அரு உருவம்; அருவம். பின் அதையும் தாண்டிய ஒன்று. அது என்ன என்று நம் சிற்றறிவு அறியாது. "சிந்தையும் செல்லா சேச்சியன் காண்க" என்பார் மணிவாசகர். இங்கே, ஆழ்வார் சொல்கிறார், "நீ அவனை எப்படி எல்லாம் நினைக்கிறாயோ நினை. ஒரு தவறும் இல்லை. உருவங்களைத் தாண்டி, அவன் குணம் ஒன்று இருக்கிறது. அதையும் நினை" என்கிறார். பாடல்: *காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதிள் இலங்கை செற்ற* *ஏற்றினை, இமயம் மேய எழில் மணித் திரளை, இன்ப* *ஆற்றினை அமுதந் தன்னை அவுணன் ஆருயிரை யுண்ட* *கூற்றினை, குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே. *(திருகுறுந்தாண்டகம் - திருமங்கையாழ்வார்) பொருள்: காற்றினை, நதியை, நீரை, தீயை காவல் பொருந்திய மதில்களை உடைய இலங்கையை போரில் வென்ற ஏறு போன்றவனை, இமயம் போல் அழகிய மணி போன்றவனை, பேரின்ப வெள்ளத்தினை, அமுதத்தை, அரக்கர்களின் அருமையான உயிரை மாய்த்த கூற்றுவனைக் குணங்களைக் கொண்டு உள்ளமே நீ சொல், கூறுகின்ற வழி அதுதான். (ஏறு= ஆண் சிங்கம்,காளை) வழிபடும், நினைக்கும் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியில் வழிபடு என்கிறார். இந்தப் பாசுரத்தை விரித்து பொருள் சொல்லுவார்கள். சீதை என்ற ஜீவ ஆத்மா பிறவி என்ற பெருங்கடலால் சூழப்பட்டு ஞானேந்திரியங்கள், கன்மேந்த்ரியங்கள் என்ற பத்துத் தலை அரக்கனால் சிறை வைக்கப் பட்டு இருந்தது. இராம நாமத்தின் மூலம் அது விடுபட்டு இறைவனை அடைந்தது என்று விரித்தும் பொருள் சொல்லுவார்கள். ஆத்மா எவ்வளவுதான் முயன்றாலும், குரு/ஆச்சாரியன் (அனுமன்) அருள் இன்றியும், இறை நாமம் இன்றியும், அவன் அருள் இன்றியும் கடைந்தேற முடியாது என்றும் விரித்துச் சொல்லலாம். நம் அறிவும், அனுபவமும் விரிய விரிய இவற்றின் உட் பொருளும் விரிந்து கொண்டே போகும். *தமிழ்நாயகம் * ***************************************** *சித்தானந்தம் * -- You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to [email protected]. To view this discussion visit https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooRDpbShtAtqHoQZ650hV770K_b7bD0q1yrotF7ND%2BCrw%40mail.gmail.com.
