👃👃
Desikamani

On Sun 17 May, 2026, 08:06 Rajaram Krishnamurthy, <[email protected]>
wrote:

> Azhwar thoughts are different from truth where Vedas say Brahmam is
> NIRGUNA KR 17526
>
> ---------- Forwarded message ---------
> From: Chittanandam V R <[email protected]>
> Date: Sat, 16 May 2026 at 21:05
> Subject: Fwd: Tamilnayagam - Divya Prabandham
> To:
>
>
>
>
>
>
> நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருக்குறுந்தாண்டகம் - குணங்கொண்டு உள்ளம் கூறு நீ
> கூறுமாறே
>
> *தமிழ்நாயகம் *
>
>
> நாம் ஒருவரை நினைக்கிறோம்  என்றால் எதை நினைப்போம்? அவருடைய உடை, உருவம் ஒரு
> புறம் நினைவு வந்தாலும், பெரும்பாலும் அவருடைய குணங்களே நம் நினைவில்
> நிற்கும். நல்லவர், பொல்லாதவர், கோபக்காரர், சிரிக்க சிரிக்க பேசுவார்,
> அறிவாளி என்றெல்லாம் அவரின் குணநலன்களே பெரும்பாலும் நம் மனதில் வந்து போகும்.
>
> உடல் தோற்றம் மாறக் கூடியது. நம் இளவயது புகைப்படத்தைப்  பார்த்தால் நமக்கே
> சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். "நானா அது, அப்படியா இருந்தேன்"  என்ற
> எண்ணம் வரும். உடல் மாறும். குறுகிய காலத்தில் பெரிய அளவில் மாறும். குணம்
> மாறுவது இல்லை.
>
> நாம் இறைவன் என்று நினைப்பது அவரின் அவதாரங்களையே. நீல வண்ணம், கறுப்பு
> வண்ணம், குள்ள உருவம், சிங்கத் தலை என்றெல்லாம் நினைக்கிறோம். இறை என்பது நம்
> சிந்தனையில் சிக்காத ஒன்று என்பது சமயக் கருத்து.
>
> உருவம்; அரு உருவம்; அருவம். பின் அதையும் தாண்டிய ஒன்று. அது என்ன என்று
> நம் சிற்றறிவு அறியாது. "சிந்தையும் செல்லா சேச்சியன் காண்க" என்பார்
> மணிவாசகர். இங்கே, ஆழ்வார் சொல்கிறார்,
>
> "நீ அவனை எப்படி எல்லாம் நினைக்கிறாயோ நினை. ஒரு தவறும் இல்லை. உருவங்களைத்
> தாண்டி, அவன் குணம் ஒன்று இருக்கிறது. அதையும் நினை" என்கிறார்.
>
> பாடல்:
>
> *காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதிள் இலங்கை செற்ற*
>
> *ஏற்றினை, இமயம் மேய எழில் மணித் திரளை, இன்ப*
>
> *ஆற்றினை அமுதந் தன்னை அவுணன் ஆருயிரை யுண்ட*
>
> *கூற்றினை, குணங்கொண்டு உள்ளம் கூறு நீ கூறுமாறே. *(திருகுறுந்தாண்டகம் -
> திருமங்கையாழ்வார்)
>
>
> பொருள்: காற்றினை, நதியை, நீரை, தீயை காவல் பொருந்திய மதில்களை உடைய இலங்கையை
> போரில் வென்ற ஏறு போன்றவனை, இமயம் போல் அழகிய மணி போன்றவனை, பேரின்ப
> வெள்ளத்தினை, அமுதத்தை, அரக்கர்களின் அருமையான உயிரை மாய்த்த கூற்றுவனைக்
> குணங்களைக் கொண்டு உள்ளமே நீ சொல், கூறுகின்ற வழி அதுதான்.
>
> (ஏறு= ஆண் சிங்கம்,காளை)
>
> வழிபடும், நினைக்கும் ஒரு வழி இருக்கிறது. அந்த வழியில் வழிபடு என்கிறார். இந்தப்
> பாசுரத்தை விரித்து பொருள் சொல்லுவார்கள்.
>
> சீதை என்ற ஜீவ ஆத்மா பிறவி என்ற பெருங்கடலால் சூழப்பட்டு ஞானேந்திரியங்கள்,
> கன்மேந்த்ரியங்கள் என்ற பத்துத் தலை அரக்கனால் சிறை வைக்கப் பட்டு இருந்தது.
> இராம நாமத்தின் மூலம் அது விடுபட்டு இறைவனை அடைந்தது என்று விரித்தும்
> பொருள் சொல்லுவார்கள்.  ஆத்மா எவ்வளவுதான் முயன்றாலும், குரு/ஆச்சாரியன்
> (அனுமன்) அருள் இன்றியும், இறை நாமம் இன்றியும், அவன் அருள் இன்றியும்
> கடைந்தேற முடியாது என்றும் விரித்துச் சொல்லலாம்.
>
> நம் அறிவும், அனுபவமும் விரிய விரிய இவற்றின் உட் பொருளும் விரிந்து கொண்டே
> போகும்.
>
> *தமிழ்நாயகம் *
>
> *****************************************
>
> *சித்தானந்தம் *
>
>
> --
> You received this message because you are subscribed to the Google Groups
> "Thatha_Patty" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
> email to [email protected].
> To view this discussion visit
> https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooRDpbShtAtqHoQZ650hV770K_b7bD0q1yrotF7ND%2BCrw%40mail.gmail.com
> <https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZooRDpbShtAtqHoQZ650hV770K_b7bD0q1yrotF7ND%2BCrw%40mail.gmail.com?utm_medium=email&utm_source=footer>
> .
>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
To view this discussion visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAJiWWoLuAQnK2dZS7RmZr-6kmV-UBUEv3sGTeM%2BF0%3DtADq_YOg%40mail.gmail.com.

Reply via email to